கணவரை பிரிந்த நாதஸ்வரம் சீரியல் நடிகை.. சன் டிவி சீரியல் நடிகருடன் விரைவில் திருமணம்.. திடீர் அறிவிப்பு
சென்னை: நாதஸ்வரம், மகராசி போன்ற சீரியலின் மூலம் பிரபலமடைந்த நடிகை ஸ்ரீதிகா தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டதாகவும், தான் விரைவில் மகராசி சீரியலில் தன்னோடு நடித்த நடிகர் ஆரியனை திருமணம் செய்ய போவதாகவும் திடீர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
சீரியல் நடிகை ஸ்ரீதிகாவிற்கு இணையத்தில் அதிகமான பாலோவர்ஸ் இருக்கின்றனர். இந்த நிலையில் அவர் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில், இந்த முக்கியமான செய்தியை எங்கள் சமூக ஊடக குடும்பத்திற்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நான் ஸ்ரீதிகா மற்றும் ஆரியன் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு எங்களுடைய முந்தைய திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து விட்டோம்.

எங்கள் இருவருக்கும் ஏற்கனவே வேறொரு திருமண வாழ்க்கை இருந்தாலும் அந்த வாழ்க்கையில் இருந்து நாங்கள் பிரிந்த பிறகு அதைப் பற்றி குறை கூற விரும்பவில்லை. அந்த வாழ்க்கை பற்றி எதிர்மறையை பரப்பவோ நாங்கள் விரும்பவில்லை. எங்களின் தூய நட்பும், அன்பும் எங்களின் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு அளித்திருக்கிறது.
உங்கள் அனைவரின் ஆதரவும் எங்கள் பெற்றோரின் ஆசிர்வாதத்துடனும் நாங்கள் பதிவு திருமணத்தை செய்ய உள்ளோம். எப்போதும் போல நாங்கள் எடுத்த இந்த முடிவுக்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் பொழியுமாறு கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடக நேர்காணல்களில் விரைவில் பகிர்ந்து கொள்வோம்.
இன்ஸ்டாகிராம் கோளாறுகளால் எங்கள் இருவருடைய இன்ஸ்டாகிராம் ஐடியை மாற்ற முடியாமல் போனது. என்னுடைய கணவர் பெயரோடு என்னுடைய instagram ஐடி ஏற்கனவே நான் மாற்றி விட்டேன். அதை இப்போது மீண்டும் மாற்ற முயற்சிக்கிறேன். ஆனால் அது சில தொழில்நுட்ப காரணங்களால் முடியாமல் இருக்கிறது. அது விரைவில் மாற்றப்பட்டு விடும் என்று உறுதி அளிக்கிறேன். நீங்கள் எல்லோரும் எங்களின் புது வாழ்க்கைக்கு ஆதரவு தர வேண்டும் என்று அந்தப் பதிவை நடிகை ஸ்ரீதிகா மற்றும் ஆரியன் இருவரும் பகிர்ந்து இருக்கின்றனர்.

சீரியல் நடிகை ஸ்ரீதிகாவிற்கு ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருந்தது. அதுபோல அவருடைய திருமணத்தில் நடிகர் ஆரியன் தன்னுடைய மனைவியோடு கலந்து கொண்டு இருந்தார். இந்த புகைப்படங்களும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களாகவே ஆரியன் மற்றும் ஸ்ரீதிகா இருவரும் ரிலீஸ் வீடியோஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இருவரும் காதலிக்கிறார்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இப்போது திருமணம் செய்ய இருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ஸ்ரீதிகா மலேசியாவில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் தற்போது சென்னையில் குடியேறி பக்கா சென்னை பெண்ணாக மாறி விட்டார். வெண்ணிலா கபடி குழுவில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து இருப்பது ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்து இருந்தது .இந்த கேரக்டருக்கு பக்காவா பொருந்துகிற முக அழகும் குரலும் இவரது ரசிகர்களுக்கு பிளஸ் பாயிண்டாக இருக்கிறதாம். ஸ்ரீதிகா நடிகை மட்டுமல்ல சில கதாநாயகிகளுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
வேங்கை படத்தில் தனுஷின் தங்கையாக கலக்கியிருப்பார். உண்மையாக ஒரு அண்ணன் தங்கச்சி பாசத்தை அப்படியே கண்முன் காட்டி இருப்பார். அப்பா மேலும் பாசமும் மரியாதையும் அழகாக நடித்திருப்பார் . இந்த திரைப்படத்திற்கு பிறகு இப்ப வரையிலும் தனுசை ஸ்ரீதிகா அண்ணனாக தான் பார்க்கிறாராம். அவருடன் தங்கை போல உரிமையோடு பேசுவாராம்.

சில மாதங்களாகவே ஆரியன் மற்றும் ஸ்ரீதிகா இருவரும் ரீல்ஸ் வீடியோஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இருவரும் காதலிக்கிறார்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இப்போது திருமணம் செய்ய இருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
பணக்கார வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் கதாநாயகனாக கோபி மீது காதல் கொண்டு அந்த சமயத்தில் இன்னொருவரின் கட்டாய திருமணத்தை இவர் வேண்டாம் என்று உதறித் தள்ளி விட்டு மறுபடியும் கோபியை திருமணம் செய்து கொண்டு வாழ்வர். இது முதலில் சில ரசிகர்களுக்கு இந்த கேரக்டர் இரண்டாவது திருமணம் பண்ணுவது பிடிக்கவில்லை என்றாலும் கொஞ்ச நாட்கள் கழித்து ரசிகர்கள் இவரை ஏற்றுக் கொண்டார்கள்.
இந்த சீரியலின் வெற்றிக்கு பிறகு பல சீரியல்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார் .
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications