நீயா நானா: வருஷத்துக்கு 5 கோடி சம்பளம்! “அவங்களால” தான் விவசாய நிலம் விலை ஏறுது.. அதிர வைத்த பிரபலம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் மார்ச் 31ஆம் தேதிக்கான எபிசோடின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் இந்த வாரம் "கார்ப்பரேட் நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு வெளியே வந்து சொந்த தொழில் செய்பவர்களும், இவர்கள் கார்பரேட் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்தது தவறு என்று சொல்பவர்களும்" இந்த எபிசோடில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் கார்ப்பரேட் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்தவர்கள் பலர் தங்களுடைய நெருக்கடிகள் குறித்து பேச, அதற்கு எதிரணியில் இருந்தவர்கள் இவர்கள் எடுத்த முடிவு ரொம்பவே தப்பு இவங்கள மாதிரி அதிகமா சம்பளம் வாங்கிக்கிட்டு அப்புறம் அந்த வேலையை வேண்டாம் என்று விட்டுட்டு விவசாயம் என்று வந்து விடுவதால் தான் விவசாய நிலங்கள் விலை கூடுகிறது என்று குற்றச்சாட்டு வைத்திருக்கின்றனர். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் இருந்து விவாதிக்கப்பட்டு வந்தாலும் ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு தலைப்பில் சுவாரசியமாக கலந்துரையாடல் செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் கச்சிதமாக நடுநிலையோடு தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த வகையில் இந்த வாரமும் வித்தியாசமான முறையில் ஒரு தலைப்பில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது கார்ப்பரேட் நிறுவனத்தில் பெரிய பதவிகளில் அதிகமான சம்பளத்தில் வேலையில் இருந்தவர்கள். பிறகு அந்த வேலை வேண்டாம் என்று விட்டு வெளியே வந்து பிசினஸ் மற்றும் விவசாயம் செய்து கொண்டு இருப்பவர்கள் ஒரு பக்கமும், இவர்கள் கார்ப்பரேட் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்தது தவறு என்று சொல்பவர்கள் இன்னொரு பக்கமும் அமர்ந்து விவாதிக்கிறார்கள்.
அதில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பலர் நாங்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கியதை விட்டுவிட்டு வெளியே வந்ததற்கு காரணம் அங்கே எங்களுக்கு வேலை மன கஷ்டத்தை கொடுக்கிறது. அதிக நேரத்தில் குழந்தை மற்றும் குடும்பத்தை கவனிக்க முடியாமல் போய்விடுகிறது. அதுபோல நாங்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி இருந்தாலும் எங்களுக்கு விடுமுறை கிடைப்பதில்லை.

இதனாலேயே எங்களால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியவில்லை என்று பல்வேறு காரணங்களை கூறியிருந்தனர். இப்படியான நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் கார்ப்பரேட் நிறுவனத்தில் இருந்து இவர்கள் வெளியே வந்தது தவறு என்ற அணியினர் பேசி இருக்கின்றனர்.
அதில் ஒரு பச்சை கலர் சட்டை போட்ட நபர், "கார்ப்பரேட்டை விட விவசாயம் ரொம்ப சிக்கலானது சார். நான் கார்ப்பரேட்டிலிருந்து விலகித்தான் விவசாயத்துக்கு வந்தேன். ஆனால் இப்போது விவசாயத்தை பார்த்து அதில் இருக்கும் சிக்கலை பார்த்ததும் மீண்டும் நான் கார்ப்பரேட்டுக்கு போய்விடலாம் என்று இருக்கேன்" என சொல்கிறார். அதை தொடர்ந்து அதே அணியில் கருப்பு கலர் சுடிதார் போட்ட ஒரு பெண், "எனக்கு எந்த பிசினஸ் பண்ணனும் என்று தெரியாது? நான் எப்படி பிசினஸ் பண்ண முடியும்?" என்று சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து லாவண்டர் கலர் சட்டை போட்ட ஒரு நபர்," எனக்கு சில வருடங்களுக்கு முன்பு தான் என்னுடைய அடிப்படை தேவைகளையே பூர்த்தியாச்சு. அதற்கு காரணமே எம்எல்சி கம்பெனிதான்" என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக ஒரு நபர் பேசுகிறார் அதுதான் அரங்கத்தில் அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறார். அதாவது அவர் பேசுகையில்," 5 கோடி 10 கோடி சம்பளம் வாங்குறவங்களை கூட்டிட்டு வந்து அதிக விலை கொடுத்து விவசாய நிலத்தை வாங்கி விலையை ஏத்தி விடுறதால தான் பாரம்பரியமுள்ள ஒரு விவசாயி பாதிக்கப்படுகிறார். "

இதற்கு எதிர் அணியில் பதில் சொல்லுங்க? என்று சொல்கிறார். இதற்கு காரணம் இதற்கு முன்பு வெளியான ப்ரோமோவில் ஒரு பெண் நான் மாதத்திற்கு 10 லட்சத்துக்கு மேலே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன். நான் மட்டுமல்லாமல் என்னுடைய கணவரும் வாங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் இருவரும் நாங்கள் ஐடி நிறுவன வேலையை விட்டுவிட்டு இப்போது விவசாயம் செய்கிறோம் என்று பேசி இருந்தார்.
அவரை சீண்டி இந்த நபர் இப்போது இப்படி கேள்வி கேட்டிருக்கும் நிலையில் பலரும் அதுவும் சரிதானே? பரம்பரையாக விவசாயம் செய்து கொண்டிருப்பவர்கள் அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லல் பட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் ஐடி நிறுவனத்தில் ஒரு சில வருடங்களிலேயே குறிப்பிட்ட ஒரு தொகையை சம்பளமாக பெற்று விடுகிறார்கள். பிறகு விவசாயம் பண்ணுகிறோம் என்று பாரம்பரியமாக விவசாயம் செய்து கொண்டிருப்பவர்களை அழிக்கிற மாதிரியே இவர்கள் புதுவித விவசாயம் என்று செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு போட்டியாக பாரம்பரிய விவசாயம் செய்பவர்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் போய்விடுகிறது. உதாரணமாக விவசாயத்திற்கு இப்போது ஆள் கிடைப்பதற்கு அதிக கஷ்டமாக இருக்கிறது. அதே நேரத்தில் அப்படி ஏற்கனவே பணத்தோடு விவசாயம் செய்பவர்கள் கிடைக்கிற ஆட்களுக்கு அதிகமான ஊதியம் கொடுத்து விடுகிறார்கள்.
ஆனால் பாரம்பரியமாக விவசாயம் செய்பவர்களுக்கு அப்படி அதிகமான சம்பளம் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது. அதனால் அவர்களுக்கு ஆட்கள் தட்டுப்பாடு கிடைக்கிறது. இதுபோல பல பிரச்சனைகள் இருக்கிறது. இதை குறிப்பிட்டு நீயா நானா நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இது குறித்து கோபிநாத் என்ன சொல்லப் போகிறார் என்று பார்ப்போம்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications