நீயா நானா: கோபிநாத் கேட்ட நெருடலான வார்த்தை..பணிப்பெண்கள் சிந்திய கண்ணீர்..வலி நிறைந்த எதிர்பார்ப்பு
சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் சமையல் வேலை செய்பவர்கள் மற்றும் அவர்களை பணியில் அமர்த்தியவர்கள் இரண்டு அணியாக கலந்து கொண்டு இருக்கின்றனர்.
சமையல் வேலை செய்பவர்களுக்கு இருக்கும் சொல்லப்படாத வலிகள் என்ன என்று கோபிநாத் கேள்வி கேட்டிருக்கிறார்.
அதற்கு பல பெண்கள் தங்களுடைய வலிகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கூற நீயா நானா அரங்கமே சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். சமுதாயத்தில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளுக்கு தகுந்த மாதிரிய இங்கே விவாதங்கள் நிகழ்ந்து வருவதால் இந்த நிகழ்ச்சி பத்து வருடங்களுக்கு மேலாக ரசிகர்களின் நன்மதிப்பை பெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கோபிநாத் இரு பக்க நியாயங்களையும் கேட்டு அதற்கு தகுந்த மாதிரி சரியான முடிவுகளை துணிச்சலாக பேசுவது அதிகமான ரசிகர்கள் ரசிக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கும் கோபிநாத்துக்கும் கிடைக்கும் ஆதரவு காரணமாகவே இந்த நிகழ்ச்சி இத்தனை வருடங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
அதுபோல நீயா நானா நிகழ்ச்சியில் பல சுவாரசியமான நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்வது வழக்கமானது தான். சில மாதங்களுக்கு முன்பு
தந்தை மகளின் பாசம் வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அதிலும் கோபிநாத் தந்தைக்கு ஆதரவாக பேசிய வார்த்தைகளை அதிகமான பிரபலங்கள் வரைக்கும் பாராட்டி கொண்டிருந்தனர்.
அதுபோல வாடகை தாய் பிரச்சனை, வீட்டில் வாடகை இருப்பவர்களுக்கும், வீட்டு ஓனர்களுக்கும் இருக்கும் பிரச்சனை என இங்கே பல சமுதாய பிரச்சனைகள் விவாதிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் சமையல் வேலை செய்பவர்கள் சமையல் வேலைக்கு பணி அமர்த்தியவர்கள் என இரண்டு அணியாக கலந்து கொண்டு இருக்கின்றனர்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இதே தலைப்பில் விவாதம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான இரண்டாவது பிரமோவில் கோபிநாத் சமையல் வேலை செய்யும் பணி பெண்களின் சொல்லப்படாத வலிகள் என்ன? என்று கேட்க, அதற்கு ஒரு பெண் சமைச்சிட்டீங்களா, போயிட்டு வாங்கன்னு சொல்லிடுவாங்க.. சாப்டீங்களான்னு பேச்சுக்கு கூட கேட்க மாட்டீங்க சாப்பாடு தரவும் மாட்டாங்க என்று தன்னுடைய வேதனையை கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து இன்னொரு பெண் நேரத்திற்கு சாப்பிட முடியாது சார். ஏன்னா அவங்களே சாப்பிடுவதற்கு 11 மணிக்கு மேல தான் சாப்பிடறாங்க. அதனால நம்ம சாப்பிட முடியாது என்று சொல்கிறார். அடுத்ததாக இன்னொரு பெண், ஒரு வீட்டில் ஒரு மூணு மணி நேரம் வேலை பார்த்தால் அதுவரைக்கும் டாய்லெட், பாத்ரூம் கூட போக முடியாது.
வேலை முடிஞ்சுட்டு வீட்டுக்கு வந்த பிறகு தான் போக முடியும் என்று என்று சொல்லிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோவிற்கு அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் சமையல் வேலை செய்பவர்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கு சாப்பாடு கொடுத்தால் என்ன ஆகிவிடும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

அதே நேரத்தில் இந்த ப்ரோமோவிற்கு ஒரு பெண் கமாண்ட் ஒன்று கொடுத்திருக்கிறார். அதில், கோபி அண்ணா நானும் சமையல் வேலை தான் பார்க்கிறேன். வேலைக்கு போற இடத்துல எதுவும் சாப்பிட மாட்டேன். மூணு இல்லது நாலு மணி ஆனாலும் எனக்கு அல்சர் இருக்குன்னு தெரியும் அப்படியும் சீக்கிரமா விட மாட்டாங்க. நான் வேலைக்கு போனதுக்கு அப்புறம் தான் அவங்க டின்னர் சாப்பிடுவாங்க
ரெண்டு டீ குடிப்பாங்க, அப்புறம் மோர் குடிப்பாங்க, நடுவுல ஸ்நாக்ஸ் சாப்பிடுவாங்க, அதுக்கப்புறம் ரெண்டு மணிக்கு எல்லாம் லஞ்சு சாப்பிடுவாங்க. ஆனா நான் அவசரமா காலையில சாப்பிட்டுட்டு அதோட நாலு மணிக்கு தான் சாப்பிட முடியும் என்று கூறியிருக்கிறார். இந்த கருத்து வெளியிட்ட நபருக்கு அதிகமான ரசிகர்கள் ஆறுதல் கூறிக் கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications