58 வயதில் நிறைவேறிய முத்துக்காளையின் பல ஆண்டு கனவு! கண்ணீரில் பயணம்! இப்போ குடும்பமே மகிழ்ச்சி!
சென்னை: திரையுலகில், ஒரே ஒரு வசனத்தின் மூலம் ரசிகர்களைச் சிரிக்க வைத்தவர் நடிகர் முத்துக்காளை. 'செத்து செத்து விளையாடுவோமா' என்ற அவரது தனித்துவமான வசனமும், உடல்மொழியும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்டண்ட் கலைஞராகத் தொடங்கி, வடிவேலுவுடன் இணைந்துப் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் ஜொலித்த முத்துக்காளை, தற்போது தனது பல வருட கனவு நிறைவேறிவிட்டதாக ஆனந்தக் கண்ணீருடன் நெகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

முத்துக்காளையின் போராட்டமும் வைராக்கியமும்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சங்கப்பட்டியைச் சேர்ந்த முத்துக்காளை, ஆரம்பத்தில் இருந்தே வாழ்க்கையில் கடும் போராட்டங்களைச் சந்தித்து வந்தார். சிறுவயதில் இருந்தே தற்காப்புக் கலைகளில் ஒன்றான கராத்தேவில் தேர்ச்சி பெற்று, பிளாக் பெல்ட் வாங்கினார். பின்னர் ஒரு ஸ்டண்ட் கலைஞராகவே திரையுலகில் தன் பயணத்தைத் தொடங்கினார்.
வடிவேலுவின் வழிகாட்டுதல்
குடிப் பழக்கத்தால் தன்னுடைய வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டிருந்த இவரை, அதிலிருந்து மீட்டுக்கொண்டு வந்தது நடிகர் வடிவேலுவின் அறிவுரைகள் தான் என்று பலமுறை தனது பேட்டிகளில் முத்துக்காளை உருக்கத்துடன் கூறியுள்ளார். சினிமா கலைஞராக இருந்தாலும், படிப்பு மீது இருந்த வைராக்கியத்தால், 40 வயதுக்கு மேல் தொலைதூரக் கல்வி மூலம் படிக்கத் துவங்கி, தன்னுடைய 58ஆவது வயதில் சுமார் மூன்று முதுகலை பட்டங்களை பெற்றுள்ளார். அவரது இந்த விடாமுயற்சி பலருக்கும் முன்மாதிரியாகும்.
மகனின் கல்வி
நடிகர் முத்துக்காளை நடிப்பைத் தாண்டி, பிசினஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய ஒரே மகனை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பதை அவர் தனது குறிக்கோளாக வைத்துள்ளார். 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற அவருடைய மகனுக்கு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தன்னுடைய வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு அளித்தது மட்டும் இன்றி, படிப்புக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டது, முத்துக்காளைக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதமாகும்.
நிறைவேறிய சொந்த வீடு கனவு
சினிமாவில் ஒரு அங்கமாக இருந்தாலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு இல்லாமல் கஷ்டப்படுவது என்பது திரையுலகில் உள்ள பல கலைஞர்களின் கண்ணீர்க் கதையாகும். அந்த வலியை உணர்ந்த முத்துக்காளைக்கு, ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பல வருடக் கனவாக இருந்தது. அப்படிப்பட்ட இவரின் பல வருடக் கனவு தற்போது நிறைவேறி உள்ளது. மிகவும் கஷ்டப்பட்டு, தன்னுடைய சொந்த ஊரான ராஜபாளையம் அருகே உள்ள சங்கம்பட்டியில், சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ளார்.
அடுத்த இலக்கு
இந்தச் சந்தோஷத்தை ஆனந்தக் கண்ணீரோடு ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட அவர், "இதே போல் சென்னையில் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தன்னுடைய கனவு" என்றும், அது உங்கள் அனைவரின் ஆசியோடு நிறைவேறும் என்றும் கூறியுள்ளார்.
பல வருடப் போராட்டங்களுக்குப் பிறகு முத்துக்காளையின் இந்தக் கனவு நிறைவேறியது, திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் அவருக்குத் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications