Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவர்தான் ஆம்பள நிர்மலா சீதாராமனா? கோபிநாத்தே கோபத்தில் கேட்ட "அந்த” வார்த்தை.. அதிர்ந்த அரங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.

அதில் வரவை விட செலவு அதிகமாக இருப்பதற்கு காரணம் விலைவாசி உயர்வா? அல்லது மக்கள் அதிகமாக செலவு செய்கிறார்களா? என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

Neeya Naana show 13th August 2023 episode and fans reaction

அந்த வகையில் ஒரு நபர் வருமானத்திற்குள் செலவு செய்ய வேண்டும் என்று கூறிய காரணத்தை கேட்டு கோபிநாத் எனக்கு கோபம் வருகிறது. உங்களுக்கு வருகிறதா? என்று கேட்டிருக்கிறார். அந்த வகையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி சமுதாயத்தில் நிலவும் பிரச்சனைகளின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெற்று வரும். அதில் இரண்டு தரப்பு விவாதங்களையும் கேட்டு கோபிநாத் மக்களின் உணர்வு பூர்வமான பதிலை கூறுவார். அதனாலேயே இந்த நிகழ்ச்சி தொடர்ச்சியாக பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் இந்த வாரமும் வரவை விட செலவு அதிகமாவதற்கு காரணம் விலைவாசி உயர்வா? அல்லது அதிகமாக செலவு செய்வது காரணமா? என்று அடிப்படையில் விவாதம் நடைபெற்றது. அந்த வகையில் செலவு அதிகமாவதற்கு காரணம் மக்கள் வரவை விட அதிகமாக செலவழிப்பது தான் என்று ஒரு நபர் பேசிக் கொண்டிருக்கிறார்.

அவர் பேசுகையில் விலையேற்ற பிரச்சனை என்பது இன்னைக்கு நேற்றைக்கு வந்த பிரச்சனை இல்ல. 50 வருஷத்துக்கு முன்னாடி ஒரு ரூபாய்க்கு இருந்த பொருள் 50, 100, 1000 ன்னு போயிடுச்சு. ஆனா இதை எப்படி பிளான் பண்ண முடியும். என்றால் வருமானத்துக்குள்ள கொஞ்சமாவது சேமித்து வைக்கணும் என்று சொல்கிறார்.

Neeya Naana show 13th August 2023 episode and fans reaction

அதற்கு எதிர் தரப்பில் இருக்கும் பெண் ஒருவர் நூறு ரூபாய் வருது என்றால் 105 ரூபாய்க்கு செலவு ஆகுது என்று சொல்ல, அதற்கு எதிர் தரப்பில் பேசிய அதே நபர் நீங்க 100 ரூபாய்க்குள்ள வாழப்பழகிக்கணும் என்று சொல்கிறார். அதற்கு அந்தப் பெண் விடாப்பிடியாக நீங்க நல்லா விசாரிச்சு பாருங்க கொரோனா டேஸ்க்கு அப்புறம் இன்கிரிமெண்ட் போட்டது எத்தனை கம்பெனில என்பதை கேட்டு பாருங்க என்று சொல்ல, அதற்கு அந்த நபர் நீங்க திருப்பி திருப்பி ஜென்ரலா பேசிட்டு இருக்கீங்க என்று சொல்கிறார். அதற்கு நீங்கள் அடித்தட்டு மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளுங்கள் சார் என்று அந்த பெண்மணி சொல்கிறார்.

அதுபோல அவர் மேலும் பேசுகையில் உங்களுக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் பாக்கெட்டுகளில் வாங்குவது கஷ்டமாக இருந்தால் மொத்தமா ஒரு கேனை வாங்கி வைத்துக் கொள்ளலாம். அப்படி வாங்கி வைத்தால் உங்களுக்கு கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்று சொல்கிறார். அதற்கு கோபிநாத் உங்களுக்கு எக்கனாமிக்கல் எப்படி கண்ட்ரோல் பண்ண வேண்டும் என்று தெரிந்த அளவிற்கு மனிதர்களின் அடிப்படை கஷ்டங்கள் தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்.

அதற்கு ஒரு இன்னொரு பெண் சார் எங்களால மூன்று ரூபாய் கொடுத்து ஒரு பாக்கெட் ஷேம்ப்பூ கூட வாங்க முடியாம தான் நாங்க சொல்லிட்டு இருக்கோம். ஆனா இவங்க டப்பா முழுக்க வாங்கி வைக்கணும் என்றால் நாங்க எங்க போகிறது என்று கேட்க, அதற்கு இன்னொரு ஆண் இதை வேற மாதிரி தான் டீல் பண்ணனும்னு இவங்களால பாக்கெட் வாங்கி பயன்படுத்த முடியலன்னா ஆரம்பத்துல நாம எப்படி பயன்படுத்தினோம்.

அப்ப எல்லாம் சீயக்காயை அரைச்சு தானே பயன்படுத்தனும். அதுபோல இப்பவும் பயன்படுத்த வேண்டியதுதானே? என்று கேட்க, இதை கேட்ட கோபிநாத் கோபமாகி உங்களுக்கு கோபம் வருதா? எனக்கு கோபம் வருது என்று பேசி என்று அங்கு இருப்பவர்களிடம் கேள்வி கேட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+