எல்லாமே வதந்தி.. நெப்போலியன் மகனுக்கு இப்படிதான் பெண் பார்க்கப்பட்டது.. மயோபதி மருத்துவர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இது குறித்த விவாதங்களும் சர்ச்சைகளும் இணையத்தில் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நெப்போலியன் தொடங்கிய மயோபதி மருத்துவமனை டாக்டர் டேனியல் நெப்போலியன் மகனுக்கு எப்படி பெண் பார்க்கப்பட்டது என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.

நடிகராகவும், அரசியல் பிரமுகராகவும் இருந்து வந்த நெப்போலியன் இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கும் நிலையில் தன்னுடைய மூத்த மகனுக்கு திருமணம் செய்ய இருக்கும் செய்திதான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் நான்கு வயதில் இருக்கும்போது தசை சிதைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது அவருக்கு திருமணம் செய்வது சரி என்று ஒரு சிலர் கூறுகின்றனர், இன்னும் ஒரு சிலர் தனுஷின் திருமணம் செய்யும் அந்த பெண்ணின் வாழ்க்கை அழிந்துவிடும்... பணத்திற்காகத்தான் அந்த பெண் நெப்போலியன் மகனை திருமணம் செய்ய போகிறார் என்றும் கண்டபடி பேசி வருகிறார்கள்.

Television Napoleon

இந்த நிலையில் நெப்போலியன் திருநெல்வேலியில் தன்னுடைய மகனுக்கு சிகிச்சை அளித்ததை பார்த்து பல பேர் அதேபோல சிகிச்சை அளிக்க வேண்டும் என்று விரும்பியதால் நெப்போலியன் கட்டி பராமரித்து வரும் மயோபதி மருத்துவமனை டாக்டர் டேனியல் என்பவர் சமீபத்தில் நிமிர்ந்து நில் என்ற youtube சேனலில் நெப்போலியனின் மகனுக்கு திருமணம் எப்படி நிச்சயக்கப்பட்டது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதில் மருத்துவர் பேசுகையில், நெப்போலியன் சார் ஆரம்பத்தில் இருந்தே பலருக்கு இந்த மருத்துவமனை மூலமாக உதவி செய்து கொண்டிருக்கிறார். இந்த மருத்துவமனைக்கு பல நாடுகளில் இருந்தும் வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு கொடுக்கப்படும் சிகிச்சையால் இந்த நோய் சரியாகிவிடுமா என்று கேட்டால், அது நோய் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருத்துவமனைக்கு வரும் காலத்தை பொறுத்துதான் அவர்களுக்கு சரியாகி விடுகிறது.

television napoleon

குழந்தை பருவத்திலேயே இந்த நோய் தாக்கம் இருக்கிறது என்று கண்டறியப்பட்டு ஆரம்பத்திலேயே வந்தால் எங்களால் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். நெப்போலியன் அமெரிக்காவில் இருந்தாலும் இங்கு இந்தியா வரும்போதெல்லாம் இந்த மருத்துவமனைக்கு வந்து தன்னுடைய குழந்தைகளிடம் எவ்வளவு பாசமாக இருக்கிறாரோ அந்த அளவிற்கு இந்த மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகளிடமும் பாசமாக சில நாட்கள் இருந்து விட்டு தான் போவார்.

Television Napoleon

இந்த முறை தன்னுடைய மகனின் திருமணத்திற்காக வந்ததால் அவரால் அதிக நாட்கள் இங்கே இருக்க முடியவில்லை. ஒரு சில நாட்கள் மட்டும் வந்து பார்த்துவிட்டு போயிருக்கிறார். அவருடைய மகனுக்கு திருநெல்வேலி மாவட்டம் பக்கத்தில் உள்ள மூலக்கரைப்பட்டியில் தான் பெண் பார்க்கப்பட்டிருக்கிறது. நெப்போலியன் எங்களிடம் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னார்.

television napoleon

அப்போது நாங்கள் எங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக விசாரிக்க தொடங்கினோம். அதற்கு பிறகு ஒரு பிரபலமான மேட்ரிமோனியலில் நாங்கள் பதிவு செய்து வைத்திருந்தோம். அதன் மூலம் பல வரன்கள் வந்திருந்தது. நாங்களும் விசாரித்து கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் தான் நெப்போலியன் மாமா உறவு முறையில் உள்ள அக்ஷயா என்ற பெண் வீட்டின் வரன் வந்தது. அக்ஷயாவின் குடும்பத்தினரும் நெப்போலியன் குடும்பமும் ஏற்கனவே உறவினர்கள் என்பதால் அவர்களுக்குள் பரஸ்பரமாக பேசிக் கொண்டனர்.

பிறகு நெப்போலியன் நேரடியாக தன்னுடைய குடும்பத்தோடு வந்து மணப்பெண் வீட்டில் பேசினார். அதற்குப் பிறகு அந்தப் பெண்ணும் தனுஷும் பேசி அவர்களுக்கு விருப்பம் என்று தெரிந்த பிறகுதான் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று இருக்கிறது. ஒரு சிலர் தேவை இல்லாத விஷயங்களை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தசை சிதைவால் பாதிக்கப்பட்டவர்களால் திருமணம் செய்து மண வாழ்கையில் ஈடுபட முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இது உண்மையில் தனுஷை அதிகளவில் பாதிப்பு அடைய செய்யும் வார்த்தைகளாகத்தான் இருக்கிறது. தனுஷ் மட்டுமல்லாமல் இதுபோல தசை சிதைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது வருத்தத்தை ஏற்படுத்தும். அதனால் தசை சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாராலும் திருமணம் செய்ய முடியாது என்று ஒட்டுமொத்தமாக கூற முடியாது.

நோயின் தாக்கத்தினை பொறுத்து தான் அவர்களால் திருமணம் செய்ய முடியுமா? முடியாதா? என்று சொல்ல முடியும். இந்த நோய் பாதிப்பு அடைந்து 20 வயதில் இறந்தவர்களும் இருக்கிறார்கள், 60 வரை வயது வரைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளோடு வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்று அந்த பேட்டியில் மருத்துவர் டேனியல் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+