நமக்கு கவர்ச்சி செட்டாகாது.. சேலையே போதும்.. ஜொலிக்கும் நட்சத்திரா!
சென்னை: தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரையிலும் வெள்ளிக் திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரா நாகேஷ் இணையதளம் மூலமாக இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இவருடைய நேர்த்தியான மற்றும் அழகான புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வேறு சில நடிகைகள் கிளாமர் காட்டி வைரலாக பரவி வந்துகொண்டிருக்கும் போது இவர் சேலைகளில் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் ஜொலித்து வருகிறார்.
இவர் சன் டிவியில் 2014ஆம் ஆண்டு வானவில் நிகழ்ச்சி மூலமாக தொகுப்பாளராக அறிமுகமானார் .அதனைத் தொடர்ந்து சன் சிங்கர் ஜோடி நம்பர் ஒன் மற்றும் பல விருதுகளை வழங்கும் நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

பேச்சும் அழகும்
நட்சத்திராவின் மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சும் மற்றும் அழகான முகமும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போயிருந்தது. இந்த நிலையில் தான் அவருக்கு வாணி ராணி சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் இவர் ருத்ரா கேரக்டரில் வில்லியாக நடித்து இருப்பார் .அழகாக இருந்ததால் இவருடைய வில்லத்தனம் ரசிகர்களிடம் வேகமாக ரீச் ஆனது.

சினிமாவில் ஜொலிக்கவில்லை
பல ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்தாலும் பலர் ரசித்தனர். இதனால் ஹிட்டடித்தார். சீரியல்களை தொடர்ந்து இவர் குறும் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில்தான் வாயை மூடி பேசவும் இரும்புக்குதிரை நம்பியார் இந்திரஜித் இப்படி பல படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. ரசிகர்களிடம் ரசிக்கப்பட்டும் அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை அதனால் மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

குஷ்புவுடன் சீரியல்
திரைப்படங்களை தொடர்ந்து இவர் லட்சுமி ஸ்டோர் என்னும் சீரியலில் குஷ்புவுடன் நடித்திருப்பார். இந்த சீரியலுக்கு பெரும் வரவேற்பும் அதிகமான ரசிகர்கள் பட்டாளமும் கிடைத்தது. இவருக்கு இந்த சீரியலில் இவர் நடித்தற்கு விருதுகளை வாங்கியிருக்கிறார். அதைவிடவும் இவர் இன்ஸ்டாகிராமில் இவருடைய ரசிகர்கள் இந்த சீரியலை பற்றி பல போட்டோக்களையும் வீடியோக்களையும் ஃபேன்ஸ் பேஜ்களில் பரப்பி வந்தனர் .

இன்ஸ்டா ஆர்வம்
அது இவருக்கு ரொம்பவும் பிடித்தமானதாக இருந்தது. சீரியலில் கிடைத்த வெற்றியை விடவும் இணையதளத்தில் இவருக்கு கிடைத்த வெற்றிதான் ரொம்பவும் பிடித்ததாம் என்று கூறியிருக்கிறார். தற்போது இவர் நாயகி சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இரண்டாம் பாகம் எடுக்க போகிறார்கள் என்று சொன்னதும் இதில் இவர் அறிமுகமாகும் போதே பல ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

போஸ்ட்களுக்கு ஆதரவு
தற்போது இவர் இதில் செமையாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேரம் கிடைக்கும்போது இன்ஸ்டாகிராமிலும் சில போட்டோக்கள் போடுவதற்கு தவறுவதில்லையாம். இவருடைய போஸ்ட்களை பார்த்ததும் ரசிகர்கள் உருகி உருகி கமெண்டுகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சில ரசிகர்கள் இவரிடம் நீங்கள் தொகுப்பாளராகவும் நடிகையாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு விளம்பரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தால் எந்த மாதிரி விளம்பரங்களில் நடிப்பீர்கள் என்றும் எதை என்கிரேஜ் பண்ணுவீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

பெப்பர் ஸ்பிரே ஜாக்கிரதை
அதற்கு இவர் நான் ஆர்கானிக் பொருள்களையும் பெப்பர் ஸ்ப்ரேக்கும் தான் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார் .இவரது பேக்கில் எப்பவும் பெப்பர் ஸ்பிரே இருக்குமாம் .அது மட்டுமல்லாமல் அதை கவனமுடன் அடிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் .ஒருமுறை இவர் ரூமில் இருக்கும் போது அதைச் செக் பண்ணி பார்ப்பதற்காக தூரமாக வைத்து அழுத்தி இருக்கிறார் .ஆனால் அந்த நெடி கொஞ்ச நேரத்திற்கு இவரை உண்டு இல்லை என்று பண்ணி விட்டதாம்.

தாத்தாவின் காதல்
தன்னுடைய வாழ்க்கையிலேயே இவருக்கு வந்த லவ் ப்ரொபோஸ்களில் ரொம்பவும் எரிச்சலான மற்றும் என்ன பண்ணுவது என்றே தெரியாத புரோபோசல் வந்திருக்கிறதாம். இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஒருவர் தாத்தா ஐடியில் இருந்து இவருடன் பேசி இருக்கிறார் .இவரும் ஹாய் என்று சொல்லியிருக்கிறார் அதனை தொடர்ந்து அவர் உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் உங்கள் நடிப்பு நான் ரொம்பவும் ரசிக்கிறேன் என்றெல்லாம் பேசி இருக்கிறார் .

பாடாய்ப்படுத்திய தாத்தா
இவரும் நம்முடைய ரசிகர் தானே என்று பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒருநாள் நான் உங்களை காதலிக்கிறேன் திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று எல்லாம் ஏக வசனத்திற்கும் லவ் ப்ரோபோசல் பண்ணியிருக்கிறாராம். இதை கேட்டதும் இவர் ஷாக்காகி அந்த ஐடியை பிளாக் பண்ணி விட்டாராம். அந்த ஐடியில் இருந்த போட்டோவுக்கும் அதில் வந்த மெசேஜ்க்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் இருந்ததாம்.

சிரிப்புக்கு அடிமை
இப்போது யாராவது உங்களுக்கு வந்த லவ் ப்ரொபோஸ் பற்றி கேள்வி கேட்டால் அந்த தாத்தா பேசியது தான் நினைவுக்கு வருகிறதாம். என்னதான் இருந்தாலும் இவர் இணையதளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்படும் அழகான தேவதையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறா.ர் இவருக்கு பிளஸ் பாயிண்ட் இவரது ஸ்மைல் தானாம். இந்தச் சிரிப்புக்கு பல ரசிகர்கள் அடிமையாக இருக்கிறார்களாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications