கையில் குழந்தையை வாங்கியதும் கதறி அழுத நாஞ்சில் விஜயன்.. என் பல நாள் வலி! நெகிழ்ச்சியாக வெளியிட்ட பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம் அடைந்த நாஞ்சில் விஜயன் மனைவிக்கு இன்று மே 12ஆம் தேதி குழந்தை பிறந்திருக்கிறது. மருத்துவமனையில் குழந்தையை கையில் வாங்கியதும் கதறி அழுத வீடியோவை நாஞ்சில் விஜயன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது, சிரிச்சா போச்சு, கலக்கப்போவது யாரு போன்று பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பலரையும் சிரிக்க வைத்த நாஞ்சில் விஜயன் இன்று கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அது ஆனந்த கண்ணீர் தான். நாஞ்சில் விஜயனுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு மரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்திற்கு பிறகு ஒரு வருடமாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் எல்லோரும் குழந்தை இல்லையா என்று கேள்விகள் கேட்பதாக பேட்டிகளில் இருவரும் ஃபீல் பண்ணி பேசி இருக்கிறார்கள்.

குழந்தை ஏக்கம்
ஆனால் அவர்களுடைய வாழ்க்கையில் வசந்தம் வீசும் காலம் தொடங்கி இருக்கிறது. அதாவது கடந்த சில மாதங்களுக்குள் முன்பு மரியா கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். அப்போது ஒவ்வொரு மாதமும் இந்த மாதம் குழந்தை இருக்குமா? என்ற ஏக்கத்தோடு காத்திருந்த கேள்விக்கு விடை எனக்கு இப்போது கிடைத்திருக்கிறது. பல நாள் ஆசை எனக்கு நிறைவேறி இருக்கிறது என்று கண் கலங்க பேசி இருந்தார்.
பலருடைய கேள்வி
நாஞ்சில் விஜயன் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவியோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த சில மாதங்களிலேயே இவர்கள் கர்ப்பத்தை அறிவித்திருந்தார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இவர்களின் வளைகாப்பு பங்க்ஷன் கிராண்டாக நடைபெற்றது. அதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கர்ப்ப கால போட்டோ சூட்
அப்போது எடுத்த புகைப்படங்களும் சோசியல் மீடியா பக்கங்களில் ட்ரெண்டாகி இருந்தது. அதுபோல நாஞ்சில் விஜயன் மற்றும் அவருடைய மனைவி இருவருமே அதிகமாக கர்ப்பகால போட்டோ சூட் எடுத்திருந்தனர்.இந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் புதிய உறவுக்காக காத்திருக்கிறோம் என்று ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதை தொடர்ந்து இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாஞ்சில் விஜயன் தன் குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சி செய்தியை அறிவித்திருக்கிறார். ஆனால் அந்த பதிவில் எந்த குழந்தை என்பதை அவர் குறிப்பிடவில்லை.
நாஞ்சில் விஜயன் குழந்தை
அதே நேரத்தில் தன்னுடைய குழந்தையை கையில் வாங்கியதும் நாஞ்சில் விஜயன் அழுது இருக்கிறார். பிறகு டாக்டர்களுக்கு நன்றி கூறி இருக்கிறார். அங்கிருப்பவர்கள் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். குழந்தை குறித்து அவர் வெளியிட்ட பதிவில். "சித்திரை முழு நிலவில் என்னை அப்பா என்று அழைப்பதற்கு இந்த புவியில் புதியதாய் ஒரு உயிர் பிறந்து விட்டது. வாழ்க்கையில் நான் பட்ட வேதனைகள் எத்தனை எத்தனையோ அத்தனைக்கும் உந்தன் முகம் பார்க்கும் பொழுது மறந்து போனது என் தங்கமே.. இனிமேல் நீதான் என் உலகம்" என்று கூறியிருக்கிறார்.
பெண் குழந்தை பிறந்தது
அதே நேரத்தில் இந்த பதிவில் பெண் குழந்தையா? ஆண் குழந்தையா? என்று பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு நடிகர் ரோபோ சங்கரின் மருமகனான கார்த்திக் "மருமகள்" பிறந்திருக்கிறார் என்று அறிவித்திருக்கிறார். இதனால் நாஞ்சில் விஜயனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று தெரிகிறது. புதியதாக பிறந்த அந்த குட்டி தேவதைக்கும், நாஞ்சில் விஜயன் மரியா தம்பதிக்கும் நம்முடைய வாழ்த்துக்கள்.












Click it and Unblock the Notifications