Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்தரங்கத்தை அம்பலபடுத்துறீங்களே? கோபிநாத் கேட்ட நறுக் கேள்வி.. நீயா நானாவில் திடீர் வாக்குவாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கர்ப்பகால கொண்டாட்டத்தை விரும்பும் பெண்களும் அதை விமர்சிக்கும் நபர்களும் கலந்து கொண்ட விவாதம் நடைபெற்றது. அதில் கர்ப்ப காலத்தை பிரம்மாண்டமாகக் கொண்டாடும் பெண்களிடம் கோபிநாத் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில் அந்த வீடியோ இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

அந்த வகையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் பல வருடங்களாக நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து கோபிநாத் தொகுப்பாளராக இருந்து வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் தங்க நகையை அதிகமாக விரும்பும் பெண்களும், எளிமையான தங்க நகையை விரும்பும் பெண்களும் கலந்து கொண்ட விவாதம் சிறப்பாக இருந்தது.

Neeya Naana may 26th episode pregnancy celebration and those who criticize

அதை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கர்ப்ப காலத்தில் விமர்சனமாக கொண்டாடும் பெண்களும் அதை விமர்சிப்பவர்களும் கலந்து கொண்டிருந்தனர். அப்போது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சீரியல் நடிகை ஃபரீனாவும் கலந்து கொண்டார். அவர் கர்ப்பமாக இருக்கும் போது வயிறு தெரிகிற போட்டோ சூட் நடத்தியது இணையத்தில் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் கர்ப்ப காலத்தில் பெண்கள் அதை கொண்டாடுவதை ஆதரித்து பேசியிருந்தார். ஆனால் எதிர் தரப்பில் இருந்த பெண்கள் இவர்கள் செய்வது தவறு தங்களுடைய அந்தரங்க விஷயத்தை எதற்காக இவர்கள் அம்பலப்படுத்துகிறார்கள். அதை யார் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தனர்.

கணவனும் மனைவியும் ஒரு குழந்தையின் வளர்ச்சி மற்றும் அதனுடைய செயல்பாடுகளை பார்த்து சந்தோஷப்பட வேண்டும். அதை ஏன் வெளி உலகத்தில் எல்லோரையும் பார்க்க காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கர்ப்ப கால கொண்டாட்டத்தை எதிர்ப்பவர்களின் கருத்தாக இருந்தது. அதோடு அந்த அணியில் இருந்த பெண்கள் நாங்களும் கர்ப்பமாக இருந்திருக்கிறோம்.

அப்போதெல்லாம் எங்களுடைய வயிறு தெரியக்கூடாது என்பதற்காக முந்தானையை வைத்து மூடி வைத்துக் கொள்வோம். ஆனால் இப்போது வயிறு தெரிகிற மாதிரி ஒரு கண்றாவியான டிரெஸ்ஸை போட்டு போட்டோ சூட் நடத்துகிறார்கள் என்று தங்களுடைய ஆதங்கத்தை கொட்டி இருந்த நிலையில் அதற்கு எதிர் தரப்பில் கர்ப்ப காலத்தை சந்தோஷமாக கொண்டாடும் பெண்கள் தங்களுடைய பதில்களை கொடுத்திருந்தனர்.

அதில் ஒரு பெண் பேசுகையில் இந்த பாக்யம் எல்லோருக்கும் எப்போதும் கிடைத்திடாது. வாழ்க்கையில் ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் குழந்தை பெற்றுக்கொள்ள போகிறோம். அந்த சந்தோஷத்தை நாங்கள் அனுபவிக்கிறோம். அதுபோல கர்ப்பமாக இருக்கும் போது நாங்கள் புகைப்படங்கள் மற்றும் எங்களுடைய வயிறு கேஸ்டிங் செய்து வைத்துக் கொள்வதால் அதை பிறகு பார்க்கும்போது எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது.

எங்களுடைய குழந்தைகளிடம் நாங்கள் அந்த புகைப்படங்களை காட்டுகிறோம் என்று பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்கு கடைசியில் கருத்து தெரிவித்த கோபிநாத் நீங்கள் உங்களுக்கு கிடைத்த சந்தோஷத்தை எல்லோரிடம் காட்டுகிறீர்கள்... அது சரிதான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் இந்த கர்ப்பம் கிடைக்காமல் எத்தனை பேர் ஏங்கிப் போய் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு உங்களுடைய புகைப்படங்களை பார்க்கும்போது மனது எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று நினைக்கிறீர்களா? கர்ப்பம் எல்லோருக்கும் கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாத சூழ்நிலை தான் இருக்கிறது. பலர் அதற்காக ஏங்கிப் போய் இருக்கும்போது நீங்கள் கொண்டாடும் கொண்டாட்டம் அவர்களை மன ரீதியாக கஷ்டப்படுத்துமே என்று கேள்வி கேட்க அதற்கு கர்ப்ப காலத்தை கொண்டாடும் பெண்கள் அணியில் இருந்து பதில் சொல்ல முடியாமல் மௌனம் காத்திருக்கிறார்கள்.

அதோடு அதே நீயா நானா எபிசோடில் ஒரு கணவன் மனைவி கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் எங்களுக்கு திருமணம் ஆகி 18 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு இன்னும் குழந்தை இல்லை இனியும் இருக்குமா? என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் அந்த நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று வருத்தத்தோடு எமோஷனலாக பேசியிருந்தது பார்ப்போரை கண்கலங்க வைத்திருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+