விஜே வைஷுவின் பாலியல் குற்றச்சாட்டு.. மனைவியோடு வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்த நாஞ்சில் விஜயன்
சென்னை: விஜய் டிவியில் தனது நகைச்சுவைத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் நாஞ்சில் விஜயன், சமீப காலமாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கைச் சர்ச்சைகளால் பேசுபொருளாகி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருநங்கை வி.ஜே வைஷு அளித்த புகார், அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நாஞ்சில் விஜயனும் அவரது மனைவியும் இணைந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, வி.ஜே வைஷுவும் ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவை வெளியிட்டு, இந்த விவகாரத்திற்குப் புதிய திருப்பத்தைக் கொடுத்துள்ளார்.

நாஞ்சில் விஜயன் சர்ச்சைகள்
நாஞ்சில் விஜயன், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சித் துறைக்கு அறிமுகமானவர். அவரது இயல்பான நகைச்சுவைப் பேச்சும், மிமிக்ரி திறமையும், அவரை விரைவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வைத்தன. விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளிலும், சில திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர், டிக் டாக் பிரபலம் ஒருவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என, அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவருக்கு மரியம் என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
வி.ஜே வைஷுவின் குற்றச்சாட்டுகள்
சமீபத்தில், வி.ஜே வைஷு, நாஞ்சில் விஜயன் மீது அடுக்கடுக்கான புகார்களைப் பல நேர்காணல்களில் முன்வைத்தார். "நாங்கள் இருவரும் ஆறு வருடங்களுக்கும் மேலாகக் காதலித்தோம். கணவன் மனைவி போல ஒன்றாக வாழ்ந்தோம். அவர் திருமணம் செய்துகொண்ட பிறகும், என்னுடன் உறவில் இருந்தார். ஆனால், அவருக்குக் குழந்தை பிறந்த பிறகு, என்னை யார் என்றே தெரியாது எனத் துண்டித்துவிட்டார்" என்று வைஷு குற்றம் சாட்டியிருந்தார். இந்தப் புகார், சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
நாஞ்சில் விஜயன் மற்றும் மனைவி பதிலடி
இந்த நிலையில், நாஞ்சில் விஜயன் தனது மனைவி மரியமுடன் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரது மனைவி, "வைஷு நீங்க இப்படிப் பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவில்லை. நாங்க சந்தோஷமா இருப்பது உங்களுக்குப் பிடிக்கலையா? அவர் இப்பதான் ஒரு பெரிய பிரச்சனையில் இருந்து மீண்டு வராரு. இந்த நேரத்தில் இப்படிப் பண்ணா என்ன ஆகுறதுன்னு சொல்லுங்க பார்க்கலாம். எங்களால் வெளியில தலைகாட்ட முடியல. நீங்க ஒரு செகண்டில் இப்படிப் பண்ணிட்டுப் போயிட்டீங்க. அவருக்கு இதனால ஏதாவது ஆகிடுச்சுன்னா என்ன பண்றது? அவருக்கு எதுவும் கிடைக்கக்கூடாது, எங்களுக்குள்ள பிரச்சனை வந்துட்டே இருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்களா? தயவுசெய்து இனிமேல் இப்படிப் பண்ணாதீங்க" என்று கண்ணீருடன் பேசியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய நாஞ்சில் விஜயன், "நீங்க ஏன் இப்படி பண்றீங்கன்னு என்னால யோசிக்க கூட முடியல. ஏன்னா, நான் வாழ்க்கையில் ஒரு நல்ல பெயரைப் பெறுவதற்கு ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறேன். என்னுடைய கடின உழைப்பால்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். ஏற்கனவே ஒரு பெரிய பிரச்சனையைத் தெரியாத்தனமா பண்ணி, அதில் இருந்து மீண்டு வந்துதான் ஏதோ ஒண்ணு இப்போ பண்ணிக்கிட்டு இருக்கிறேன். இப்போ எனக்கு நல்ல மனைவி, குடும்பம், என்று வாழ்ந்துட்டு இருக்கும்போது, நீங்க இந்த மாதிரி ஒரு பிரச்சனையைத் தொடர்ந்து பண்ணிட்டு இருக்கீங்க. இந்தப் பிரச்சனையை நீங்க எதுக்காகப் பண்றீங்கன்னு அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும்" என்று வேதனையுடன் பேசியுள்ளார்.

வைஷுவின் இன்ஸ்டாகிராம் பதிவு
இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்தில், வி.ஜே வைஷு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விஜய் டிவியின் தனம் சீரியலில் அவர் நடிக்கும் ஒரு சோகமான காட்சிப் பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "கண்ணீரில் ஒரு புனிதத்தன்மை இருக்கிறது. அவை பலவீனத்தின் அடையாளம் அல்ல, மாறாகப் பத்தாயிரம் மொழிகளை விடச் சிறப்பாகப் பேசுகின்றன. அவை மிகுந்த துக்கம், ஆழ்ந்த வருத்தம் மற்றும் சொல்ல முடியாத அன்பின் தூதர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தப் பதிவின் கீழே தனது பெயர் மற்றும் நாஞ்சில் விஜயனின் பெயரை ஹேஷ்டேக்குகளாகக் கொடுத்துள்ளார்.
நாஞ்சில் விஜயன் - வைஷு இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரங்கள் அவர்களுக்குத்தான் தெரியும் என்றாலும், இந்த மாறி வரும் வீடியோக்களும், பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன.












Click it and Unblock the Notifications