திருநங்கை கொடுத்த பாலியல் புகார்.. நாஞ்சில் விஜயன் வெளியிட்ட பதிவு! கமாண்ட்டால் சிக்கிய ரோபோ சங்கர் மருமகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைத்தளங்களில் நகைச்சுவை நடிகராகப் பிரபலமடைந்து, பின்னர் விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் நாஞ்சில் விஜயன். மிமிக்ரி மற்றும் நகைச்சுவை மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இதுவரை பெரிய அளவில் எதுவும் பேசியதில்லை. இந்த நிலையில், நாஞ்சில் விஜயன் மீது ஒரு திருநங்கை அளித்த புகார், சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் நாஞ்சில் விஜயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பலருடைய கவனத்தை பெற்று வருகிறது.

Nanjil Vijayan Mathampatti Rangarajan vijay tv

ஏழு வருட நட்பு - ஒரு திடீர் பிரிவு

அந்தப் புகாரில், ஏழு வருடங்களாக நாஞ்சில் விஜயனும் அந்த திருநங்கையும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஆதரவாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக நாஞ்சில் விஜயன் தன்னிடம் பேசுவதில்லை என்றும், திடீரென விலகிச் செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். தங்கள் நட்பை மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும் என்று அந்த திருநங்கை கோரிக்கை விடுத்துள்ளார்.

சினிமா பிரபலங்கள் சர்ச்சைகளில் சிக்குவது தற்போது அதிகரித்துள்ளது. சமீபத்தில் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜன் மீது அவரது இரண்டாவது மனைவி புகார் அளித்திருந்தார். அதை பார்த்துத்தான் தனக்கு தைரியம் வந்ததாக இந்த திருநங்கை தெரிவித்துள்ளார். இதனால், சினிமா பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக இது போன்ற சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

நாஞ்சில் விஜயனின் இன்ஸ்டாகிராம் பதிவு

இந்த சம்பவம் குறித்து நாஞ்சில் விஜயன் இன்னும் வெளிப்படையாகப் பேசவில்லை. ஆனால், இந்தச் சர்ச்சை எழுந்த சமயத்தில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து சிரித்துக் கொண்டே மேடையில் பேசுவது போன்ற ஒரு புகைப்படத்திற்கு, "உன்னை பற்றி யாரு என்ன சொன்னால் என்ன... நீ இந்த காதில் வாங்கி அந்த காதில் விடு என்பது" என்ற பாடலைப் பயன்படுத்தியிருக்கிறார்.

இந்தப் பதிவு பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பதிவில், ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக், "வா தலைவா வா தலைவா" என்று கமெண்ட் செய்திருக்கிறார். அதற்கு நாஞ்சில் விஜயன் "நன்றி ஐயா" என்று பதில் அளித்திருக்கிறார். இந்த உரையாடலின் கீழ், ரசிகர்கள் இருவரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒருபுறம் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த புகார் எழுந்துள்ள நிலையில், இப்படி மறைமுகமாகப் பேசுவது தவறு எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள், தங்கள் புகழைத் தக்கவைத்துக் கொள்ள மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, பொதுவெளியில் விமர்சிக்கப்படும்போது, அது சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தப் பிரச்சனை குறித்து இரு தரப்பினரும் வெளிப்படையாகப் பேசி, இந்த விவகாரத்திற்கு ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+