தலைமுடியால் முற்றிய சண்டை..கல்யாணம் வரைக்கும் இழுத்த பெண்..பதில் சொல்ல முடியாமல் கோபிநாத்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் ஜூன் 11ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் தமிழ்நாட்டின் நீண்ட கூந்தல் உடைய பெண்களும் நீண்ட கூந்தல் பெண்களுக்கு தேவை இல்லாதது என சொல்லும் பெண்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் ஒரு பெண் உங்களை பெண்ணு பார்க்க வரும்போது நீங்க குட்டையான முடியோடு இருப்பதற்கும் நீண்ட தலைமுடியோடு இருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்து என்ன சொல்லுவாங்க என்று கேள்வி கேட்கிறார்.

தற்போதைய சூழ்நிலையில் முடி பிரச்சனை "முடி"வில்லாத பிரச்சனையாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருந்து வருகிறது. கால சூழ்நிலை, உணவு பழக்கங்களின் மாற்றத்தால் பலருக்கு தலைமுடி பிரச்சனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் அது பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
பொதுவாக பலருக்கும் நீண்ட தலைமுடி இருக்க வேண்டும். அடர்த்தியாகவும் ,தங்களுக்கு பிடித்த நிறத்தில் இருக்க வேண்டும் என்று விருப்பத்தில் தான் இருப்பார்கள். இதன் அடிப்படையில் தான் சமீபத்தில் கூட "கட்டா குஸ்தி" திரைப்படத்தில் கதாநாயகன் நீண்ட தலை முடி உள்ள பொண்ணு தான் எனக்கு வேணும் என்று பெண் பார்க்கும் படலத்தில் முக்கிய அம்சமாக எதிர்பார்ப்பாக வைத்துக் கொண்டிருப்பார்.

ஆனால் கடைசியில் அந்த கதாநாயகனுக்கு அவர் எதிர்பார்த்தபடி நீண்ட தலை முடி உள்ள பெண் கிடைத்திருக்காது. குட்டையாக கூந்தலை உடைய பெண்தான் கிடைத்திருப்பார். அதனால் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை பிறகு கடைசியில் கதாநாயகன் கதாநாயகியை புரிந்து கொள்வார். இது சமூகத்திலும் பலருடைய மனதில் வேரூன்றி இருக்கும் சிந்தனைதான்.
அதன் அடிப்படையில் தான் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார விவாதம் நடக்க இருக்கிறது. தமிழ்நாட்டின் நீளகூந்தலுடைய பெண்களும் நீளக்கூந்தல் எங்களுக்கு தேவையே இல்லை என்று சொல்லும் பெண்களும் இரண்டு அணியாக கலந்து தங்களுக்கு பிடித்த பிடிக்காத பல விஷயங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
அதில் குட்டையான தலைமுடியை உடைய ஒரு பெண் நான் குட்டையா ஹேர் ஸ்டைல் பண்ணி இருப்பதால என்ன பார்க்கிறவங்க நீ தாம்பாய்ஸா, லெஸ்பியனா என்று பல வார்த்தைகளை வச்சு என்ன ஜட்ஜ் பண்றாங்க என்று தன்னுடைய கவலையை கூற, நீண்ட தலைமுடி உடைய பெண் தென்னிந்திய கலாச்சாரத்தின் படி உங்கள ஒருத்தங்க பொண்ணு பார்க்க வராங்க. அப்போ நீங்க பிக்சி கட் பண்ணி உட்கார்ந்துட்டு இருக்கிறதுக்கும், நீண்ட தலை முடியை வாரி பின்னல் போட்டு உட்கார்ந்து இருக்கிறதுக்கும் வித்தியாசம் என்ன சொல்லுவாங்க? என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு குட்டையான தலை முடியை ரசிக்கும் பெண் ஒருவர், பெண்ணோட வாழ்க்கை கல்யாணத்திலேயே முடிஞ்சிடுமா? இல்ல அதுதான் முக்கியமா? இல்ல இப்ப கல்யாணம்தான் முக்கியமானு கேக்குறேன் என்று ஆக்ரோஷமாக பேச, அதற்கு கோபிநாத் பதில் சொல்ல முடியாமல் தலையை தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் தலைமுடிக்கும் வாழ்க்கைக்கும் என்னம்மா சம்பந்தம் இருக்கு..? என்று கருத்து கூறி வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications