Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Naam Iruvar Namakku Iruvar: அச்சச்சோ தேவி இல்லையா.. மகா வந்தாச்சா.. உதட்டோர மச்சம் சூப்பர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாயன் தேவியாக கலக்கிக் கொண்டிருந்த நாம் இருவர் நமக்கு இருவர் மாயன் மகா வாக மாறியாச்சு.. வந்த வேகத்தில் மகா விட்ட அறையில் மாயன் கன்னம் தெறிச்சுப் போச்சுங்க.

ரசிகர்கள் எல்லோரும் ஆர்வமாக காத்துக்கிடந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் 27 ஆம் தேதியிலிருந்து ஆரம்பமாயிருக்கு. விஜய் டிவியில் நம்பர் ஒன் சீரியலாக இருந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நிறுத்திவிட்டு புதிய சீசன் 2 வாக புதிய கோணத்தில் எடுத்திருக்கிறார்களாம்.

இதைக்கேட்டு ரசிகர்கள் நடிகர்கள் ஷாக் ஆகி இருந்த நேரத்தில் நேற்று முதல் ஒளிபரப்பு ஆரம்பமாயிருக்கு. முதல் நாளே அமோகமான அமர்க்களம்தான்.. மாயன் கன்னம் பழுத்துப் போச்சுங்க.. மேட்டர் இருக்கு வாங்க.

2 செந்தில்

2 செந்தில்

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முதல் அத்தியாயத்தில் செந்தில் இரண்டு கேரக்டரில் நடித்திருப்பார், அண்ணன் டாக்டராகவும் , தம்பி மாயன் ஆகவும் நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ரக்ஷிதா நடித்திருப்பார்கள். இதில் மாயன்- தேவி கேரக்டர் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்து போனவை.. செம ஹிட்டும் கூட.

புதிய தொடர்

புதிய தொடர்

ஆனால் லாக்டோன் காரணமாக தொடர்ந்து இந்த சீரியலை ஒளிபரப்ப முடியாமல் ஆனது. மார்ச் 27ம் தேதியுடன் சீரியல் நின்றும் போனது. ரசிகர்கள் இந்த சீரியலை ரொம்பவும் மிஸ் செய்தார்கள். இணையதளத்தில் இதற்கான கமெண்ட்கள் தான் அதிகமாக குவிந்தது. இந்த நிலையில் தொடர்ந்து லாக்டோன் காரணமாக இந்த சீரியலை தொடர முடியாமல் போன நிலையில் அதை நிறுத்தி விட்டு தற்போது புதிய அத்தியாயத்துடன் களம் இறங்கியுள்ளனர்.

புது நாயகிகள் வருகை

புது நாயகிகள் வருகை

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் படப்பிடிப்பு ஆரம்பித்தது முதல் இதில் இருந்த இரண்டு ஹீரோயின்களும் இந்த 2ம் பாகத்தில் இல்லை. புதிதாக சரவணன் மீனாட்சி புகழ் ரட்சிதா அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார். புது நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் நேற்று 27ஆம் தேதி முதல் தொடங்கியது. கதை, கேரக்டர்களும் டோட்டலாக மாற்றம் செய்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட புதிய சீரியல் போல தொடங்கியுள்ளது.

சூப்பர் ரட்சிதா

சூப்பர் ரட்சிதா

மாயன் மட்டும் அதே பழைய கெத்தோடு புது காஸ்ட்யூமோடு களம் கண்டுள்ளார். ரட்சிதா டீச்சராக வருகிறார். அவரது கேரக்டர் பெயர் மகா.. அதாவது தேவி போய் மகாவை நுழைத்துள்ளனர். மகாவின் கேரக்டர் எப்படி என்பதை அவரது முதல் அறிமுகமே சொல்லி விடுகிறது. நியாயம்னா நியாயம்தான்.. அது பெத்த அம்மாவாகவே இருந்தாலும் நான் அப்படித்தான் என்று நறுக்கு தெரித்தாற் போல காட்டி விடுகிறார் மகா.

 உதட்டோர மச்சம்

உதட்டோர மச்சம்

சரவணன் மீனாட்சியில் செந்திலுடன் ஜோடி போட்டுக் கலக்கிய அனுபவம் ரட்சிதாவுக்கு இருப்பதால் இந்த சீரியலிலும் அவர்களது கெமிஸ்ட்ரி கலக்கும் என்பதை அடுத்த சில சீன்களிலேயே செந்திலும் ரட்சிதாவும் காட்டியிருக்கின்றனர். சும்மா சொல்லக் கூடாது.. அள்ளி விட்டார்கள் முதல் எபிசோடிலேயே இருவரும். அந்த அளவுக்கு பக்கா பெர்பெக்ஷன் நடிப்பில் இருவரும் காட்டியுள்ளனர். இந்த தொடரும் சரவணன் மீனாட்சி போல ஹிட்டடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சூப்பர் அறிமுகம்

சூப்பர் அறிமுகம்

மாயன் அறிமுகக் காட்சியே அமர்க்களமாகியிருக்கிறது. ஒரு வீட்டுக்குள்ளிருந்து சில ரவுடிகள் பாத்திர பண்டங்களை வெளிய தூக்கி வீசி கொண்டிருக்கிறார்கள். அப்போ சினிமா பட பாணியில் அந்த வீட்டுக்காரர் எங்களை காப்பாற்ற யாரும் வர மாட்டாங்களா கடவுளே என்று கையெடுத்துக் கும்பிட்டார். அப்பதான் நம்ம மாயன் ஹீரோ மாதிரி என்ட்ரி ஆகிறார். அதைப் பார்த்து அந்த வீட்டுக்காரரும் அவரை காப்பாற்ற கடவுள் வந்து விட்டார் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்.

ஜில்லா பட சீன்

ஜில்லா பட சீன்

வந்த மாயனும், அந்த ரவுடிகளை அடித்து துவம்சம் பண்ணுகிறார். உங்க வீட்டை நான் இருக்கும்போது வேற யாரும் காலி பண்ண முடியாது.. என்று அவர் சொல்லச் சொல்ல மகிழ்ச்சி அடைகிறார் வீட்டுக்காரர். ஆனால்.. நான் தான் காலி பண்ணுவேன் அப்படின்னு சொல்லி மாயன் டிவிஸ்ட் கொடுக்கும்போது உங்களுக்கு ஜில்லா பட விஜய் ஞாபகத்துக்கு வந்தால் அதுக்கு கம்பெனி பொறுப்பு கிடையாது... கதை வசனத்தை எழுதியவர்தான் பொறுப்பு.

மாயனை அடக்கும் மகா

மாயனை அடக்கும் மகா

அதை பார்த்துக்கொண்டிருந்த பக்கத்துல இருக்கிற பக்கத்து வீட்டுக்காரர் அந்த வீட்டுக்காரரிடம் நீ எலிக்கு பயந்து யானை கிட்ட போய் மாட்டட்டேன்னு சொல்லி, இவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே ஒரு ஆள் தான் இருக்குனு சொல்லி மகாவுக்கு போன் போடுகிறார். மகாவும் சினிமா நாயகிகள் போல ஸ்கூட்டியில் (சைடில் பப்பிள் எல்லாம் பறக்குதுங்க.. நல்லாதான் இருக்கு). ] யாரடி நீ மோகினி நயன்தாரா மாதிரி ஸ்லோமோஷனில் அழகாக வந்து இறங்குகிறார்.

மகா விட்ட பளார்

மகா விட்ட பளார்

இதை கவனிக்காத மாயன் கெத்தாக உட்கார்ந்திருக்க.. மகா அமைதியாக அவர் எதிரே வந்து நிற்கிறார். வீராப்பாக எழுந்திருக்கிறார் மாயன்.. அப்போது யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்குது.. பளார்னு மாயன் கன்னத்தில் மகா விட்டார் பாருங்க ஒரு பளார்.. ஆத்தாடி.. அப்படியே சுருண்டு போகும் மாயன்.. சத்தம் காட்டாமல் எல்லா சாமானையும் எடுத்து வீட்டுக்குள் வைத்து விட்டு எப்பூடி என்று கெத்து காட்டுகிறார்.. நினைத்ததை சாதித்த பெண் சிங்கம் மகா, இனி உன்னை இந்தப் பக்கம் பார்க்க கூடாது என்று சொல்லி கம்பீரமாக கிளம்பிச் செல்கிறார்.

செம கெத்துதான்

செம கெத்துதான்

மாயனும் தனது கெத்து குறையாமல், அதாவது மீசையில் மண் ஒட்டலையாம்.. கிளம்ப எத்தனிக்க போலீஸ் ஜீப் வந்து அவரை கூட்டிச் செல்கிறது. போலீஸ் ஸ்டேஷனிலும் அவரது அலப்பறை தொடர்கிறது.. அங்கும் ஒரு டிவிஸ்ட் வருகிறது.. இப்படியாக முதல் எபிசோட் முடிகிறது. மகா யார்.. மாயன் ஏன் பயப்படுகிறான்.. ஸ்டேஷனில் தனது தந்தையைச் சந்தித்தும் கூட அவரை முறைப்பது ஏன்.. இப்படி பல கேள்விகளை முதல் எபிசோடில் எடுத்து வைத்துள்ளனர்.

ரட்சிதா ரொம்ப அழகு

ரட்சிதா ரொம்ப அழகு

போகப் போக முடிச்சுகளை அவிழ்ப்பார்கள் .. அதற்குள் மறுபடியும் லாக்டோன் வராம இருக்கணும் சாமியோவ்! ஒரு முக்கியமான விஷயம்.. சரவணன் மீனாட்சியை விட இந்த தொடரில் ரட்சிதா ரொம்ப அழகாக காட்சி தருகிறார்.. பார்க்க அத்தனை அம்சமாக எடுப்பாக இருக்கிறார் சேலையில். சரவணன் மீனாட்சியை விட இந்த தொடரை செந்திலும் - ரட்சிதாவும் சேர்ந்து தூக்கிச் சென்று விடுவார்கள் என்று தெரிகிறது. கிட்டத்தட்ட முதல் பார்ட்டிலேயே தேவி கேரக்டரை மறக்க வைத்து விட்டார் மகா.. சூப்பர்தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+