தனுஷ் பட தயாரிப்பாளர் திருமணத்தில் என்ட்ரி கொடுத்த நயன்தாரா.. சிவகார்த்திகேயனோடு யாரு பாருங்க!
சென்னை: நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த திருமண பங்க்ஷனில் நடிகர் சிவகார்த்திகேயன், இசை அமைப்பாளர் அனிருத் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
சில தினங்களாக நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் பிரச்சனை தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகை நயன்தாரா தனுஷ் குறித்து மூன்று பக்கத்திற்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் இந்த அறிக்கைக்கு எந்த ரியாக்ஷனும் செய்யாமல் தனுஷ் அமைதி காத்து வருகிறார். இதனால் யார் மீது சரி யார் மீது தப்பு என்ற விவாதம் இணையத்தில் அதிகரித்து வருகிறது.

நயன்தாரா தன்னுடைய திருமண ஆவண படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனோடு காதல் ஏற்பட்ட நானும் ரவுடிதான் திரைப்பட சில காட்சிகளை பயன்படுத்திக் கொள்வதற்காக தனுஷிடம் அனுமதி கேட்டோம், ஆனால் அவர் அனுமதி தராமல் இரண்டு வருடங்களாக இழுத்து அடித்து விட்டார், அதனால் தான் தன்னுடைய ஆவணப்படத்தை வெளியிட முடியவில்லை என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
அதோடு அந்த ஆவணப்படத்தில் ப்ரோமோவில் மூன்று செகண்டு காட்சிக்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டார் என்று பதிவு வெளியிட்டது இணையம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
நயன்தாராவின் ரசிகர்கள் தனுஷை வசைப்பாடி வந்தனர். சமீப காலமாகவே சினிமா துறையில் விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் எந்த பிரபலம் விவாகரத்து செய்தாலும் அதற்கு காரணம் தனுஷ் தான் என்று நெட்டிசன்கள் தனுஷை கிண்டல் செய்து வந்தனர். ஆனால் அதற்கெல்லாம் தனுஷ் எந்த ரியாக்ஷனும் செய்யாமல் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் இட்லி கடை திரைப்படத்தின் இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. ஆகாஷ் பாஸ்கரன் நானும் ரௌடி தான், காத்து வாக்குல ரெண்டு காதல், பாவ கதைகள் உள்ளிட்ட பல படங்களில் விக்னேஷ் சிவனுக்கு உதவி இயக்குனராக இருந்தவர் தான். இவருடைய திருமணத்தில் பல பிரபலங்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியிருந்தனர்.
இந்த திருமண பங்க்ஷனில் நயன்தாராவும் கலந்து கொண்டிருக்கிறார். நயன்தாரா பொதுவாக சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது கிடையாது. ஒரு சில நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொண்டிருக்கிறார். தற்போது தனுஷ் பற்றி பிரச்சனை நிலவி வரும் நிலையில் அவருடைய இட்லி கடை படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளரின் திருமணத்தில் நயன்தாரா பங்கேற்றது அதிகமாக விவாதிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த பங்க்ஷனில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டிருக்கிறார். அதுவும் அவருடைய மனைவியோடு இந்த பங்க்ஷனில் கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல இசை அமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டிருக்கிறார். இவர்கள் எல்லோரும் ஒரே மேடையில் இருக்கும் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனாலும் இந்த திருமண பங்க்ஷனில் நடிகர் தனுஷ் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிந்து கொண்டுதான் நயன்தாரா கலந்து கொண்டாரா? என்றும் கேள்விகள் எழுகிறது. காரணம் இன்று தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அதில் ஆஜராவதற்காக தனுஷ் சென்றிருந்ததால் இன்று திருமணத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்பதை தெரிந்து கொண்டு நயன்தாரா கலந்து கொண்டாரா? என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications