நீயா நானாவில் கோபிநாத்தை கடுப்பாக்கிய நபர்..இப்படியா அலட்சியம் பண்ணுவாங்க?இங்கே தான் பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஏப்ரல் 16ஆம் தேதிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ஒரு கணவர் தன்னுடைய மனைவியின் ஆசைக்கு அலட்சியமாக சொன்ன பதிலை கேட்டு கோபிநாத் கடுப்பாகி இருக்கிறார்.
திருமணத்திற்கு முன்பு இருந்த மனநிலை தற்போது மாறிவிட்டதை குறித்து கோபிநாத் அரங்கத்திலேயே திட்டி இருக்கிறார்.

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல தரப்பட்ட தலைப்புகளில் இந்த நிகழ்ச்சியில் விவாதம் செய்யப்பட்டு வருவதால் ரசிகர்கள் அதிகமானோர் இந்த நிகழ்ச்சியை பாராட்டி வருகின்றனர். இதனாலையே இந்த நிகழ்ச்சி பல நேரங்களில் வைரலாக மாறி விடுகிறது.
கடந்த வாரத்தில் கூட அது போல தான் குழந்தைகள் மற்றும் மருத்துவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர் குழந்தைகள் தங்களுக்கு இருக்கும் கோபங்கள் மற்றும் சந்தேகங்களை மருத்துவர்கள் முன்பு தீர்த்துக் கொண்டனர். தங்களுக்கு ஊசி போட்டு வந்த மருத்துவர்களை நினைத்துக் கொண்டே எதிரில் இருந்த மருத்துவர்களுக்கு டம்மி ஊசி போட்டு தங்களுடைய ஏக்கங்களை நிவர்த்தி செய்து இருந்தனர்

அதுபோல பல சுட்டிக் குழந்தைகள் தங்களுடைய அம்மா மற்றும் அப்பாகளுக்கு இருக்கும் உடல் நல பிரச்சனைகளை கூறி அதற்காக தீர்வும் கண்டனர். அதைத்தொடர்ந்து அதற்கு முந்தின வாரம் கூட புடவைகளுக்கு பின்னாடி இருக்கும் பல சுவாரசியமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தது இதுவரைக்கும். புடவைகள் ஒரு அழகுக்காகவும் ,மானத்தை மறைப்பதற்கு ஆகவே அனைவரும் பயன்படுத்தி வந்த நிலையில் அதற்கு பின்னாடி இருக்கும் பாரம்பரியமும் இதே நானா நிகழ்ச்சியில் வெளிவந்தது.
இந்த நிலையில் கணவன்மார்கள் மற்றும் மனைவிமார்கள் இந்த வார நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் வார இறுதி நாட்களில் கொண்டாட்டத்திற்கு காத்திருக்கும் மனைவிகளும் அதற்கு முடியவே முடியாது என்று மறுக்கும் கணவர்களும் இரு அணியாக கலந்து கொண்டு இருக்கின்றனர். அதில் ஒரு மனைவி தன்னுடைய கணவரை பற்றி சில தகவல்களை கூறுகிறார்.

அதில் எனக்கு டிஃபரென்ட் டிஃபரென்ட் திங்ஸ் வார இறுதியில் ட்ரை பண்ணுவது எனக்கு பிடிக்கும். ஆனா என்னுடைய கணவர் அதை எக்ஸப்ட் பண்ண மாட்டார் என்று சொல்ல, அதற்கு அவருடைய கணவர் ஜப்பான்ஸ் உணவுகள், சைனீஸ் உணவுகளை சாப்பிட சொல்றாங்க என்று சொல்ல, நாங்க டேட் பண்ணும் போதெல்லாம் சாப்பிட முடிஞ்சு இப்ப முடியலையா என்று அந்தப் பெண் கேள்வி கேட்கிறார்.
அதற்கு அந்த கணவர் அந்த புது உணவை சாப்பிடுவதற்காக நான் அதை செய்யல, இவங்கள இம்ப்ரஸ் பண்றதுக்காக அதை செஞ்சேன். ஆனா இப்போ தான் கல்யாணம் முடிஞ்சிடுச்சு இனி எதற்கு நான் அதை செய்யணும் என்று கேட்க, அதற்கு கடுப்பான கோபிநாத் இங்கே தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. இந்த அலட்சியம் தான் செய்யக்கூடாது என்று கூறுகிறார். தற்போது இந்த பரபரப்பான பிரமோவுக்கு ரசிகர்களின் மத்தியில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: சத்யாவுக்காக களத்தில் இறங்கிய முத்து.. மீனா கண்டுபிடித்த உண்மை.. சிந்தாமணிக்கு சரியான அடி -
பாக்ஸுக்குள் இருந்த வைரக்கல்... பாரதிராஜாவின் அந்த ஒரு முடிவால் ராதாரவிக்கு ஏற்பட்ட வருத்தம் என்ன? -
சிறகடிக்க ஆசை: சத்யாவை நினைத்து சந்தோஷப்பட்ட விஜயா.. ஆனால் முத்து குடும்பத்திற்கு செக் வைத்த ரோகிணி.. அதிரடி சம்பவம் -
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல் -
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
சிறகடிக்க ஆசை: ஜெயிலுக்கு போன சத்யா.. மீனா கண்டுபிடித்த ரகசியம்.. இனி தான் பெரிய சம்பவம் இருக்கு! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர் -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்!












Click it and Unblock the Notifications