அம்மா, அப்பா இறந்துட்டாங்க.. 561 மதிப்பெண்! நீயா நானாவை கலங்க வைத்த மாணவன்.. கடைசியில் நெகிழ்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் 21ஆம் தேதிக்கான எபிசோடின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரம் வறுமையிலும் பெரிய மதிப்பெண்களுடன் ஜெயித்த +2 மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக நீயா நானா நிகழ்ச்சியில் சமுதாயத்தில் நடக்கும் அடிப்படை பிரச்சனைகளில் இருந்து விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் சமுதாயத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கொரிய மோகம் குறித்து விவாதம் நடைபெற்றது. அதில் கொரியன்களை விரும்பும் இளம் தலைமுறைகளும் இது ஆபத்து என்று சொல்லும் பொதுமக்களும் கலந்து கொண்டு விவாதித்தனர்.

இதுபோல அதற்கு முந்தைய வாரத்தில் தனி ஆளாக குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் கலந்து கொண்டிருந்தனர். அதில் பல பெண்கள் தங்களுக்கு ஒரு நாள் விடுமுறை கிடைத்தால் கூட அது பெரிய விடுதலையாக இருக்கும் என்று கண்ணீரோடு பேசியது பார்ப்பவர்களையும் கண்கலங்க வைத்திருந்தது. அதுபோல ஒரு எபிசோடு தான் இந்த வாரமும் நடைபெற இருக்கிறது.
நீயா நானா: இதெல்லாம் ஒரு பெருமையா? கோபிநாத் கேட்ட கேள்வி.. அதிர வைத்த பெண்மணி
நீயா நானா நிகழ்ச்சியில் ஜாலியான எபிசோடுகள் வந்தாலே அடுத்த வாரம் அனைவரையும் கண்கலங்க வைக்கும் எபிசோடு கண்டிப்பாக வந்து விடுகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் கலகலப்பான எபிசோடு இருந்த நிலையில் இந்த வாரம் பலரையும் யோசிக்க வைத்து கண்கலங்க வைக்கும் தலைப்புதான் விவாதிக்கப்படுகிறது. அதிலும் இந்த வாரத்தில் வறுமையிலும் பெரிய மதிப்பெண்களோடு ஜெயித்த +2 மாணவர்களும் அவர்களுக்கு துணையாக இருந்தவர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதில் ஒரு ப்ரோமோவில் ஒரு மாணவன் பேசியதுதான் பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. அந்த மாணவன் நான் 12-ம் வகுப்பில் 600க்கு 561 மதிப்பெண் பெற்று இருக்கிறேன் சார் என்று சொல்ல, அதற்கு கோபிநாத் ஓ அப்படியா அப்பா, அம்மா என்ன பண்றாங்க என்று கேட்க, அதற்கு அந்த மாணவன் அஞ்சு வருடத்திற்கு முன்பு அப்பா இறந்துட்டாங்க. அம்மா இப்போ ஐந்து மாதத்திற்கு முன்பு இறந்து போயிட்டாங்க என்று சொல்ல கோபிநாத் என்னது அம்மாவும் இறந்துட்டாங்களா? என்று அதிர்ச்சி அடைகிறார்.
அதோடு அம்மா இறந்த துக்கத்திலேயும் நீங்க எப்படி படிச்சீங்க தம்பி என்று அந்த மாணவனிடம் கேட்க அந்த மாணவன் சற்றும் மனம் தளராமல் என்ன படிக்க வச்சது ஃபுல்லா டீச்சர் தான் சார் என்று சொல்ல, கோபிநாத் நீங்க எந்த ஸ்கூலில் படிச்சீங்க என்று கேட்க, நான் உள்ளூர்பட்டியில் உள்ள கவர்மெண்ட் ஸ்கூலில் படித்தேன் சார் என்று சொல்ல, கோபிநாத் உள்ளூர் பட்டியில் உள்ள கவர்மெண்ட் ஸ்கூல் ஆசிரியர்கள் எல்லாருக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும் என்று கையெடுத்து கும்பிட்டு இருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications