நமிதா வெளியேற உண்மையான காரணம் இதுதான்..இவ்வளவு நாள் இதை வெளியே சொல்லலையே!!??
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமிதா மாரிமுத்து வெளியேறியதற்கு காரணம் வெளியே தெரிந்துள்ளது.
பலவிதமான கருத்துக்களை தெரிவித்து கொண்டிருக்கும் போது அவர் உண்மையான காரணத்தை கூறி இருக்கிறார்.
இது தெரியாமல் எதையோ நினைத்து விட்டோமே என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முதல் திருநங்கை அறிமுகம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 வது சீசனில் தற்போது 50 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் பல செயல்கள் புதுமையாக செய்யப்பட்டிருந்தது. அதில் ஒன்றுதான் திருநங்கையான நமிதா மாரிமுத்து முதல்முறையாக இந்த சீசனில் அறிமுகமாகி இருந்தார். இதுவரைக்கும் ஒளிபரப்பான எந்த ஒரு சீசனிலும் ஒரு திருநங்கை கலந்து கொள்ளவில்லை. ஆனால் முதல்முறையாக இந்த சீசனில் ஒரு போட்டியாளராக இவர் அறிமுகமானதும் ரசிகர்களின் மத்தியில் நல்ல விழிப்புணர்வும், திருநங்கைகள் குறித்த மதிப்பு உயரும் என பலரும் கருத்து தெரிவித்து கொண்டிருந்தனர்.

முதல் வெளியேற்றம்
ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சி கலகலப்பாக இருந்தது .இதில் போட்டியாளர்களில் அதிக நாட்கள் யார் இருப்பார்கள் என்று ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். எப்படியும் கடைசி வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் நமிதா இருப்பார் என்று தான் பலர் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் இவருடைய வெளியேற்றம் பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் என்ன காரணத்தால் இவர் வெளியே சென்றார் என்பது கூட தெரியாமல் இருந்ததால் பலரும் பலவிதமான கருத்துக்களை பரப்பி வந்தனர்.

கலங்க வைத்த சோகக்கதை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த சோகக் கதைகளை கூறி அனைவரையும் கண்கலங்க வைத்துக்கொண்டிருந்தனர். அதில் போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கவர்ந்த கதை நமிதாவின் கதையாகத் தான் இருந்தது. இவருடைய கதையை கேட்டு பலரும் பீல் பண்ணி வந்தனர். அதுமட்டுமல்லாமல் இவரைப் போல இருக்கும் இவருடைய சமூகத்தைச் சார்ந்தவர்களும் தங்களுக்கு இனி வாழ்க்கையில் பெரிய மாற்றம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

திடீர் மயக்கம்
யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல் வாரத்தில் இவர் வெளியேறியதால் பலர் இவருக்கும் தாமரைக்கும் ஏற்கனவே பிரச்சனை நடந்ததால், எதோ ஒரு அசம்பாவிதம் நடந்ததால் இவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்கள் என்றும் மற்றும் ஒரு சிலர் இவருக்கு கொராணா அதனால்தான் இவர் வெளியேறி விட்டார் என்றெல்லாம் பல்வேறு வதந்திகளை கிளப்பி கொண்டிருந்தனர். ஆனால் உண்மையில் இவர் தீவிரமாக சாமி கும்பிடுவதில் ஆர்வமாக இருப்பதால் அதற்காக சாப்பாடு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்ததால்தான் மயக்கம் போட்டு விழுந்து விட்டதாகவும், அதனால் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் மருத்துவமனைக்கு வந்து இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் அவருக்கு சுயநினைவு வந்தது என்று கூறியிருக்கிறார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications