Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீயா நானாவில் அவங்களை அடிக்க போயிட்டேன்.. அப்போ புரிதல் இல்ல.. கோபிநாத் மன்னிப்பு கேட்டாரு! தினகரன் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் நாங்க மன்னர் பரம்பரை என்று பேசி பிரபலமடைந்த தினகரன் சமீபத்தில் மீண்டும் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறப்பால் அனைவரும் சமம் என்று பேசியிருந்தார். இவருடைய வீடியோ ட்ரெண்டானதை தொடர்ந்து நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வுகள் குறித்தும் கோபிநாத் தன்னிடம் மன்னிப்பு கேட்டது குறித்தும் தினகரன் பேசியிருக்கிறார்.

"விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சி பல சமயங்களில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் இருந்து பல்வேறு விவாதங்களை இந்த நிகழ்ச்சி நடத்துகிறது. சில வருடங்களுக்கு முன்பு, 'ஜாதி பெருமை' பற்றி ஒரு விவாதம் நடந்தது. அதில் தினகரன் என்பவர் "நாங்கள் மன்னர் பரம்பரை" என்று பேசினார். "எங்கள் ஜாதியைப் பற்றி பேசும்போது, எனக்கு மீசை முறுக்கத் தோன்றும், திமிராக நடப்பேன், கண்களில் கர்வம் வரும், கம்பீரமாக உணர்வேன், மன்னர் போல நடப்பேன்" என்றும் அவர் கூறினார். இது பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. எதிர் தரப்பில் இருந்த தங்கம் என்ற பெண், "நீ பேசுவது தப்பு, உன்னை ஜாதி கட்சி தலைவர்கள் தவறாக வழி நடத்துகிறார்கள்" என்று கூறினார். அந்த எபிசோடு பெரிய அளவில் வைரலானது.

Neeya Naana Gopinath vijay tv

நீயா நானா தினகரன்

தாங்கள் மன்னர் பரம்பரை என்றும் அதனால் எங்களுடைய ஜாதியை பற்றி பேசும்போது எனக்கு மீசையை முறுக்க தோன்றும், திமிராக நடக்க தோன்றும், என்னுடைய கண்களில் ஒரு கர்வம் வரும், கம்பீரமாக நான் என்னை உணருவேன், எங்களுடைய நடை மன்னர் போல இருக்கும் என்றெல்லாம் பேசி இருந்தார். அது பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. அப்போது எதிர் தரப்பில் இருந்த ஒரு பெண் தங்கம் நீ பேசுவது தப்பு, உன்னை ஜாதி கட்சி தலைவர்கள் தவறாக வழி நடத்துகிறார்கள், இளைஞர்களிடம் ஜாதி பெருமையை பேசி அவர்களை பயன்படுத்துகிறார்கள் என்று பேசி இருந்தார். அந்த எபிசோடு பெரிய அளவில் வைரல் ஆனது.

நீயா நானா பிரபலம்

சமீபத்தில், தினகரன் மீண்டும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். "பிறப்பால் அனைவரும் சமம்" என்று பேசினார். "இந்த நிகழ்ச்சியில் பேசியது என்னை பெரிய அளவில் ட்ரோல் செய்தது. ஆறு மாதமாக வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. யார் என்று தெரியாதவர்கள் எல்லாம் போன் செய்து மிரட்டினார்கள். அதற்குப் பிறகு வாழ்க்கையில் பல மாற்றம் நடந்தது. சில வருடங்களாகத்தான் எதார்த்தமான வாழ்க்கையை புரிந்து கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.

அம்பேத்கர் புத்தகம்

"இப்போது அம்பேத்கர் புத்தகம் படிக்கிறேன். பிறப்பால் அனைவரும் சமம் என்று என் மனம் ஏற்றுக்கொண்டது. இதை புரிந்துகொள்ள இத்தனை நாட்கள் ஆகிவிட்டது" என்று எமோஷனலாக பேசினார். இந்த வீடியோ மீண்டும் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நீயா நானா நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்று பேசியிருக்கிறார்.

ஜாதி பெருமை

தினகரன் மேலும் கூறுகையில், "ஆரம்பத்தில் நான் ஜாதி பெருமை பற்றி பேசிக் கொண்டிருந்தேன். நான் பேசுவதுதான் சரி என்று நினைத்தேன். ஆனால் அது எவ்வளவு தவறு என்று புரியவில்லை. தங்கம்னு அந்த அக்கா அட்வைஸ் செய்தாங்க. நான் அவங்களை அடிக்கப் போயிருந்தேன். அந்த காட்சிகள் எபிசோடில் ஒளிபரப்பவில்லை.

கோபிநாத் சொன்ன வார்த்தை

கோபிநாத் உட்பட எல்லோரும் என்னை வார்ன் செய்தார்கள். ஒரு ஆறு மாதம் கழித்து சென்னையில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஹோட்டலில் கோபிநாத் சார் என்னை பார்த்து, "நீ தினகரன் தானே" என்று கேட்டார். "சார், அந்த நிகழ்ச்சியில் நான் பேசியது வைரலாகிவிட்டது. எல்லோரும் ட்ரோல் செய்து திட்டுறாங்க" என்று சொன்னேன். அதற்கு அவர், "ஸாரிடா, இது இப்படி போகணும்னு நினைக்கல" என்று கூறினார். அது எனக்கு மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியது" என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்."

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+