விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் டாப் சீரியல்.. கதையில் அதிரடி மாற்றம்.. எதிர்பார்க்காத சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்றான நீ நான் காதல் சீரியல் திடீரென முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இப்போது கதையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
சீரியலுக்கு பெயர் வாங்க போட்டியாக பல சேனல்கள் புதியது புதியதாக சீரியல் ஒளிபரப்பு செய்து வருகிறது. அதிலும் இளைஞர்களையும் கவரும் வகையில் விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவி சீரியலில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்கள். அதனால் விஜய் டிவி பிரபலங்கள் பல இளம் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இவருக்கு பதில் இவர்
விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் டப்பிங் சீரியல்கள் தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தன. இப்போது தமிழிலேயே பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பாக்கியலட்சுமி சீரியல், சிறகடிக்க ஆசை சீரியல், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், சின்ன மருமகள், அய்யனார் துணை போன்ற பல சீரியல்கள் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது.
அடுத்தடுத்து விலகல்
அந்த வரிசையில் நீ நான் காதல் எனும் சீரியலும் ரசிகர்களை கவர்ந்த சீரியலாக இருக்கிறது. இந்த சீரியல் தான் இப்போது திடீரென்று முடிவுக்கு வர இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த சீரியலில் ஏற்கனவே அனு கேரக்டரில் நடிகை சாய் காயத்ரி நடித்து வந்தார் ஆனால் திடீரென்று அவர் சீரியலில் இருந்து விலகி இருந்தார். அவருக்கு பதிலாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ராகிணியாக நடித்து வந்த நடிகை அர்ஷிதா நடித்து வந்தார்.

சூப்பர் ப்ரோமோ
ஆனால் இப்போது அர்ஷிதா திடீரென்று விலகி விட்டார். மீண்டும் நடிகை சாய் காயத்ரி அனு கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல இது சீரியலிலும் முக்கிய திருப்பங்கள் வந்திருக்கிறது. அதாவது அபி இடம் ராகம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் ப்ரோமோ நேற்று தான் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் அதிகமான பேசப்பட்டு வரும் நிலையில் இப்போது இந்த சீரியல் முடிவு குறித்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அபியை புரிந்து கொள்ளும் ராகவ்
அபி மற்றும் ராகவ் காண்ட்ராக்ட் திருமணம் செய்திருந்தனர். அது போல அபி பற்றி ராகவ் தவறாகவே நினைத்துக் கொண்டிருந்தார். அபி மீது தனக்கு காதல் இருந்தாலும் அபிக்கு தன்னுடைய அக்கா கணவர் முரளிக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று ராகவ் சத்தேகப்பட்டு கொண்டு இருந்தார் இப்போதுதான் அது தவறு என்று ராகவ் புரிந்திருக்கிறார்.
கதையில் மாற்றம்
இந்த சீரியல் ஆரம்பத்தில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது இப்போது சில மாதங்களாக தான் ஆறு மணிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது 6:00 மணிக்கு ஒளிபரப்பு செய்ய தொடங்கியதும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது டிஆர்பியிலும் நல்ல இடத்தை பிடித்திருந்தது. ஆனால் சில வாரங்களாக இந்த சீரியலில் டிஆர்பி குறைந்தது.

சீரியல் முடிவு
அதனால் கதையிலும் மாற்றம் கொண்டு வந்திருக்கிறார்கள். முரளி பற்றிய உண்மைகள் குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து தெரிய வந்து கொண்டிருக்கிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனால் இந்த சீரியல் இந்த மாத கடைசியோடு சூட்டிங் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் புதிய சீரியல் இந்த டைமில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications