“நீயா நானா முழுக்க ஸ்கிரிப்ட்!” கோபிநாத் இதற்காக தான் இப்படி பண்ணனாரு! ஜனனியின் பரபரப்பு பேச்சு!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகள்ல ஒண்ணுதான் 'நீயா நானா'. இந்த நிகழ்ச்சியைப் பல வருஷங்களா கோபிநாத் தொகுத்து வழங்கிட்டு வர்றார். நாட்டுல நடக்கிற பல விஷயங்கள, விவாதமா மாத்தி மக்கள்கிட்ட கொண்டு போறதுதான் இந்த ஷோவோட ஸ்பெஷல். அப்படி, சமீபத்துல போன வாரம் ஒளிபரப்பான ஒரு விவாதம், இப்போ சமூக வலைத்தளங்களையே புரட்டிப் போட்டுருக்கு.
அந்த விவாதத்தோட தலைப்பு, 'தெரு நாய்கள் இல்லாத நகரம் வேணுமா, இல்ல தெரு நாய்களுக்கும் நகரத்துல உரிமை இருக்கா?' என்பதுதான். இந்த விவாதத்துல, சினிமா பிரபலங்கள், யூடியூப் பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள்னு பல தரப்பட்டவங்க கலந்துக்கிட்டாங்க.

அம்முவும், படவா கோபியும்
நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு, அதுல நாய் பிரியர்களுக்கு ஆதரவாப் பேசின சில பிரபலங்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள்ல கடுமையான விமர்சனங்கள் வர ஆரம்பிச்சுடுச்சு. குறிப்பா, நடிகை அம்மு மற்றும் படவா கோபி ரெண்டு பேருமே, தாங்கள் பேசியது முழுசா ஒளிபரப்பாகல, எடிட்டிங்ல தப்பா காட்டிட்டாங்கன்னு ஆதங்கப்பட்டாங்க. இந்த விவாதத்துல, ஒரு குழந்தையை நாய் கடிச்சு இறந்தப்ப, அந்தத் தந்தையோட சோகத்தைக் கூட மதிக்காம, நாய்கள் பக்கம் நின்னு பேசினதுதான் மக்களோட கோபத்துக்குக் காரணம்.
இது குறித்துப் பேசிய நடிகர் அருண் கூட, 'கண்ணீருக்கு முன்னாடி பேசத் தெரியாதா? எடிட் பண்ணிட்டாங்கன்னு புலம்பறதுல அர்த்தமில்லை'ன்னு காட்டமா பேசியிருந்தார். இந்த சர்ச்சை ஓய்ந்துபோகுமான்னு பார்த்தா, இப்போ இன்னொரு பிரபலமும் இந்த விவகாரத்துல குதிச்சிருக்காங்க.
யூடியூப் பிரபலம் ஜனனி
அவர் வேற யாரும் இல்லை, நமக்கு எல்லாரும் தெரிஞ்ச யூடியூப் பிரபலம், 'எனக்கு 20 உனக்கு 23' வெப் சீரிஸ் நடிகை ஜனனிதான். இந்த நிகழ்ச்சியில ஜனனியும் கலந்துக்கிட்டாங்க. ஆனா, 'நிகழ்ச்சியில சும்மாவே இருந்தேன், பேசவே இல்லை'ன்னு சொல்லி மீம்ஸ் போட்டு இருந்தீங்கன்னு அவரே ஒரு வீடியோல சொல்லிருக்கார்.
ஜனனி என்ன சொல்றார்னா: "ஆமா, நானும் அந்த நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். நீங்க பார்த்ததுல நான் பேசவே இல்லைன்னு மீம்ஸ் போட்டு இருந்தீங்க. ஆனா, ஷோ ஆரம்பிச்சு 10 நிமிஷத்துலயே எங்களுக்குத் தெரிஞ்சுபோச்சு. இது முழுக்க முழுக்க டி.ஆர்.பி-க்காக ஸ்கிரிப்ட் பண்ண ஷோன்னு!"
அவர் தொடர்ந்து, "இதுல நான் பேசி மட்டும் என்ன ஆகப் போகுது? 8 மணி நேரம் எடுத்த ஷோவை, வெறும் 45 நிமிஷத்துக்கு எடிட் பண்ணிப் போட்டுருக்காங்க." அதுமட்டுமில்லாம, "நாங்க சொன்ன முக்கியமான தகவல்களைக்கூட அவங்க ஏத்துக்க விரும்பல. தெரு நாய்களுக்கு எதிராப் பேசினவங்களோட கருத்துக்களை மட்டும்தான் தெளிவா காட்டி இருந்தாங்க"னு ஜனனி ஆதங்கப்பட்டிருக்கார்.

கோபிநாத் தவறில்லை
இந்த விவாதத்துக்குப் பிறகு, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கோபிநாத் மீது பலரும் குற்றச்சாட்டுகளை வைச்சுட்டு இருக்காங்க. ஆனா, ஜனனி அவரைப் பத்தி என்ன சொல்றார்னா, "இதுல கோபிநாத்தை சொல்லியும் தவறில்லை. அவரே டாக் பேக் கேட்டுதான் பேசிக்கிட்டு இருக்கார்"னு சொல்லி இருக்கார். இதனால, இந்த ஷோவின் நோக்கம் ஒரு விவாதம் இல்ல, அது வெறும் டி.ஆர்.பி-க்கான ஒரு நாடகம்ங்கிறது ஜனனி பேச்சில இருந்து தெரிய வந்திருக்கு.
கடைசியா, ஜனனி ஒரு கோரிக்கை வச்சிருக்கார். "இந்த மாதிரி விவாத நிகழ்ச்சிகளை நேரடியா (லைவ்) ஒளிபரப்பு பண்ணணும். அப்போதான் மக்கள் உண்மையை நேரடியா பார்ப்பாங்க. இப்படி எடிட் பண்ணி, எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்களோ அதை மட்டும் காட்டி மக்களுக்குத் தவறான தகவலைக் கொடுக்க மாட்டாங்க"னு சொல்லி முடிச்சிருக்கார்.
மொத்தத்துல, இந்த விவகாரம், தெரு நாய்கள் பற்றிய பிரச்சனையை விட, டி.வி. நிகழ்ச்சிகளின் நம்பகத்தன்மை பற்றிய ஒரு பெரிய விவாதத்தைத் தொடங்கி வச்சிருக்கு.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications