நீயா நானாவில் பலராலும் பாராட்டப்பட்ட அந்த மாமியார் இவங்கதான்! இவரை பார்த்து பலரும் கத்துக்கணும்
சென்னை: இந்த வாரம் வந்த நீயா நானா நிகழ்ச்சியை பார்த்ததும், பலருக்கும் மனசுக்குள்ள ஒரு பெரிய நிம்மதி! ஏன்னா, இந்த எபிசோட் முழுக்க முழுக்க நிஜத்தோடு பயணிச்சது. "ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள்" மற்றும் அவர்களின் "அன்பு கரங்களைப் பற்றிய கடவுளின் தூதர்கள்" பத்தின டாபிக், உண்மையிலேயே நம்ம சமுதாயத்தோட இன்னொரு பக்கத்தை ஆழமாக புரட்டி போட்டிருச்சு.

மனதிலிருந்து பேசும் கோபிநாத்
இந்த மாதிரியான உணர்வுப்பூர்வமான டாபிக்குகளைக் கையாளும் போது, கோபிநாத் அடிச்சுத் தூள் கிளப்பிடுவார். ஒரு மனுஷன், ஒரு விஷயத்தை எப்படி மனதிலிருந்து பேசணும், எப்படி அறிவுறுத்தணும்னு பக்காவாகக் காட்டுவார்.
இந்த நிகழ்ச்சி முழுக்க, வந்திருந்த அத்தனை பேரும் மனசிலிருந்து பேசினாங்க. அவங்க கடந்து வந்த பாதைகள், வலியெல்லாம் உண்மையிலேயே நெகிழ்ச்சியோட இருந்துச்சு. ஆதரவில்லாமல், ஆசிரமத்தில் வளர்ந்த அந்தச் சகோதர, சகோதரிகளின் கரம் பற்றி, அவங்களுக்குத் துணையா வந்த கணவன்மார்களும், மனைவிகளும் நிஜமாகவே கடவுள்களைப் போலத்தான் தெரிஞ்சாங்க என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.
கோபிநாத், நிகழ்வின் நடுவிலேயே ஒரு டீச்சரோட மாமியார் சண்முகத்தம்மாளுக்கு பரிசு வழங்கியது எல்லாம், எந்தப் பாசாங்கும் இல்லாத நிஜமான பாசமாக தெரிந்தது. அந்தப் பரிசு வழங்கிய விதம், அந்தக் குடும்பத்தின் பெருந்தன்மையைக் கொண்டாடியது!
ஆண்களை பற்றிய புதிய புரிதல்
குறிப்பாக ஆண்கள் குறித்து பலருடைய பார்வைக்கு இந்த நிகழ்ச்சி பெரிய மாற்றத்தைக் கொடுத்திருக்கு. ஆசிரமத்தில் வளர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து, அவளுடைய கடந்த காலத்தை ஒரு குறையாகவும் நினைக்காமல், முழு மனதோடு ஏற்றுக் கொண்ட அந்த ஆண் தேவதைகளின் பரந்த மனப்பான்மை வியக்க வைக்கிறது. அதாவது ஒரு பெண் ஆதரவற்றோர் ஆசிரமத்தில் வளர்ந்திருக்கிறார். அவர் பிறந்த சில வருடங்களிலேயே அவருடைய அம்மா இறந்து விட்டாராம். அதற்குப் பிறகு அவருடைய அப்பா இவரை கொண்டு ஆசிரமத்தில் விட்டிருக்கிறார். அடுத்த சில மாதங்களில் அவருடைய அப்பாவும் இறந்து விட்டாராம். பிறகு ஆசிரமத்திற்கு இவரே வந்து பார்த்து போயிருந்த அவருடைய பாட்டி, தாத்தா, தம்பி எல்லோருமே அடுத்தடுத்து இறந்து போய்விட்டாராம்.
இவர் யாரும் இல்லாமல் தனியாக அங்கு வளர்ந்து இருக்கிறார். படிப்பு முடித்ததும் ஒருவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். ஆனால் அவரும் திருமணம் ஆன ஒன்றை மாதத்தில் இறந்து போய்விட்டாராம். அதுவும் கிராமத்தில் இவர் திருமணம் செய்து கொண்டு போயிருக்கிறார் அப்படிப்பட்ட சூழ்நிலையில் அங்கிருப்பவர்கள் பலரும் இந்த பொண்ணு ராசி இல்லாதவ என்று ஏளனமாக பேசி இருக்கிறார்கள். ஆனால் அந்த பெண்ணின் மாமியார் தன்னுடைய இன்னொரு மகனுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்து நீ எங்கேயும் போக வேண்டாம் என்கூடவே இரு என்று சொல்லிவிட்டாராம்.
திருமணத்திற்கு பிறகு அந்த பெண்ணுக்கு 9 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லையாம். இது குறித்து கூட சிலர் இந்த பெண்ணை வசைப்பாடி வருகிறார்கள் ஆனால் அதற்கும் அந்த மாமியார் நான் சாகறதுக்குள்ள உனக்கு குழந்தை பிறக்கும் அந்த குழந்தையை எடுத்து நான் கொஞ்சி விளையாடுவேன் அப்படி அந்த குழந்தை பிறக்கலானாலும் பரவாயில்லை இருக்கிற சொத்தை வித்து நீங்க சாப்பிட்டு நல்லா இருங்க என்று சொல்லி இருக்கிறாராம். இதை கேட்டதும் இப்படியும் மாமியார் இருக்கிறாரா என்று கோபிநாத் அந்த மாமியாருக்கு பரிசு வழங்கி இருந்தார். இப்போது அந்த பெண்ணோடு அவருடைய மாமியார் சேர்ந்தெடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அவர் ஒரு youtube சேனலில் பேசி இருந்தார். அந்த மாமியார் பேசும் போது என்னுடைய மருமகளை பற்றி யார் யாரோ என்னவெல்லாம் பேசினாங்க ஆனால் நான் எப்போதும் அவளை விட்டுக் கொடுக்கவே மாட்டேன். எங்க வீட்டு மகள் தான் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் இன்னொரு மணிமகுடம்ன்னா, அது அந்த டீச்சரின் கணவரும், அவரோட 75 வயசு மாமியார் சண்முகத்தம்மாளும் தான்! படிக்காத மேதையான அந்த மாமியாரின் பெருந்தன்மை, ஒரு மகளைப் போல ஆசிரமப் பெண்ணை ஏற்றுக்கொண்டது, உண்மையிலேயே வியக்க வைக்கிறது.
நவீனத்துவம் என்பது மாநகரங்களின் ஏகபோக குணம்ங்கிற மாயபிம்பத்தை இந்த எபிசோட் சுக்குநூறாக உடைச்சுப் போட்டுடுச்சு! தமிழகத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் சண்முகத்தம்மாளை போன்ற புரட்சிப் பெண்மணிகள், சத்தமில்லாமப் பல தியாகங்களோட வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. இவங்கதான் உண்மையான வீரத் தமிழச்சிகள்!
போலித் திரைபிம்பங்களையும், போலிப் புரட்சியாளர்களையும் கொண்டாடுற இந்த இளைய தலைமுறை, இந்த எளிய மனிதர்களின் வாழ்வியல் முறையையும், அவர்களுடைய பாசங்கலந்த புரட்சியையும் பார்த்து ஏதாவது கத்துக்கணும். இந்தக் கேமரா வெளிச்சம், இந்த எளிமையான மனிதர்களை மாற்றிவிடக் கூடாதுன்னுதான் மனசு வேண்டிக்கிடுது.












Click it and Unblock the Notifications