Nayagi serial: கண்மணி அன்போடு நான் வச்ச மிளகு ரசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் கண்மணி இப்போதுதான் செழியனோடு சேர்ந்து வாழ ஆரம்பித்து இருக்கிறாள்.அதற்குள் வீடு பிரிவினை ஆகிவிட்டது.

நாயகி சீரியலில் ஆனந்திக்கு நிகராக இல்லை என்றாலும், கொஞ்சம் முன்னே பின்னே இருப்பது போலத்தான் கண்மணிக்கும் முக்கியத்துவம் கொடுத்து சீரியலை எடுத்திருக்கிறார் இயக்குநர்.

ஆனந்திக்கு ஒரு பிரச்சனை என்றால், அவளின் உயிர் தோழி கண்மணிக்கு வேறு ஒரு மாதிரி பிரச்சனை என்று வரும்.இப்படி உயிர் தோழிகளின் கதையை நாயகியாக்கி தருகிறார் இயக்குநர்.

செழியன் கண்மணி

செழியன் கண்மணி

கண்மணி செழியன் இருவரும் காதலிச்சு இருந்தாலும், சுகாசினின்னு தங்களது அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி சற்குணத்தம்மா தன் மகன் செழியனுக்கு பொண்ணு பார்க்கறாங்க .அவ தப்பான பொண்ணுன்னு கண்மணி நாடகம் ஆடி கல்யாணத்தை நிறுத்திடறா. செழியனை தான் கல்யாணம் செய்துக்கிட்டாலும், செழியன் கண்மணியை ஏத்துக்காமல் ஒரு வருஷம் ஆகிப்போச்சு.

கண்மணி சற்குணம்

கண்மணி சற்குணம்

ஆனால், கோபமாக இருந்த மாமியார் சற்குணம் அம்மாவை தனது செய்கைகள், சமையல் மூலம் தன் வசம் இழுத்துக்கறா கண்மணி. உடம்பு சரி இல்லை என்றால் அதற்கு கை வைத்தியம் பார்ப்பது...சாப்பாடு அதுக்கு ஏத்த மாதிரி சமைச்சு கொடுப்பது என்று குடும்பத்தினரை தன் வசம் இழுத்துக்கறா. ஆனா கொழுந்தன் கோபி மட்டும் கண்மணிக்கு எதிராக சுகாசினிக்கு ஆதரவாக இருக்கான்.

ஒரு வருஷம் கல்யாணமாகி

ஒரு வருஷம் கல்யாணமாகி

கல்யாணமாகி ஒரு வருஷம் ஆன போதும், இன்னும் ஒண்ணும் இல்லையான்னு எல்லாரும் கேட்கறாங்கன்னு கண்மணிகிட்ட அத்தை கேட்க, கண்மணி புருஷன் செழியன் கிட்டே சொல்றா. எனக்கும் உனக்கும்தான் ஒண்ணும் இல்லைன்னு ஆகிப்போச்சு இல்லே.. நீ என்ன வேணா பண்ணிக்கோன்னு சொல்றான் செழியன். செழியன் மேல தப்பு சொல்ல கூடாதுன்னு கண்மணி கர்ப்பிணி வேஷம் போட்டு, பின்னர் அதை கலைச்சுடவும் செய்யற மாதிரி நாடகம் போடறா.

கோபி இதை

கோபி இதை

இந்த விஷயத்தை எப்படியாவது அம்மாகிட்டே சொல்லி, அவளை இந்த வீட்டிலிருந்து விலக்கி வைக்கணும்னு சுகாசினியுடன் சேர்ந்துக்கிட்டு, கண்மணி அப்பா வாயாலேயே சரக்கு வாங்கிக் குடுத்து வரவழைச்சு வீடியோ எடுத்து ,அம்மா தர்மகர்த்தா ஆகும் நிலையில்,இதை ஊரார் காமிக்கும்படி செய்துடறான். மக்களின் முன் அசிங்கப்பட்டு கோவத்தில் வீட்டை ரெண்டாக பிரிச்சு, ரெண்டு சமையல் கண்மணி கூட யாரும் பேசக்கூடாதுன்னு சொல்லிடறாங்க.

மிளகு ரசம் சளி

மிளகு ரசம் சளி

சற்குணம் அம்மாவுக்கு பயங்கர சளி, தும்மல் தும்மலா வந்துகிட்டு இருக்குது.கண்மணி மிளகு ரசம் கொஞ்சம் வச்சு எடுத்துட்டு வான்னு சொல்லிட்டு, சீ அவளைத்தான் வீட்டை விட்டு விலக்கி வச்சு இருக்கோமேன்னு ரெண்டாவது மருமகள் சுமதியை மிளகு ரசம் வச்சு தர சொல்றாங்க. சுமதிக்கு வைக்கத் தெரியலை. கண்மணி யாருக்கும் தெரியாமல் மணக்க மணக்க மிளகு ரசம் வச்சு சுமதிகிட்ட குடுத்து விடறா.நீ வச்ச ரசமா சுமதி ரொம்பநல்லாருக்குன்னு ருசிச்சு குடிக்கறாங்க.

இது கண்மணி அன்போடு வச்ச ரசம்னு அவங்களுக்கு தெரியலை பாவம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+