Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த படத்துல இதை கண்டிப்பா பண்ணுங்க.. நயன்தாரா கணவரிடம் கோபிநாத் வைத்த ‘‘ஓப்பன்” கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நயன்தாரா இன்று சேலத்தில் நடந்த ஒரு தனியார் கல்லூரி விழா ஒன்றில் தன்னுடைய கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவனோடு கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த கோபிநாத் கலந்து கொண்டிருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சானிட்டரி நாப்கின் குறித்து வெளிப்படையாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை தொடர்ந்து பேசிய கோபிநாத் விக்னேஷ் சிவனை பாராட்டி பேசி இருந்தார்.

அதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இனி வரும் அடுத்த திரைப்படத்தில் கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட சீனை வைக்க வேண்டும் என்று தன்னுடைய மனதில் இருக்கும் ஆசையை குறித்து வெளிப்படையாக அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தார். அது குறித்து அதிகமானோர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

 Neeya Naana Gopinaths request to director Vignesh Sivan

இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் ஆக அறிமுகமாகி ஏகப்பட்ட விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அதைத்தொடர்ந்து நானும் ரௌடி தான் என்ற படத்தின் மூலமாக அவருக்கு ஒரு நல்ல பெயர் கிடைத்திருந்தது. அந்த திரைப்படத்தின் அதிகமாக காமெடி காட்சிகளும் சொல்லப்படாத ஒரு காதல் கதையும் ஒளிந்திருக்கும்.

இந்த திரைப்படத்தின் மூலம் தான் நயன்தாராவோடு விக்னேஷ் இவனுக்கு நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு பிறகு காதலாக மாறி இருவரும் தம்பதிகளாக மாறி இருந்தனர். இவர்களுக்கு இப்போது இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றன. திருமணத்திற்கு பிறகு நயன்தாரா திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

கிடைக்கும் நேரங்களில் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளோடு புகைப்படங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட நடிகை நயன்தாரா அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இப்போது ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் அதிகமான விமர்சனங்களையும் நயன்தாரா சந்தித்து வருகிறார்.

 Neeya Naana Gopinaths request to director Vignesh Sivan

இந்த திரைப்படத்தில் சில காட்சிகள் குறித்து நயன்தாராவின் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இறந்த நடிகர் விஜயகாந்தின் இறப்பிற்கு நயன்தாரா வரவில்லை என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதை நேரத்தில் அந்த நிகழ்வை தொடர்ந்து கலைஞர் விழாவில் நயன்தாரா கலந்து கொண்டார். இதுவும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சேலத்தில் இன்று நடந்த தனியார் கல்லூரி விழா ஒன்றில் கணவரோடு கலந்து கொண்டிருக்கிறார். அப்போது நயன்தாரா சமீபத்தில் தொடங்கி இருக்கும் பேமிலி நைன் ப்ராடக்ட் சம்பந்தமாக பெண்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பாக நடத்தப்பட்ட அந்த விழாவில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு விஜய் டிவி புகழ் கோபிநாத் சென்றிருந்தார்.

அந்த நேரத்தில் மேடையில் பேசிக் கொண்டிருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தாங்கள் அறிமுகம் செய்திருக்கும் சானிட்டரி நாப்கின் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அதில் பேசும் போது நயன்தாரா அதிகமாக பீரியட்ஸ் நேரத்தில் கோபப்படுவார். ஆனால் நாங்கள் இப்போது அறிமுகப்படுத்தி இருக்கும் நாப்கின் குறித்து எங்களிடம் பேச வந்தவர்கள் இது பெண்களுக்கு பீரியட்ஸ் நேரத்தில் ஏற்படும் கோபத்தை குறைக்கும் என்று சொன்னார்கள்.

அப்போது கூட நான் நம்பவில்லை பிறகு இதை நயன்தாரா பயன்படுத்தினார். அதற்குப் பிறகு ஒரு சில மாதங்களில் எனக்கு வித்தியாசம் தெரிந்தது. எப்போதும் பீரியட்ஸ் நேரத்தில் சிடுசிடுவென்று இருக்கும் நயன்தாரா அந்த நேரத்தில் எப்போதும் போலவே இருந்து வந்ததை நான் பார்த்தேன். நான் என்னிடம் அந்த நாப்கின் குறித்து பேச வந்தவர்கள் சொன்னபோது நம்பாமல் அது எப்படி ஆட்டோ கண்ணாடியை திருப்பினா ஆட்டோ ஓடும் என்கிற மாதிரி தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் நிஜத்தில் நயன்தாராவிடம் தெரிந்த மாற்றத்தை பார்த்து நான் ஒருவேளை இப்படியும் கூட நடக்குதோ என்று நினைக்கத் தோன்றியது என்று வெளிப்படையாக பேசிக் கொண்டிருந்தார். அதை தொடர்ந்து பேசிய கோபிநாத் நானும் ரவுடிதான் படத்தில் வாய் பேச முடியாத தன் மகளான நயன்தாரா குளித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய அப்பா சானிடரி நட்பினை வாங்கி வைத்துவிட்டு போகும்போது அதை மிகவும் சங்கடபட்டு நயன் எடுப்பது பார்ப்பதற்கு அழகாக இருந்தது.

ஆனால் இனி வரும் உங்களுடைய அடுத்த படத்தில் அப்பா எனக்கு சானிட்டரி நாப்கின் வேண்டும் என்று அந்த மகள் வாய் திறந்து கேட்கும் படி டயலாக்குகளை வையுங்கள். இந்த உலகம் இனி அப்படித்தான் மாற வேண்டும் ..நீங்கள் இப்போது வெளிப்படையாக பீரியட்ஸ் பற்றியும் சானிட்டரி நாப்கின் குறித்தும் பேசியதை பார்க்கும்போது அவ்வளவு இயல்பாகவும் சந்தோஷமாக இருந்தது.

நீங்கள் பேசும்போதெல்லாம் நயன்தாரா சிரித்துக் கொண்டிருந்தார். இதுவே ஒரு நல்ல மாற்றம்தான். இதுபோல இனி எல்லோரும் பீரியட்ஸ் விஷயத்தை பெரிய பிரச்சனை என்றோ அது அசிங்கம் என்றோ நினைக்க கூடாது என்று அந்த நிகழ்ச்சியில் கோபிநாத் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+