கோபிநாத் இதை மறச்சிட்டாரு.. மாற்று திறனாளி வீரர்கள் சொன்ன வார்த்தை.. கண் கலங்க வைத்த தருணம்
சென்னை: நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த கோபிநாத்துக்கு பிரபல சேனல் ஒன்றில் பாராட்டு விழா நடத்தி இருக்கிறார்கள். அப்போது அந்த விழாவில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பாரா ஒலிம்பிக் விளையாட்டில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதோடு அந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் தங்களுக்கு கோபிநாத் செய்த உதவிகளை சொல்லி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர். அதோடு கோபிநாத் தங்களுக்கு செய்த உதவியை வெளியே சொல்ல கூடாது என்று சொல்லுகிறார் என்றும் போட்டுக் கொடுத்திருக்கின்றனர். இந்த நிலையில் கோபிநாத் இப்படிப்பட்டவரா என்று பலரும் வியந்து பார்த்து வருகின்றனர். அப்படி என்னதான் நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் பல வருடங்களாக தொகுப்பாளராக இருந்து வரும் கோபிநாத் இப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நிகழ்ச்சி தொகுத்து வழங்கினால் அது கோபிநாத் போல இருக்க வேண்டும் என்றும் பலர் ரசிகர்கள் கருத்து கூறும் அளவிற்கு அதிகமான ரசிகர்களின் நன்மதிப்பை கோபிநாத் பெற்றிருக்கிறார்.
தனக்கு என்று ஒரு பாணியை உருவாக்கி அதுபடியே நீயா நானா நிகழ்ச்சியில் இரண்டு தரப்பு மக்களின் கருத்தை கேட்டு நச்சென்று தீர்ப்பு வழங்கி ரசிகர்களை அசத்தி கொண்டிருக்கும் கோபிநாத் பல வருடங்களாக தொகுப்பாளராக இருக்கும் நிலையில் இப்போது அவருக்கு பிரபல சேனல் ஒன்றில் பாராட்டி விழா நடத்தி இருக்கிறார்கள். அதில் கோபிநாத் பற்றி பல பிரபலங்கள் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் பாரா ஒலிம்பிக் விளையாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி வீரர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எங்களுக்கு ஆரம்பத்தில் உதவி தேவைப்பட்டபோது கோபிநாத் இடம் நாங்கள் கேட்டோம். உடனே அவர் விளையாட்டுக்கு என்றால் என்னால் முடிந்ததை நான் செய்வேன் என்று பெரிய அளவில் உதவி செய்தார். அதோடு பல பேரிடமும் கேட்டு உதவிகளை எங்களுக்கு செய்திருந்தார்.
அதனால் தான் எங்களால் பாரா ஒலிம்பிக் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிந்தது என்று தாங்கள் அங்கு வாங்கிய மெடல்களை கோபிநாத் கையில் கொடுத்து அதை தங்களுடைய கழுத்தில் போட சொல்லி கேட்டுக்கொள்ள அதற்கு கோபிநாத் சந்தோஷமாக அனைவருக்கும் மெடலை போட்டு இருக்கிறார். அதோடு கோபிநாத் செய்த உதவியை வெளியே சொல்ல கூடாது என்று ஆரம்பத்திலேயே எங்களிடம் சொல்லி இருந்தார்.
ஆனால் இன்று நாங்கள் பல பேருக்கு தெரிவதற்கு காரணமாக இருந்த கோபிநாத் பற்றி நாங்கள் ரகசியத்தை உடைத்து விட்டோம் என்று அந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி வீரர்கள் பேசியிருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் அதிகமானோர் கோபிநாத்தை பாராட்டி வருகின்றனர். அதுபோல இன்னொரு வீடியோவில் கூட நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கபடி விளையாட்டு வீராங்கனை தனக்கு படிப்பதற்கு சரியான வசதி இல்லை.
தனக்கு காலேஜ் பீஸ் கட்டினால் நான் காலேஜ் மூலமாக கபடியில் சாதித்து விடுவேன் என்று சொல்லி இருந்ததை தொடர்ந்து கோபிநாத் அந்த பெண்ணுக்கு மட்டுமல்லாமல் அவரோடு சேர்ந்த 11 பெண்களுக்கு கல்லூரிக்கு சென்று பீஸ் கட்டியதாகவும் அந்த மேடையில் அந்தப் பெண்கள் பேசியிருந்தனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications