ரோபோ சங்கர் குடும்பம் கொண்டு வந்த சீர்வரிசை.. நாஞ்சில் விஜயன் மனைவி வளைகாப்பில் நடந்த சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நாஞ்சில் விஜயன் மனைவிக்கு இன்று (ஏப்ரல் 9ஆம் தேதி) பிரமாண்டமாக வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது. அதில் ரோபோ சங்கர் குடும்பத்தினர் சீர்வரிசை கொண்டு வந்து அசத்தியிருக்கிறார்கள்.
சினிமாவிலும் சீரியலிலும் ஒன்றாக நடிக்கும் பலர் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருவதை பார்த்து இருப்போம். அதுபோல சின்னத்திரையில் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு சிலர் மட்டும்தான் பல வருடங்களாக நட்பை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ரோபோ சங்கர் மற்றும் நாஞ்சில் விஜயன் குடும்பமும் ஒன்று.

இந்திரஜா செய்த செயல்
ரோபோ சங்கரின் மகள் கல்யாணத்தில் நாஞ்சில் விஜயன் தன்னுடைய குடும்ப ஃபங்ஷன் என்று வேலைகளை இழுத்து போட்டு செய்திருந்தார். அது போல ரோபோ சங்கர் மகளுடைய திருமண புகைப்படங்களில் நாஞ்சில் விஜயனை தான் அதிகமாக பார்க்க முடிந்தது. நாஞ்சில் விஜயன் கடந்த 2023 ஆம் ஆண்டு மரியா என்பவரை திருமணம் செய்திருந்தார்.
விஜய் டிவி நிகழ்ச்சி
திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதே நிகழ்ச்சியிலா ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா அவருடைய கணவரோடு கலந்து கொண்டார். அந்த நேரத்தில் தான் இந்திரஜா கர்ப்பமாக இருந்தார். அதனால் அவர் வெற்றி பெற்ற சாவியை நிகழ்ச்சியில் இருந்து விலகும் போது நாஞ்சில் விஜயன் மரியா தம்பதியிடம் கொடுத்துவிட்டு வந்திருந்தார்.
ரோபோ சங்கர் குடும்ப சீர்வரிசை
அதுபோல இந்திரஜா கர்ப்பமாக இருக்கும் போது அவருடைய வளைகாப்பு பங்க்ஷனில் நாஞ்சில் விஜயன் தாய்மாமன் சீர் கொண்டு சென்று அசத்தியிருந்தார். இந்திராஜாவிற்கு மகன் பிறந்ததும் முதல் ஆளாக குழந்தையை பார்த்து அப்போது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் இன்று நாஞ்சில் விஜயன் தன்னுடைய மனைவி ஆசைப்பட்டதற்காக வளைகாப்பை பிரமாண்டமாக நடத்தி இருந்தார்.

பிரம்மாண்ட வளைகாப்பு
இதில் சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் நடிகர் ரோபோ சங்கர் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்து அசத்தி இருக்கிறார். அப்போது எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதே நேரத்தில் இந்த நிகழ்வு குறித்து நாஞ்சில் விஜயன் பேசும்போது நாங்கள் முதலில் வளைகாப்பு ஃபங்ஷனை எளிமையாக வைக்கலாம் என்று நினைத்திருந்தோம்.
நாஞ்சில் விஜயன் விளக்கம்
ஆனால் எங்களுடைய குடும்பத்தினர் மற்றும் மனைவி ஆசைப்பட்டதால் நன்கு பரிசயமான ஒரு சிலரை மட்டும் கூப்பிட்டு இருந்தோம். என்னுடைய திருமணமே ரோபோ சங்கர் மற்றும் நளினி அம்மா போன்ற ஒரு சிலருடைய முயற்சியால் நடந்தது தான். அதனால் அவர்கள் எல்லோரையும் இந்த பங்க்ஷனில் கூப்பிட்டு நடத்த வேண்டும் என்று நினைத்தேன்.

போட்டோ சூட் புகைப்படங்கள்
அதுபோல சின்னத்திரை நடிகர்கள் பலரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பது இந்த நிகழ்ச்சியில் தெரிய வருகிறது. எங்களுடைய வளைகாப்பு பங்க்ஷனில் பலர் கலந்து கொண்டது எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். அதுபோல நாஞ்சில் விஜயன் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய மனைவியோடு போட்டோ சூட் எடுத்திருந்தார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதில் நாங்கள் என்னுடைய குழந்தைக்கு மூன்று மொழிக் கொள்கையை கற்றுக் கொடுக்கிறோமோ இல்லையோ மூன்று மதத்தையும் மதிப்பதை கற்றுக் கொடுக்கப் போகிறேன் என்று, இந்து,கிறிஸ்தவ, முஸ்லிம் முறைப்படி என மூன்று மத உடையும் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருந்தார். இது பெரிய அளவில் வைரலானது.












Click it and Unblock the Notifications