நீயா நானாவில் பெண் டாக்டர் கேள்வியால் கோபமான கோபிநாத்.. இவருக்கே இந்த நிலைமையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் ஜூன் 18ஆம் தேதிக்கான எபிசோட்டின் முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.

அதில் இந்த வாரம் மனநல சிகிச்சைக்கு செல்வதை இயல்பாக ஏற்க முடியாது என்றும், மனநிலை சிகிச்சை இயல்பாக மாற வேண்டும் என்றும் இரண்டு அணியினர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதில் டாக்டர் ஒருவர் பேசிய வார்த்தையை கேட்டு கோபமான கோபிநாத் ப்ளீஸ் உங்க பேச்சை நிறுத்துங்க எனக்கே மன அழுத்தம் வந்துரும் போல இருக்குன்னு கூறி இருக்கிறார்.

Neeya Naana 2023 June 18th promo 1 and fans reaction A discussion of psychiatric treatment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான இடத்தை பிடித்திருக்கிறது. அதற்காகவே ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள் வேய்ட்டிங்கில் இருக்கின்றனர். அப்படி காத்திருக்கும் ரசிகர்களுக்கு சிறு ஆறுதல் கொடுக்கிற மாதிரி அவ்வப்போது ப்ரோமோவும் வெளியாகி வருவது வழக்கமானது தான்.

அந்த வகையில் வெளியான இந்த வார ப்ரோமோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். காரணம் இதுவரைக்கும் நிகழ்ச்சியில் கோபப்படாமல் நிதானமாக பேசி இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டு தன்னுடைய சரியான முடிவுகளை தைரியமாக எடுத்துச் சொல்லும் தோபிநாத் இந்த வாரம் முதல் ப்ரோமோவில் டாக்டர் ஒருவர் பேசியதை கேட்டு கடுப்பாகி இருக்கிறார்.

இந்த வார எபிசோட்டில் மனநல சிகிச்சைக்கு செல்வது இயல்பாக ஏற்க முடியாது என்று ஒரு அணியினரும் மனநல சிகிச்சை இயல்பாக மாற வேண்டும் என்று இன்னொரு அணியினரும் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த விவாதம் தற்போதைய சூழ்நிலையில் சமுதாயத்திற்கு தேவையான விவாதமாகத்தான் இருக்கிறது.

காரணம் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர்களுக்கும் இப்போது மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக மாறிக் கொண்டிருக்கிறது. குழந்தை பருவத்திலேயே அவர்களுக்கு அளவுக்கு அதிகமான பாரங்கள் தூக்கி வைக்கப்படுவதும் அதை வாழ்நாள் முழுக்க சுமந்து கொண்டே ஓடிக் கொண்டிருப்பதும் கண்கூட பார்த்துக் கொண்டிருப்பதும் தான்.

அதனாலே அதிகமாக தற்கொலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. இதை குறைப்பதற்காகவே பல மனநல சிகிச்சைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தங்களுடைய பிரச்சனைகளை யாரிடமாவது தெரிவித்தால் பல பிரச்சனைகள் குறைந்து விடும் என்பது மனநல மருத்துவர்களின் வாதமாக இருக்கிறது.

Neeya Naana 2023 June 18th promo 1 and fans reaction A discussion of psychiatric treatment

ஆனால் இது தேவையானது அல்ல மனநல சிகிச்சை எடுத்துக் கொள்வது இயல்பாக எடுத்துக்க முடியாது என்று இன்னொரு தரப்பினர் மறுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் இதற்கான விவாதங்கள் நீயா நானா நிகழ்ச்சியில் நடந்திருக்கிறது. அதற்கான முன்னோட்டமான ப்ரோமோவில் ஒரு பெண் டாக்டர் கோபிநாத்திடம் கேள்வி கேட்டிருக்கிறார்.

பொதுவா நீங்க தெரப்பில என்ன நடக்கும்னு நினைக்கிறீங்க? என்று கேட்க, அதற்கு கோபிநாத் எனக்கு தெரியாது நீங்க சொல்லுங்க என்று சொல்லி, அந்த பெண்ணிடம் கோபிநாத் நாங்க சொல்றத கேட்டுட்டு தானே நீங்க எங்களுக்கு பதில் சொல்லணும் என்று சொல்லி மேலும், எனக்கு ஒரு காதல் தோல்வி நான் ஒரு டிப்ரஸன்ல இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையில் மறித்து அந்தப் பெண் இல்ல சார் அந்த கேசஸ் இன்க்ரீஸ் ஆயிருக்கு நீங்க கேஸ் சர்டிபிகேட் எடுத்து பாத்தீங்கன்னா தெரியும் என்று சொல்கிறார்.

அத கேட்டு கோபிநாத் ஏன் பயமுறுத்துரீங்க? என்று கேட்க அந்த பெண் மீண்டும் இல்ல சார் நீங்க கேஸ் சர்டிபிகேட் எடுத்து பாருங்க என்று சொல்லிக் கொண்டிருக்க, இடையில் மறித்து கோபிநாத் ப்ளீஸ் டோன்ட் மேக் மீ டிரஸ்ட் ப்ளீஸ் என்று கூறிக் கொண்டிருக்கிறார். தற்போது இந்த ப்ரோமோ பெரும் வைரலாகி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+