நீயா நானாவில் கதறி அழுத நபர்.. மானத்தை மறைப்பவருக்கு கிடைத்த பாராட்டு.. கோபிநாத் செய்த அதிரடி
சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் விவசாயிக்கு பிறகு பாராட்டப்பட வேண்டியவர்கள் இவர்கள் தான் என நெசவாளர்களை கோபிநாத் புகழ்ந்து இருக்கிறார்.
நீயா நானா நிகழ்ச்சியில் புடவைகளின் பாரம்பரியம் மற்றும் அதற்குப் பின்னால் இருக்கும் கஷ்டங்கள் பற்றி பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
ஒரு புடவையை நெய்வதற்கு ஒரு நெசவாளர் படும் கஷ்டங்கள் குறித்து இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் விரிவாக பேசப்பட்டிருக்கிறது.

புடவையின் பாரம்பரியம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்புகளில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் அதாவது ஏப்ரல் இரண்டாம் தேதி எபிசோட்டில் நெசவாளர்களின் கஷ்டங்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. நாம் மானத்தை மறைப்பதற்காக ஒரு புடவையை வாங்கிக் கொள்கிறோம். அதில் பலரும் அழகை பார்த்து நமக்கு பிடித்துப் போனதால் எவ்வளவு விலை கொடுத்து வேண்டும் என்றாலும் வாங்கிக் கொள்கிறோம். ஆனால் அதற்கு பின்னாடி இருக்கும் பாரம்பரியமும், உழைப்பும் பலருக்கும் தெரியவே இல்லை. அது தற்போதைய சூழலில் பலருக்கும் நேற்றைய எபிசோட்டில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருக்கிறது.

பின்னாடி இருக்கும் கஷ்டம்
இந்த காலகட்டத்தில் புடவை கட்டுவது என்பது அரிதிலும் அரிதாக இருக்கிறது. அதிலும் பாரம்பரியமான பட்டுப் புடவைகள், காட்டன் புடவைகள் என விதவிதமான புடவைகள் சந்தையில் இருக்கின்றது. அதைக் குறித்து ஒரு சிலரிடம் மட்டுமே தெளிவு இருக்கிறது. மற்றவர்களுக்கு அதைப் பற்றி தெரியாவிட்டாலும், தங்களுக்கு அந்த கலர் பிடித்திருக்கிறது. அதில் இருக்கும் டிசைன் பிடித்திருக்கிறது என்று வாங்கிக் கொள்கிறோம். ஆனால் நேற்றைய எபிசோட்டில் ஒவ்வொரு புடவையின் பெயர் மற்றும் அதற்கான வரலாறு, அதற்கான விலை, அதை செய்வதற்கான எவ்வளவு கஷ்டங்கள் பட வேண்டி இருக்கிறது என பல்வேறு தகவல்கள் பலருக்கும் தெரிந்திருக்கிறது.

உழைப்பு பெரியது தான்
அப்போது நேற்றைய எபிசொட்டியில் ஒரு பெண் ஒரு புடவையை நாம் கையில் பார்க்கிறோம். ஆனால் அதை நெய்வதற்காக ஒரு நெசவாளர் 6000 தடவைக்கு மேலே தன்னுடைய கால்களை அசைத்து அந்த புடவையை செய்கிறார். நான் ஒவ்வொரு புடவையும் புதியதாக உடுத்தும் போது அதை செய்த நெசவாளருக்கு நன்றி செலுத்துவேன் என்று சொல்ல, அதற்கு அந்த புடவையை நெய்யும் நெசவாளர் ஒருவர் தன்னுடைய புடவையை அறிமுகப்படுத்திவிட்டு பிறகு அந்தப் பெண் கூறியது தவறு குறைந்தது 15 ஆயிரம் தடவை மேல் கைய காலை ஆட்டித்தான் நாங்கள் ஒரு புடவையை நெய்கிறோம் என்று கூறியதை கேட்டு அங்கிருந்து அனைவரும் கைத்தட்டி பாராட்டினர்.

பாராட்டும் கண்ணீரோடு நன்றியும்
மேலும் அந்த நபர், ஐஏஎஸ் சகாயம் அவர்கள் காரைக்குடிக்கு வரும்போது நெசவாளர்களை பற்றி பேசி இருந்தார் என்று சொல்லும் போதே தழுதழுத்தக் குரலால் தன்னுடைய அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் மேடையிலே அவர் அழுக, அவரை கோபிநாத் சமாதானம் செய்கிறார். பிறகு எதற்காக நீங்கள் உணர்ச்சி வசப்பட்டுட்டீங்க என்று கேட்க எங்களுக்கு இப்படி ஒரு பாராட்டு கிடைப்பதை கேட்கும் போது நெகிழ்ச்சியாகவும் ஒரு மாதிரி இருக்கிறது என்று அந்த நபர் கூறி இருக்கிறார். அதற்குப் பிறகும் தொடர்ந்து பல ஊர்களில் இருக்கும் சேலைகள் மற்றும் அதன் வரலாறு குறித்து பலரும் பேசிக் கொண்டிருந்தனர். எப்போதும் போல கடைசியாக நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கு பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் கோபிநாத் நிகழ்ச்சியில் நெசவாளர்களுக்கு நன்றி கூறிய பொழுது கண்கலங்கிய அந்த நபருக்கு ஐந்தாயிரம் கிப்ட் வவுச்சர் கொடுத்து பாராட்டி இருக்கிறார். தற்போது இது ஒட்டுமொத்த நெசவாளர்களுக்கு கிடைக்கும் பாராட்டாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications