நந்தினி சீரியல் ஹீரோ இப்படிப்பட்டவரா? இப்போ மனைவியின் கம்ப்ளைன்டால் தலைமறைவு?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகர் ராகுல் ரவி மீது அவருடைய மனைவி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பதால் ராகுல் ரவி தலைமறைவாக இருக்கிறார் என்ற செய்திகள் பரவி வருகிறது.
ராகுல் ரவி கடந்த 2020 ஆம் ஆண்டு லட்சுமி நாயர் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து இருந்தார்.
இந்த நிலையில் ராகுல் ரவி மீது லட்சுமி நாயர் ராகுல் ரவிக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு வைத்து போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறாராம்.

சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி அதில் நடிக்கும் நடிகர்களை அவர்களுக்கு கேரக்டர் படி தான் இருப்பார்கள் என்று ரசிகர்கள் மனதில் பதிந்து விடுகிறார்கள். இந்த நிலையில் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நந்தினி சீரியல் கதாநாயகன் பற்றி பரவி வரும் செய்தியை கேட்டதும் சின்னத்திரை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
இவரா இப்படி என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது சீரியலில் கதாநாயகனாக நடித்த ராகுல் ரவி நிஜத்தில் வில்லன் வேலையை செய்திருக்கிறார் என்பது பலருடைய கமெண்டாக இருக்கிறது. அதாவது நந்தினி சீரியலில் நடித்து ராகுல் ரவி தமிழ் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அதற்கு பிறகு அவர் அவர் கண்ணான கண்ணே சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இப்போது தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் தெலுங்கு நடிகர் பாலையா நடிப்பில் வெளியான பகவத்கேசரி என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் ராகுல் ரவி மீது அவருடைய மனைவி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பதாகவும் அதற்கு ராகுல் ரவி முன் ஜாமின் வாங்கி இருந்ததாகவும் அந்த பெயில் ஆர்டர் இப்போது கேன்சல் ஆகிவிட்டதால் ராகுல் ரவி தலைமறைவாக இருக்கிறார் என்றும் செய்திகள் பரவி வருகிறது.
இந்த நிலையில் ராகுல் ரவி 2020 ஆம் ஆண்டு காதலித்து வந்த லட்சுமி நாராயணன் என்ற பேஷன் டிசைனரை திருமணம் செய்திருந்தார். இவர்களுடைய திருமணத்திற்கு சின்னத்திரை, வெள்ளித்திரை ரசிகர்கள் நடிகைகள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். அந்த நேரத்தில் தன்னுடைய திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவை விட்டிருந்தார்.

அப்போது கூட திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன்பு ராகுல் ரவி, நான் அவளை முதன்முதலாக சந்தித்தபோது அது மற்றொரு சாதாரண நாள். பின்னர் நான் நன்றாக உணர்ந்தேன். அதன்பிறகு அவளின் அழகான புன்னகையோடும் பேச்சுக்களோடும் ஒவ்வொரு நாளுமே எனக்கு சிறப்பான நாளாக இருந்தது. அப்போதுதான் என் வாழ்வில் வந்திருப்பவர் வெறும் பெண் அல்ல என்பதே உணர்ந்தேன்.. அவள்தான் என் உயிர். எங்களது பெரிய நாளுக்காக காத்திருக்கிறேன் என்றும் பதிவிட்டு இருந்தார்.
ஆனால் இப்போது அந்த பதிவுகளை எல்லாம் ராகுல் ரவி டெலிட் செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருமணம் ஆகிய மூன்று ஆண்டுகளுக்குள் இவர்களுடைய திருமண வாழ்க்கை பிரிவு குறித்து அவருடைய நெருங்கிய நட்பு வட்டாரங்கள் சில தகவல்களை பிரபல சேனல் ஒன்றுக்கு கூறி இருக்கிறார்கள். அதாவது ராகுல் ரவி தன்னுடைய நண்பர்களிடம் தனக்கு காதல் திருமணம் என்று தான் சொல்லி இருக்கிறார்.
தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் டிசைனர் என்றும் கூறியிருக்கிறார். சமீப காலமாக தெலுங்கு சினிமாவில் இவருக்கு நல்ல வாய்ப்பு கிடைக்குது என்று தான் அந்த பக்கம் போயிருக்கிறார். கல்யாணமான புதியதில் ராகுல் ரவியும் லட்சுமியும் நன்றாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த சில மாதங்களுக்குள்ளேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது என்று பேச்சு அடிபட்டு இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications