“நாயகி" சீரியல் தேவன் குமார் காலமானார்.. ரஜினி முதல் தனுஷ் வரை.. “இந்த" படங்களில் நடிச்சிருக்கிறாரே
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் வில்லனாக நடித்த நடிகர் தேவன் குமார் நேற்று உடல் நிலை குறைபாட்டால் காலமாகி இருக்கிறார். அவருக்கு சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு திரைப்படத்தின் வெற்றிக்காக உழைப்பவர்கள் முகம் மக்கள் யாருக்கும் தெரிய வருவது கிடையாது. கேமரா முன்னாடி நடிக்கும் நடிகர்கள் மட்டும்தான் மக்களுக்கு பரிச்சயமானவர்களாக இருக்கிறார்கள். திரைப்படத்தில் டான்ஸ் சொல்லிக் கொடுப்பவர்களாக இருந்தாலும் சரி, சண்டை காட்சிகளில் ஈடுபடுபவர்களாக இருந்தாலும் சரி யார் என்று அவர்களுடைய முகம் தெரியாமல் இருக்கிறது.

அந்த வகையில் சண்டைக் காட்சிகளில் உயிர் கொடுக்கும் பின்னணி குரல்கள் பலர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்பது பலருக்கும் தெரியாது. அந்த மாதிரி தான் முகமே தெரியாமல் பிரபலம் அடைந்தவர் தேவன் குமார். இவர் நேற்று (மே 28) உடல்நிலை குறைபாட்டால் காலமானார். அவருடைய இறுதி சடங்குகள் இன்று 4 மணிக்கு ஏவிஎம் மயானத்தில் நடைபெற உள்ளது.
கடந்த 30 வருஷங்களாகவே ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு போன்ற பல முன்னணி நடிகர்களின் சண்டைக் காட்சிகளில் பின்னணி குரல் கொடுத்து வந்த தேவன்குமார் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு நெருங்கிய நண்பராம். விஜயகாந்தின் பல படங்களின் சண்டைக் காட்சிகளில் தேவன் குமார் தான் குரல் கொடுத்திருக்கிறார்.

ஆனால் சினிமாவில் இவருடைய முகம் பலருக்கும் ஆரம்ப காலகட்டத்தில் தெரியாமல் இருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி என்னும் சீரியல் மூலமாகத்தான் இவர் சின்னத்திரையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். அந்த சீரியலில் வில்லன் கேரக்டரில் இவர் தன் நடிப்பு பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

அதற்குப் பிறகு முன்னணி இயக்குனராக இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கார்த்தியின் கைதி, விஜயின் மாஸ்டர் போன்ற படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் தேவன் குமார் நடித்திருக்கிறார். ஆனால் நேற்று உடல்நிலை குறைபாட்டால் காலமான நிலையில் அவருக்கு பல பிரபலங்களும் தொடர்ச்சியாக தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications