சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!
சென்னை: தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சு பெரிய சர்ச்சையாக மாறியது. முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது விமர்சனம் செய்யும் போது, தேவையில்லாமல் நடிகை நயன்தாரா பெயரை இழுத்தது சினிமா வட்டாரத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த விவகாரத்தில், "நயன் கண்டிப்பாக பதில் கொடுப்பார்" என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்த மாதிரி நேரடி கண்டனம் அல்ல... வேற மாதிரி ஒரு பதிலை தான் அவர் தேர்வு செய்திருக்கிறார்.

நேரடி வார்த்தை இல்லை
சமூக வலைதளங்களில் எப்போதுமே அளவான பதில்களை மட்டுமே கொடுக்கும் நயன்தாரா, இந்த முறை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு சின்ன வரி மட்டுமே பதிவிட்டுள்ளார்.
"மழை எங்கு, யார் மீது விழுகிறது என்று பார்க்காது... அப்படியே உங்கள் அன்பும் இருக்க வேண்டும்" என்ற அந்த வரி தான் இப்போது பெரிய பேச்சாகி இருக்கிறது. இந்த ஒரு வரியை பார்த்த ரசிகர்கள், "இது சாதாரண quote இல்ல... நேரடியாக சொல்லாமல் கொடுத்த பதில்" என்று புரிந்து கொண்டுள்ளனர்.
திரிஷா போல நேரடி பதில் இல்லை... ஏன்?
சமீபத்தில் திரிஷா கிருஷ்ணன் குறித்து அரசியல் பிரமுகர் நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையானபோது, திரிஷா உடனடியாக பதிலடி கொடுத்தார். அதன் பிறகு நயினார் நாகேந்திரன் மன்னிப்பும் கேட்டார். அதை ஒப்பிடும்போது, நயன்தாரா எடுத்திருக்கும் இந்த அணுகுமுறை ரொம்ப வேற மாதிரி. "எதுக்கும் ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியமே இல்லை" என்ற ஸ்டைலில் தான் அவர் இருக்கிறார் என பலர் கூறுகின்றனர்.
ரசிகர்கள் கருத்து
நேரடியாக யாரையும் குறிப்பிடாமல், எந்த வார்த்தையிலும் தாக்காமல்... ஒரு மென்மையான மெசேஜ் மூலம் பதிலடி கொடுத்திருப்பது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
"அவரை பற்றி யாராவது பேசினாலும், அவர் அந்த லெவலுக்கு இறங்க மாட்டார்"
"நயன் ஸ்டைல் இதுதான்... சத்தமில்லாமல் சொல்லி விடுவார்" என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் அமைதி
இந்த விவகாரத்தில் விக்னேஷ் சிவன் இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை. இதுவும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அதே நேரத்தில், குஷ்பு சுந்தர் மறைமுகமாக கண்டனம் தெரிவித்தார். "நடிகைகள் விவாதத்திற்கு பொருள் அல்ல" என்ற அவரது கருத்து, இந்த சர்ச்சைக்கு நேரடி பதிலாகவே பார்க்கப்படுகிறது.
இன்னும் அடங்காத சர்ச்சை
நடிகர் சங்கம் உட்பட பல தரப்பில் இருந்து கண்டனங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சி.வி. சண்முகம் பேச்சு இன்னும் விவாதத்தில் தான் உள்ளது. பொதுவாக ஒரு சர்ச்சைக்கு இரண்டு விதமான பதில்கள் இருக்கிறது. ஒரு பக்கம் நேரடி எதிர்ப்பு, மற்றொரு பக்கம் அமைதியான சைகை. அதில் நயன்தாரா எடுத்திருப்பது இரண்டாவது வழி. "சொல்லாமல் சொல்வது" - அதுதான் இந்த முறை நயனின் பதிலடி. இந்த ஒரு பதிவு மட்டும் போதும்... அவர் என்ன சொல்ல வருகிறார் என்று ரசிகர்கள் புரிந்து கொள்ள என்று பலரும் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications