ஆம்புலன்ஸ்ல ரத்த வெள்ளத்தில்.. ஒருவேளை நான் செத்துட்டேனா? கோபிநாத் பகிர்ந்த எமோஷனல் பிளாஷ்பேக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுப்பாளராகவும் நடிகராகவும் கோபிநாத் திரை துறையில் 25 ஆண்டுகள் செய்த சாதனையை பாராட்டி சமீபத்தில் அவருக்கு தனியார் சேனல் ஒன்றில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது கோபிநாத் தான் இன்று இவ்வளவு வளர்ந்ததற்கு காரணம் தன்னை சுற்றி இருக்கும் நண்பர்கள் என்று அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது புகழின் உச்சத்தில் இருக்கும் ஒரு நண்பர் ஆக்சிடென்ட் ஆகி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது தன்னிடம் கேட்ட கேள்வி குறித்து அந்த மேடையில் எமோஷனலாக கோபிநாத் பேசியிருக்கிறார். அது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

 Neeya Naana Gopinath was talking about the friends around him as the reason

அந்த வகையில் கோபிநாத்துக்கு அறிமுகமே தேவை இல்லை. அவர் 2கே கிட்ஸ் முதல் 90ஸ் கிட்ஸ் வரை பலருக்கும் ஃபேவரைட் தான். அதிலும் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி அதிகமான ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கிறார். ஒரே வீட்டில் அப்பா அண்ணன்களில் தொடங்கி குட்டி குழந்தைகள் வரைக்கும் கோபிநாத்தின் பேச்சுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பிரபல சேனல் ஒன்றில் கோபிநாத்தின் 25 வருட கலை பயணத்தை பாராட்டி பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது கோபிநாத்தின் நண்பர்கள் ஒரு சிலர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோபிநாத் பற்றி பேசி இருந்தனர். அதில் கோபிநாத்தின் பள்ளி பருவ நண்பர் ஒருவர் கோபிநாத் ஸ்கூல் படிக்கும்போதே படிப்பில் ரொம்பவும் கெட்டிக்காரர் முதல் பெஞ்சில் முதலிடத்தில் இருக்கக்கூடியவர்

ஆனால் நான் கடைசி இடத்தில் இருப்பேன் அவன் என்னோடுதான் சேர்ந்து சுத்துவான் அதனால் வீட்டில் அதிகமாக திட்டு வாங்கியிருக்கிறான் என்று சில கதைகளை பகிர்ந்து கொண்டிருந்தார். அதை தொடர்ந்து கோபிநாத்தின் கல்லூரி நண்பர்கள் ஒரு சிலர் அந்த நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தனர். கடைசியில் கோபிநாத் அந்த நிகழ்ச்சியில் பேச போயிருந்தார்.

மேடையில் கோபிநாத் பேச போனதும் கர ஓசை அங்கு அதிகமாக இருந்தது. அப்போது மேடையில் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு நண்பரை குறித்து இவன் இருக்கிறானே இவன் பெயர் பாலாஜி இவன் எப்படிப்பட்ட ஆள் என்று தெரியுமா! இவன் காலேஜ் படிக்கும் போதே கோல்டு மெட லிஸ்ட். அதற்கு பிறகு 10, 15 டிகிரி முடித்தான். அதோடு சுந்தர் பிச்சை நிறுவனம் தொடங்கி பல நிறுவனத்தில் சிஏவாகவும் அட்வைஸ்ராகவும் இருக்கிறார்.

கவர்மெண்ட் பேங்கில் கூட அட்வைஸ்ராக இருக்கிறார். அதுபோல இவனுக்கு காலேஜில் கிளாஸ் எடுக்கிறது ரொம்பவே பிடிக்கும். ஃப்ரீயாக இருக்கிற நேரத்தில் காலேஜுக்கு கிளாஸ் எடுக்க போவான் அப்படி ஒரு முறை காலேஜுக்கு போகும்போது இவனுக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது. ஆக்சிடென்ட் ஆனதும் செய்தி எனக்கு வந்தது நான் உடனே அங்கு சென்று ஆம்புலன்ஸில் இவனை தூக்கிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறோம்..

ஒரு கை கட் ஆகி கொஞ்சம் தான் ஒட்டிக்கிட்டு இருக்கு... ரத்தம் வெள்ளத்தில் மிதந்துகிட்டு இருக்கிறான். நாங்க எல்லாம் பதறி அடிச்சு ஆம்புலன்சில் போய்க்கொண்டு இருக்கோம். அவன் மயக்கத்தில் இருந்து திடீரென முழிச்சு மச்சான் ஒரு டீ கிடைக்குமா என்று கேட்கிறான். எனக்கு டக்குனு கோவம் வந்துச்சு, டேய் அறிவு இருக்கா எந்த நேரத்துல என்ன கேக்குற? இப்ப நீ டீ எல்லாம் குடிக்க கூடாதுடா என்று சொல்ல,

 Neeya Naana Gopinath was talking about the friends around him as the reason

அதற்கு டேய் எனக்கு டீ வாங்கி கொடுத்துடு இல்லன்னா நான் செத்து போயிட்டா கூட உனக்கு வாழ்க்கை முழுக்க இவனுக்கு நான் டீ வாங்கி கொடுக்கலையே என்று ஒரு வருத்தம் இருந்துகிட்டே இருக்கும் என்று என்னை மிரட்டுறான். அப்போ இவன் எப்படிப்பட்ட ஆளுனு நீங்க பாத்துக்கோங்க‌.‌. ஆனால் இவன் மருத்துவமனையில் சேர்ந்து 60 நாள் கண்டிப்பாக ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க.

இவனுக்கு வலது கையில் ஆபரேஷன் பண்ணி இருக்கு அதனால் அந்த 60 நாளும் இடது கையில் எழுதுவதற்கு ட்ரைனிங் எடுத்து அவனோட கம்பெனியில் அந்த மாசம் டார்கெட்டை முடிச்சு பாராட்டு வாங்கி இருத்தான். இந்த மாதிரி வில் பவர் உள்ள நண்பர்கள் என்னோடு இருப்பதால்தான் அவர்களுடைய ஆரோவால் நானும் நல்லா இருக்கிறேன் என்று நினைக்கிறேன் என அந்த நிகழ்ச்சியில் கோபிநாத் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+