40 வயசுக்கு மேல உள்ள அங்கிள்ஸ்களை கலாய்த்த கோபிநாத்.. நீயா நானாவில் வெடித்த வாக்குவாதம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஏப்ரல் 28ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரம் "மஞ்சும்மல் பாய்ஸ் ஆர்ப்பாட்டமாய் ஊர் சுற்றும் நண்பர்கள் அவர்களால் பாதிப்படையும் பொதுமக்கள்" என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.
அதில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து சுற்றுலா என்கிற பெயரில் செய்யும் அலப்பறையை பற்றி பலர் பெருமையாக பேசிக் கொண்டிருந்த நேரத்தில் எதிர்தரப்பில் இருந்த பொதுமக்கள் அணியினர் பலர் பொதுமக்களின் கஷ்டங்களையும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கோபிநாத் சுற்றுலா செல்லும் இளைஞர்களை விடவும் 40 வயதிற்கு மேலே இருக்கும் அங்கிள்ஸ் செய்யும் அலப்பறை தான் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று கலாய்த்து இருக்கிறார்.

அந்த வகையில் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. அதிலும் அதிகமாக பொதுமக்களின் அன்றாட பிரச்சனைகள் மற்றும் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து தலைப்பிலேயே விவாதங்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் தங்கைகளுக்காக அண்ணன்கள் செய்யும் தியாகங்கள் அதனால் வரும் கஷ்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில் பல தங்கைகள் தங்களுடைய அண்ணன்கள் தங்களுக்கு தியாகம் செய்வதை ஒத்துக்கொண்டாலும் அண்ணன்கள் தங்களுக்கு செய்யும் செயல்களை வேண்டாம் என்று சொல்லாமலேயே அண்ணன்களை தியாகிகள் என்று சொல்லிக்கொண்டு ஏமாளிகளாகவும் மேலும் மேலும் கடன்காரர்களாகவும் தான் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான நிலையில் தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கும் நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் போல ஆர்ப்பாட்டம் செய்து ஊர் சுற்றும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டு இருக்கிறது.
இதில் நண்பர்கள் சந்தோஷமாக ஊர் சுற்றி கொண்டு இருப்பதால் எவ்வளவு சந்தோஷம் மகிழ்ச்சி இருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கும்போது இவர்களுடைய அலப்பறையால் வீட்டில் இருப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வளவு பாதிப்படைகிறார்கள் என்று எதிர் தரப்பில் பலர் பேசியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது வெளியான நான்காவது ப்ரோமோவில் பேசிய ஒருவர் ஒட்டு மொத்தமாக எல்லா குற்றச்சாட்டுகளையும் பசங்க மேல வைக்கிறது சரியில்ல. 40 வயசுக்கு மேல உள்ளவங்க பண்ணுற அட்டூழியம் இருக்கே என்று சிறப்பு விருந்தினராக வந்த நபர் பேச, அப்போது கோபிநாத் அதுவும் ஒரு ஷார்ட்சும் டீ-ஷர்ட்டும் போட்டுக்கிட்டு இந்த அங்கிள்ஸ் எல்லாம் பாய்ஸ் மாதிரி டூர் வருவீங்க பாருங்க...
பசங்களாவது ரோட்டுல ஆடுவாங்க ஆனா இந்த அங்கிள்ஸ் கதவை திறந்து காரில் இருந்து இறங்கும் போதே ஊட்டியே ஆடும். அந்த அளவிற்கு அலப்பறை பண்ணுவாங்க என்று பேசி இருக்கிறார். இந்த கலகலப்பான பிரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் இந்த பிரமோவிற்கு கீழே ரசிகர்கள் அப்போ கோபி அண்ணா உங்களுக்கு வயசு என்ன ஆகிறது? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.
இன்னும் ஒரு சில ரசிகர்கள் கோபி அண்ணா சொல்றது 100% உண்மைதான். சில அங்கிள்ஸ் இளைஞர்களை எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டு, தங்களை இளைஞர்களாக நினைத்துக் கொண்டு அலப்பறை பண்ணுறாங்க என்று சிலர் தங்கள் பங்குக்கு கமெண்டை தட்டி விடுகிறார்கள். ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் இளைஞர்கள் நண்பர்களோடு ஜாலியாக சுற்றுவது ஒண்ணும் தப்பு கிடையாது.
ஆனால் தங்களால் அடுத்தவர்களுக்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது. நடுரோட்டில் நின்று கத்தி கொண்டு இருப்பது. காட்டுக்குள் கண்ணாடி பாட்டிலை உடைத்து போடுவது, எந்த இடத்தில் ஆழம் இருக்கிறது என்று தெரியாமலேயே தண்ணீருக்குள் ஒருவர் மீது ஒருவர் விழுவது போன்ற விபரீத விளையாட்டுகள் வினையாக முடிந்து விடுகிறது என்றும் அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications