நீயா நானா கோபிநாத் எதிர்பார்க்கல.. விவாதம் தந்த விவாதம்! பெண்களுக்கே அதீத எதிர்பார்ப்புகள்: பிரபலம்
சென்னை: 90கள் காலகட்டம்வரை பெண்கள் அளவுக்கு அதிகமாக மோசமாக நடத்தப்பட்டார்கள்.. படிப்பறிவும் இல்லாமல், கணவனால் விரட்டி அடிக்கப்பட்டுவிடுவோமா என்ற பீதியிலேயே வாழ்ந்தனர்.. பொருளாதாரமும் பலவீனமாக இருந்தது.. இதன் காலச்சுழற்சிதான் இப்போது நடந்து வருகிறது. மீண்டும் ஒரு காலசுழற்சி நடக்கும்" என்று பத்திரிகையாளர் உமாபதி சமூகத்தின் மாற்றங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
நீயா நானாவின் கடந்த ஏப்ரல் 27ம் தேதி எபிசோட் ரசிகர்களிடம் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.. இதில், நகரத்து ஆண்களை திருமணம் செய்ய விரும்பும் பெண்கள் மற்றும் கிராமத்து ஆண்களின் அம்மாக்கள் கலந்துகொண்டு உரையாடினார்கள்.

நகரத்து ஆண்களை திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்களிடம் ஒரு பட்டியலின ஆணை கல்யாணம் செய்துகொள்வேன் என்பவரை கோபிநாத் கை தூக்கச் சொன்னார். ஆனால், ஒருவர் கூட கை தூக்காததைப் பார்த்து கோபிநாத் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தார்..
சமூகம் - பிற்போக்குவாதிகள்
கிராமத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்று சொல்லும் நீங்கள் ஏன் ஜாதியை விட்டு வெளியே வருவதில்லை? ஒரு சமூகம் தான் உங்களை குழந்தை பெற்றுக்கொள்ள வற்புறுத்துவதாக சொல்லும் நீங்களே, சமூகத்தையே காரணம் காட்டுகிறீர்கள். கிராமத்தில் இருப்பவர்கள் எல்லாம் பிற்போக்குவாதிகள் என்று கூறும்நீங்கள் யார்? இப்படித்தான் இருக்க போகிறீர்கள் என்றால் நகரம், கிராமம் இரண்டுமே ஒன்றுதான்" என்று ஆவேசமாக கூறியிருந்தார்.
இந்த விவாதம் சோஷியல் மீடியாவிலும் எதிரொலித்து வருகிறது.. இந்த விவாத நிகழ்ச்சி, மீண்டும் விவாதமாக உருவெடுத்துள்ளது..
Retroluxe என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் உமாபதி, தகுதிக்கு மீறி ஆசைப்படும் ஒருசில பெண்கள் பற்றிபல்வேறு விஷயங்களை சொல்லியிருக்கிறார்.
அளவுகடந்த ஆசைகள்
"அதிகபட்சமாக ஒரு விஷயம் நடக்கிறதென்றால், அதுதான் சமூகத்தில் பேசப்படும்.. மீடியாவில் அதை டாபிக்காக எடுத்தால்தான், மக்களும் பார்ப்பார்கள்.. பெண்கள், ஆண்கள் என்று பிரித்து பார்க்காவிட்டாலும்கூட, தகுதிக்கு மீறி ஆசைப்படுவதுதான் இங்கே சிக்கலாக உள்ளது.. கிராமத்திலிருந்து ஒரு நகரத்துக்கு குடிபெயர்ந்து செல்வது இயல்பான விஷயம்.
நகர - கிராமத்து வாழ்க்கை
நகர வாழ்க்கைக்கு வாழ அனைவருக்குமே ஆசை இருக்கும். ஆனால், வெளிநாடுகளுக்கு செல்ல விருப்பம் உடையவர்களில் பெண்களின் சதவீதம் அதிகமாக உள்ளது.. ஆண்கள் வெளிநாடு செல்வதாக இருந்தால் விசா எடுப்பது முதல், அனைத்துக்கும் அவர்களே அலைந்து திரிந்து பிறகு வெளிநாடு செல்வார்கள். ஆனால் லிட்டில் பிரின்சஸ் என்று சொல்லக்கூடிய செல்ல மகள்கள் அப்படியில்லை. எளிதாக செல்லவே விரும்புகிறார்கள்.
அதிலும் 50 வயதானாலும், இவர்கள்தான் அவர்கள் வீட்டின் லிட்டில் பிரின்சஸ் ஆகவே இருக்கிறார்கள்.. அதிலும் கிராமத்திலுள்ள சில லிட்டில் பிரின்சஸ்கள் தொல்லை தாங்க முடிவதில்லை.. தன்னை மிகப்பெரிய ஆளாக நினைத்துக்கொண்டு, வருங்கால கணவன் முதல் அனைத்து எதிர்பார்ப்புகளை அள்ளி வீசுகிறார்கள்.. நான் அனைத்து பெண்களையுமே சொல்லவில்லை.
லிட்டில் பிரின்சஸ்
தன்னால் பிறருக்கு என்ன முடியும் என்பதை யோசிக்காமல், தன்னை கணவரும், மற்றவர்களும் எப்படி கவனித்து கொள்வார்கள்? என்றுதான் சில பெண்கள் கணக்கு போடுகிறார்கள்.
கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து வாழ அனைவருக்குமே உரிமை, சுதந்திரம், எண்ணம் உள்ளது தவறில்லை. ஆனால், தங்களிடம் என்ன தகுதி, தராதரம் உள்ளது என்பதை பற்றியும், யோசிக்க வேண்டும்தானே? லிட்டில் பிரின்ஸ்கள் பாத்திரம் கழுவ மாட்டார்கள் என்றால் சரி, ஆனால், பாத்திரமே இல்லாத வீட்டில் இருக்கும் லிட்டில் பிரின்ஸ்களின் அளவுகடந்த ஆசைகளைதான் ஏற்க முடியவில்லை" என்றெல்லாம தெரிவித்துள்ளார்.
90கள் காலகட்டம்வரை பெண்கள் அளவுக்கு அதிகமாக மோசமாக நடத்தப்பட்டார்கள்.. பெரும்பாலும் படிப்பறிவும் இல்லாத 40 வயதுக்கு மேற்பட்ட பெற்றோருமின்றி, உடன்பிறந்தவர்களும் தனித்தனி குடும்பமாகிவிட்ட சூழலில், கணவனே கதி என்று கிடந்தார்கள்.. கணவனால் விரட்டி அடிக்கப்படுவிடுவோமா என்ற பீதியிலேயே வாழ்ந்தனர்..
80கள் வரை பெண்களை கணவன்மார்கள் வெளியே அழைத்துச் செல்லாமலும் இருந்தனர்.. வீட்டு வேலைக்காரிகளைவிட மோசமாக மனைவிமார்கள் நடத்தப்பட்டார்கள். அதற்கேற்றபடி பொருளாதாரமும் அப்போதுவரை பலவீனமாக இருந்தது.. இதன் காலசுழற்சிதான் தற்போது நடந்து வருகிறது.
பெண்ணடிமை
துபாய் மன்னன் ஒரு விஷயம் சொல்லியிருந்தார்.. "அடுத்து வரக்கூடிய தலைமுறை மோசமான விளைவுகளை, கொடுரமான விஷயங்களை துபாயில் சந்திக்க போகிறது.. காரணம், நாங்கள் பிறக்கும்போது, இந்த நாடு வறுமைக்கோட்டில் இருந்தது.. என் அப்பா காலத்தில் மெல்ல வளர்ச்சி பெற்றது. நாங்கள் வந்ததும் உச்சிக்கு கொண்டு வந்தோம். ஆனால், இது எங்கள் பிள்ளைகளுக்கு புரியவில்லை.
ஏனென்றால், நான் பணக்காரன். என் பிள்ளைகள் பிறக்கும்போதே வசதியாகிவிட்டார்கள்.. அவர்களின் பிள்ளைகளும் அதற்கு மேல வசதியாகி விட்டார்கள்.. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால், இந்த நாடு இன்னும் அடிமட்டுத்துக்கு கீழே சென்றுவிடும். அப்போது மீண்டும் ஒரு சுழற்சி வரும். கஷ்டப்பட்டு, அடிமட்டத்திலிருந்து மறுபடியும் உழைத்து எல்லாரும் மேலே வருவார்கள்" என்று துபாய் ஷேக் கூறியிருந்தார்.
இதைதான் மணிரத்னம் ஒரு படத்தில் வசமான வைத்திருப்பார்.. "ஏன் தாத்தா கஞ்சி குடிக்கிறீங்க? என்று சத்யராஜிடம் பேத்தி கேட்கும்.. அதற்கு சத்யராஜ், உன் அப்பா ரொம்ப பணக்காரர்.. ஆனால். என் அப்பா ஏழை என்பதால், கஞ்சி குடிக்கிறேன் என்று எளிமையாக பதில் சொல்லியிருப்பார்..
எனவே, அன்று ஆண்கள் பெண்களை கொடுமைப்படுத்தினார்கள்.. அதனால் இன்று, பெண்களின் ஆதிக்கம் நிறைந்த சூழல் ஆகிவிட்டது.. கொடுமை என்பதைவிட, இதை கொடூரம் என்றே சொல்ல வேண்டும். மீண்டும் ஒரு சுழற்சி கண்டிப்பாக வரும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications