அனேகன் படத்தை மிஞ்சிய நீயா நானா.. முன் ஜென்ம ஞாபகங்களை சொன்ன பிரபலங்கள்.. கோபிநாத் இப்படி மாறிட்டாரு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் மார்ச் 17ஆம் தேதிக்கான ப்ரோமோக்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. அதில் இந்த வாரம் நிகழ்ச்சியில் பூர்வ ஜென்ம ஞாபகம் எங்களுக்கு உள்ளது என்று சொல்பவர்களும் அதை மறுப்பவர்களும் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.
அதில் ஒரு பலர் தங்களுடைய பூர்வ ஜென்மம் குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படத்தின் கதாநாயகிக்கு தன்னுடைய பூர்வ ஜென்ம ஞாபகங்கள் வந்து அப்போ அப்போ நினைவுபடுத்தும். அது போல இப்போது சில பிரபலங்கள் எங்களுக்கும் பூர்வ ஜென்ம ஞாபகங்கள் இருக்கிறது என்று சொல்லி பலரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர் ஒவ்வொரு வாரமும் எந்த தலைப்பில் விவாதம் நடைபெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் காரணம் நீயா நானா நிகழ்ச்சியில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளின் தாக்கத்தை பார்த்து அதன் அடிப்படையில் தான் விவாதம் நடைபெறுகிறது.
அந்த வகையில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் பூர்வ ஜென்மம் மீது நம்பிக்கை உள்ளவர்களும் பூர்வ ஜென்ம கருத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் எதிரெதிர் அணியாக கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் பூர்வ ஜென்ம நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று சொல்பவர்களின் கதையைக் கேட்டு ரசிகர்கள் ஆடிப் போய் இருக்கிறார்கள்.
அதில் இந்த வார நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில் ஒரு பெண் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் என்னுடைய ஊரில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. அந்த சிவன் கோவிலை நான் முதல் முறை பார்த்த போது எனக்கு வித்தியாசமாக இருந்தது. நான் கோயிலுக்கு போனதும் அங்கு நானே வேற மாதிரி நிற்பது போன்று உணர்ந்தேன். அப்போது என்னிடம் ஒருவர் இந்த சிவன் எவ்வளவு ஆடம்பரமாக இருந்தார் தெரியுமா? ஆனால் இப்போ இப்படி இருக்கிறார் என்று சொல்கிறார்.

என்னுடைய முற்பிறவியில் நான் சாந்தகுமாரி என்ற இளவரசியாக இருந்திருக்கிறேன் என்று கூறுகிறார். அதுபோல இரண்டாவது ப்ரோமோவில் ஒரு பெண் நாங்க ஜாக்கின்னு ஒரு நாய் வைத்திருந்தோம். பிறகு அந்த நாய் இறந்துவிட்டது. ஆனால் அதே கலரில் மீண்டும் எங்க வீட்டுக்கு வந்தது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதுபோல அதே அணியில் இருந்த இன்னொரு நபர் நான் போன பிறவியில் ராணுவ வீரராக இருந்திருக்கிறேன்.
அப்போது என்னுடைய காலில் குண்டு அடிபட்டு இருக்கிறது. அந்த வலி இன்னமும் எனக்கு இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்க, இன்னொரு நபரும் அந்த குரூப்பில் இருந்து இவங்க சொல்வது போல எனக்கு குரல் மட்டும் கேட்காது. எனக்கு சில காட்சிகளே கண் முன்பு வரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிரணியில் இருப்பவர்களில் பூர்வ ஜென்மத்தில் ஞாபகங்கள் எல்லாம் வருகிறது என்று சொல்பவரே ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோல மூன்றாவது ப்ரோமோவில் ஒரு பெண் நான் போன ஜென்மத்தில் ஒரு பைன் மரமாக இருந்தேன். அந்த நேரத்தில் என்னோடு இருந்த 80 மரங்களை எல்லோரும் வெட்டி விட்டார்கள். என் நான் மட்டும் அந்த இடத்தில் தனி மரமாக இருந்திருக்கிறேன். அதனாலேயே என்னுடைய இந்த ஜென்மத்தில் என்னுடைய மனது எப்போதும் ஒரு தனிமை இருந்து கொண்டே இருக்கும்.
அதற்கு காரணம் என்ன என்பதை நான் புரிந்து கொண்ட போது எனக்கு ஒரு சிலிப்பு ஏற்பட்டது என்று சொல்லி இருக்கிறார். இப்படியாக பலரும் தங்களுடைய முன் ஜென்ம கதைகளை சொல்லிக் கொண்டிருக்க இது குறித்து கோபிநாத் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனால் இப்போது வரைக்கும் வெளியான ப்ரோமோக்களில் கோபிநாத் யாரையும் இடைமறித்து பேசவில்லை. இதனால் ரசிகர்கள் என்ன கோபிநாத் இப்படி மாறிவிட்டார்? எதுவும் சொல்லவில்லையே என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications