ஆட்டம் போட்டு ஆட்டம் போட்டு உள்ள போகபோற..! கோபிநாத்தை திட்டிய பிரபலம் லீக்கான வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் வரும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் நிகழ்ச்சியில் எந்த ஊர் தமிழ் சிறந்தது என்று நட்சத்திரங்களுடன் ஒரு பொங்கல் சிறப்பு நீயா நானா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதில் ஒவ்வொரு பிரபலங்களும் தங்கள் ஊர் வட்டார மொழியில் பேசிக் கொண்டிருக்க அதை பார்த்து கோபிநாத் அதிர்ச்சி அடைந்திருக்கின்றார். அப்போது விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் கோபிநாத் முன்பு பேசிய வார்த்தையை கேட்டு கோபிநாத் ஒரு நிமிடம் திகைத்துப் போய் இருக்கிறார்.

அதுபோல நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் வந்திருந்த பிரபலங்களிடம் ஒரு குழந்தையை எப்படி கொஞ்சுவது? அதுவும் அப்படி கொஞ்சும் போது எந்த வட்டார மொழி சிறப்பாக இருக்கிறது என்றும் காதலை தெரிவிக்கும் போது உங்களுடைய வட்டார மொழியில் நீங்கள் சொல்லுங்கள் என்பது போலவும் கேள்விகள் கேட்க, அதற்கு அங்கிருந்த பலரும் டெரரான வார்த்தைகளால் தங்களுடைய அன்பை காட்ட கோபிநாத் மட்டுமல்லாமல் பார்க்கும் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Neeya Naana 15th January 2024 Promo 1 and fans reaction

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக வரும் நீயா நானா நிகழ்ச்சி பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ச்சியாக கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. கடந்த வாரத்தில் கூட மறைந்த நடிகர் விஜயகாந்த் பற்றி பிரபலங்களின் நினைவுகளும் விஜயகாந்த்தின் ரசிகர்களின் நினைவுகளும் நீயா நானா நிகழ்ச்சியில் பகிரப்பட்டது.

அதற்கு முந்தைய வாரத்தில் சென்னையில் மழை வெள்ளத்தில் தத்தளித்த போது பிரபலங்கள் செய்த உதவிகள் குறித்து அந்த நிகழ்ச்சியில் பேசப்பட்டது. இப்படியாக நிகழ்வில் எந்த பிரச்சனை அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறதோ, அதன் அடிப்படையிலேயே நீயா நானா நிகழ்ச்சியில் டாப்பிக் கொடுக்கப்பட்டு அங்கே விவாதம் நடைபெற்று வருகிறது.

Neeya Naana 15th January 2024 Promo 1 and fans reaction

இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் விதம் மட்டுமல்லாமல் இதில் விவாதிக்கப்படும் பிரச்சனைகளின் தன்மைக்கு தகுந்த மாதிரி கோபிநாத் தைரியமாக தன்னுடைய தீர்ப்பையும் சொல்லி வருவார். இது ரசிகர்களின் மத்தியில் அதிகமாக கவரப்பட்டது. அந்த வகையில் தான் வரும் ஜனவரி 15 அதாவது பொங்கல் தினத்தன்று ஸ்பெஷல் நீயா நானா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

அதற்கான ப்ரோமோக்களும் இப்போது வெளியாகி இருக்கிறது அதில் எந்த ஊர் தமிழ் சிறந்தது என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. இதில் நட்சத்திரங்களோடு கோபிநாத் இந்த நிகழ்ச்சியில் கேள்விகளை கேட்டிருக்கிறார். அப்படியான நிலையில் தான் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் ஒரு குழந்தையை கொஞ்சுறது ரொம்ப அழகான நிகழ்ச்சி அதை கொஞ்சுவதற்கு என்னுடைய வட்டார மொழி சிறப்பு என்பது பற்றி சொல்லுங்க என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு மைனா நந்தினி என்ன பெத்த பெத்தாரே, என் தங்க குட்டி என்று சொல்லுவோம் என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுனனின் மாமனாக இருக்கும் வில்லன் "மருமகளே மாமன் வந்துட்டேன்டா" என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்த நடிகை ரித்திகா "சாமி எப்படி இருக்கீங்க சாமி" என்று சொல்வோம் என்று சொல்கிறார்.

Neeya Naana 15th January 2024 Promo 1 and fans reaction

ஒரு பிரபலம் கொங்கு தமிழில் "நாங்க கொஞ்சிரக் கொஞ்சலில் எங்க குழந்தை ஒரு அடி வளரனும் அந்த மாதிரி நாங்க கொஞ்சம் ஐயா" என்று சொல்ல அங்கிருக்கும் நாஞ்சில் விஜய்யிம் இன்னொரு நடிகரும் ஐயா அப்போ எங்களை கொஞ்சம் கொஞ்சங்கய்யா நாங்களும் நல்லா வளரனும் என்று சொல்கிறார். இப்படி கலகலப்பான ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இன்னொரு ப்ரோமோவில் காதலில் எந்த வட்டார வழக்கு அழகாய் இருக்கும் என்று கோபிநாத் கேட்கிறார்.

அதற்கு மஞ்சள் சட்டை போட்ட ஒரு பிரபலம் "ஏய் நம்பர் கொடு" என்று கேட்போம் என்று சொல்கிறார். அப்போது நாஞ்சில் விஜயன் "இங்க பாரு நீ ஒத்துக்கலைன்னா பேர எழுதி வெச்சிட்டு செத்துப் போயிருவேன்னு சொல்லுவான்" என்று சொல்கிறார். அதற்கு கோபிநாத் என்னடா நான் காதல் தானடா பண்ண சொன்னேன் அதுக்கு இப்படியெல்லாம் மிரட்டுவீங்க என்று பயந்தபடியே கேட்கிறார்.

அதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கான முதல் பிரமாவில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் கோபிநாத்திடமே "நீ ஆட்டம் போட்டு ஆட்டம் போட்டு உள்ளதாண்டா போக போற" என்று சொல்ல, அதற்கு எதிர் பக்கத்தில் இருக்கும் நாஞ்சில் விஜயன் "நீ மண்ணா போவல... நாசமா போவால" என்று பேச, எதிர் பக்கத்திலிருந்து பேச,

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மைனா நந்தினி "மூஞ்சியும் முகர கட்டையும் பாரு, எடுபட்ட பய விளக்குமாற எடுத்தேன் வைய்யி...."என்று டெரராக பேசிக் கொண்டிருக்க கோபிநாத் இந்த பக்கம் பேசவா? அந்த பக்கம் பேசவா? என்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கிறார். தற்பொழுது இந்த ப்ரோமோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+