உண்மையான வாழ்க்கையை உணர விரும்பினால்! இதைத்தான் இழக்கிறோம்.. உருக்கமாக பதிவு வெளியிட்ட நயன்தாரா
சென்னை: நடிகை நயன்தாரா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்ட பதிவு பலருடைய கவனத்தைப் பெற்று வருகிறது. அதில், இந்த பரபரப்பான உலகத்தை விட்டு விலகி உண்மையான வாழ்க்கை என்னவென்று உணர விரும்பினால் இதை செய்யுங்கள்" என்று நயன்தாரா சில விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறார். அதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று தன்னை சினிமா உலகத்தினர் அழைத்தாலும் தனக்கு அது பிடிக்காது என்று சொல்லிக் கொள்ளும் நயன்தாரா சமீபத்தில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக அவருடைய திரைப்படங்கள் பெரிய அளவில் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் தன்னுடைய பிசினஸிலும் கவனம் ஈர்த்து வருகிறார். அதோடு தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நயன்தாரா அடிக்கடி தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வெளிநாடு சுற்று பயணமும் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தான் இன்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த பதிவில் "இந்த பரபரப்பான உலகத்தை விட்டு விலகி உண்மையான வாழ்க்கை என்னவென்று உணர விரும்பினால் குழந்தைகளை கூட்டிக்கொண்டு மலை ஏறுங்கள் அல்லது பெற்றோர்களே ராம்சார் உடைய பறந்து போ படத்திற்கு கூட்டிக்கொண்டு சென்று பாருங்கள். வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை, எதை இழக்கிறோம்" என்பதை இந்த படம் அழகாக எடுத்துரைக்கிறது. நான் பார்த்த ரொம்ப இனிமையான படங்களில் இந்த படமும் ஒன்று. ராம் சார் சிறந்த இயக்குனர் .பட குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று நயன்தாரா கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான ராம் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதை அம்சத்தோடு இருக்கும். அதிலும் கற்றது தமிழ் படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக தமிழ் சினிமாவில் ராம் அறிமுகமானார். அதற்கு தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
ஒருவித அழுத்தமான கதைகளை சொல்லி வந்த ராம் சிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது பறந்து போ என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை மற்றும் தந்தையின் அன்பை தத்ரூபமாக காட்டி இருக்கிறார். இந்த படத்தில் மிர்ச்சி சிவா, அஜி வர்கீஸ், கிரோஸ் ஆண்டனி, ராயன், அஞ்சலி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதியும், யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பலருடைய பாராட்டையும் பெற்று வருகிறது.
இந்த திரைப்படம் குறித்து இப்போது நயன்தாராவும் பாராட்டி இருக்கிறார். அதேபோல இந்த திரைப்படத்தின் கதையானது மிர்ச்சி சிவா சென்னை சிட்லபாக்கம் ஏரியாவில் ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி தான் கிரேஸ் ஆண்டனி இவர்களுக்குள் ராயன் என்று ஒரு மகனும் இருக்கிறார். இவர்கள் மிடில் கிளாஸ் குடும்பத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். தன்னுடைய மகனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்தான் சிவா.
அதற்காகவே இவர் இ எம் ஐயில் வீடு, பைக் என்று எல்லாமே வாங்கி வைத்திருக்கிறார். அதனால் கடனை கட்ட முடியாமல் ரொம்பவும் கஷ்டப்படுகிறார். இவருடைய மனைவி கிரேஸ் சேலை வியாபாரம் செய்கிறார். இப்படி இருக்கும் போது ஒரு நாள் மனைவி கிரேஸ் சேலை வியாபாரத்திற்கு போகும்போது தன்னுடைய மகன் ஆசைப்பட்டதால் அவரை பைக் டிரைவ் கூட்டிக்கொண்டு போகிறார். அப்போது தன்னுடைய பள்ளி தோழி அஞ்சலியை சிவா சந்திக்கிறார். அப்போது நடக்கும் சம்பவங்கள் பற்றி தான் இந்த படம் பயணிக்கிறது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications