இறந்த கணவரின் சாம்பலை தின்றாரே நீயா நானா அங்காள ஈஸ்வரி! இப்போ குடும்ப நிலைமை! அவரே வெளியிட்ட வீடியோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நீயா நானா' நிகழ்ச்சி, பலரின் சோகக் கதைகளுக்கும், அதிலிருந்து மீண்டு வந்தவர்களின் நம்பிக்கைப் பயணத்துக்கும் ஒரு பாலமாக அமைந்தது. அப்படி அந்த மேடையில், ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த போட்டியாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த வாழ்க்கைத்துணைகள் குறித்த விவாதத்தில் கலந்துகொண்ட அங்காள ஈஸ்வரி என்ற பெண், தன்னுடைய சோகமான துயரக் கதையால் ஒட்டுமொத்த தமிழகத்தின் மனதையும் உலுக்கினார்.
துயரங்கள் துரத்திய வாழ்க்கை
அங்காள ஈஸ்வரி, குழந்தை பருவத்திலேயே அம்மாவை இழந்து, அதன் பிறகு ஆசிரமத்தில் வளர்ந்தவர். இவருக்கு இருந்த ஒரே உறவுகளான தந்தை, பாட்டி, தம்பி என அனைவருமே அடுத்தடுத்து இறந்த சோகக் கதையை அவர் சொல்லும்போது, காண்போரின் கண்களில் நீர் வழிந்தது.

ஆசிரமத்தில் வளர்ந்த அவர், கல்லூரிப் படிப்பின்போது சந்தித்த ஒருவரின் மாமாவுடன் ஏற்பட்ட நட்பு, பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அந்த ஆணின் குடும்பத்தினர் இவரை மனப்பூர்வமாக ஏற்று, பதிவுத் திருமணமும், ஊரறியத் திருமணமும் செய்து வைத்தனர்.
தற்கொலை வரை சென்ற துயரம்
ஆனாலும், இவர்களின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வெறும் ஒன்றரை மாதத்திலேயே முடிவுக்கு வந்தது. விபத்தில் கணவர் இறந்து போக, தாங்க முடியாத சோகத்தில் அங்காள ஈஸ்வரி தற்கொலை முயற்சி எடுத்தார். மனதின் ஓட்டத்தில், கணவரின் உடலை எரித்த இடத்தில் சென்று, அந்தச் சாம்பலை அள்ளி உடலெல்லாம் பூசி, அங்கிருந்த எலும்புத் துண்டுகளை கொண்டு வந்து வீட்டு பீரோவில் வைத்துப் பித்துப் பிடித்தவர் போல் இருந்தார்!
அதன் பிறகு, அந்த உன்னதமான குடும்பத்தினர் அவரைத் தேற்றிக் கரை சேர்த்து, டீச்சருக்குப் படிக்க வைத்தனர். இவ்வளவு நடந்தும், அந்த மாமியார் குடும்பம் மனம் தளரவில்லை. முதல் கணவரின் சொந்தத் தம்பியையே அங்காள ஈஸ்வரிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து ஒன்பது வருடங்கள் கடந்த நிலையிலும், இவருக்குக் குழந்தை இல்லை என்ற பேச்சுகள் இருந்தாலும், அவருடைய குடும்பத்தினர் அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள் என்ற தகவலை நீயா நானா மேடையில் அவர் பகிர்ந்து கொண்டது, பலருக்கும் ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது.
உடைந்த வீட்டில் உன்னதமான மாமியார்
நீயா நானா நிகழ்ச்சிக்குப் பிறகு, இப்போது அங்காள ஈஸ்வரி, தன்னுடைய சொந்த குடும்பத்தைப் பற்றிய வீடியோக்களை வெளியிட்டு, பலருக்கும் உத்வேகத்தைக் கொடுத்துள்ளார்.
சிங்கப் பெண்
நடன ஆசிரியராக (டான்ஸ் டீச்சர்) இருக்கும் அங்காள ஈஸ்வரி, தன்னை 'அம்மாவாகவும், ஒரு சிங்கப் பெண்ணாகவும்' உலகத்திற்குக் கொண்டு சென்றவர்கள் தன்னுடைய மாணவிகள் தான் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இவருக்குக் குழந்தை இல்லாவிட்டாலும், தன்னுடைய நாத்தனாரின் பேரன்தான் தன்னை 'அம்மா' என்று அழைக்கும் மகன் என்று, அந்தக் குழந்தையின் புகைப்படத்தையும் பாசத்துடன் பகிர்ந்துள்ளார்.
மாமியார் சண்முகம் அம்மாள்
இவருடைய வீடு, கான்கிரீட் எல்லாம் உடைந்து போய் ஒழுகும் நிலையில் தான் இருக்கிறது. பெரிய அளவில் வசதி இல்லை. ஆனாலும், அங்காள ஈஸ்வரியின் மாமியார் சண்முகம் அம்மாள், தன்னுடைய மகனுக்கு எந்தவித வரதட்சணையும் இல்லாமல், மாற்று சமூகத்துப் பெண்ணை (அங்காள ஈஸ்வரியை) மணமுடித்து வைத்திருக்கிறார்! வரதட்சணைக் கொடுமைகள் காரணமாகப் பலர் இறந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சண்முகம் தாயைப் போன்ற பெண்கள் இந்த உலகத்திற்கே ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்கள்.
தன் மாமியாரின் தோட்டத்தில் வேலை செய்யும் வீடியோக்களையும் பகிர்ந்து வரும் அங்காள ஈஸ்வரி, நீயா நானா நிகழ்ச்சிக்குப் பிறகு, தன்னுடைய இரண்டாவது கணவரோடு நெருக்கம் ஏற்பட்டதாகவும், "அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று சொன்னது போல, இப்போது எங்கள் இருவருடைய வாழ்க்கையும் தொடங்கி இருக்கிறது" என்று சந்தோஷமாகப் பேசியிருக்கிறார்.
துயரங்களைக் கடந்து, உடைந்த ஒரு வீட்டில், உன்னதமான ஒரு குடும்பத்தின் அன்பால் கரை சேர்ந்திருக்கும் அங்காள ஈஸ்வரியின் இந்த வாழ்க்கைப் பயணம், பலரின் கண்களைக் குளமாக்கியதோடு மட்டுமல்லாமல், நம்பிக்கையின் ஒளியையும் ஏற்றி இருக்கிறது. வாழ்க அங்காள ஈஸ்வரியின் புதிய வசந்த வாழ்க்கை!
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications