நீயா நானா நிகழ்ச்சியால் பழிதீர்த்த குழந்தைகள்.. கோபிநாத்தா இப்படி செய்தது? கடைசியில் நடந்த குழப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஏப்ரல் 9ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் இந்த வாரம் டாக்டர்கள் மற்றும் குழந்தைகள் என இரண்டு அணியாக பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
குழந்தைகள் தங்களுக்கு ஊசி போட்ட மருத்துவர்களுக்கு பனிஷ்மென்ட் கொடுக்கும் விதமாக கோபிநாத், அவர்களுக்கு சலுகை வழங்கி இருக்கிறார்.

ரசிகர்கள் காத்திருப்பு:
விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் புதியது புதியதாக அறிமுகமானாலும் நீயா நானா நிகழ்ச்சியை அடித்துக்க முடியாது என்று சொல்லும் வகையில் தான் இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் நடுவராக கோபிநாத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் இவர் என்ன மாதிரி டாபிக்கில் நிகழ்ச்சி வழங்கப் போகிறார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளமும் பெருகிவிட்டது.
வியக்க வைத்த தகவல்கள்:
கடந்த வாரத்தில் கூட புடவைகளின் பாரம்பரியத்தை வெளிச்சம் போட்டு காட்டி பலருக்கும் வியப்பை கொடுத்திருந்தார். சாதாரணமாக அணியும் புடவை தானே அதில் என்ன இருக்கு பணம் இருப்பவர்கள் லட்சக்கணக்கில் கொடுத்து வாங்குவார்கள். இல்லாதவர்கள் தங்களால் முடிந்தது குறைந்த விலையில் வாங்கி கட்டுவார்கள். மானத்தை மறைக்கும் துணியாக பார்த்து வந்த பலருக்கும் கடந்த வார நிகழ்ச்சியில் புடவைகளின் பாரம்பரியம் மற்றும் அந்த புடவைகளுக்கு பின்னால் அதை நெய்பவர்கள் படும் கஷ்டங்கள் தெரிந்து பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த வார ப்ரோமோ:
இந்த நிலையில் இந்த வாரத்தில் டாக்டர்கள் மற்றும் குழந்தைகள் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். இதை பார்க்கும் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் குழந்தைகளாக மாறி விடுவார்கள் என்பது நிஜம். இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியானதும் இதை பார்த்ததும் ரசிகர்கள் வயிறு வலிக்க சிரித்து வருகின்றனர். காரணம் தாங்களும் குழந்தை பருவத்தில் இந்த மாதிரி தான் நினைத்திருப்போம் என்று சொல்லும் வகையில் இருக்கிறது. ஏனென்றால் தங்களுக்கு ஊசி போட்ட டாக்டர்களுக்கு ஊசி போட்டு குழந்தைகள் தங்களுடைய பழியை தீர்த்துக் கொள்கிறார்கள்.
பழி தீர்க்கும் படலம்:
பிரச்சனை என்று வந்தால் அதில் உடனே குரல் கொடுத்து சரியான தீர்ப்பு சொல்லும் கோபிநாத் இப்போது குழந்தைகளோடு குழந்தைகளாக மாறி டாக்டர்களுக்கு ஊசி போட்டு தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு குழந்தை எனக்கு ஒரே நாளில் மூன்று ஊசி போட்டு விட்டார் ஒரு டாக்டர் என்று சொல்ல, இங்கே இருப்பவர்களில் யார் முகம் உனக்கு அந்த டாக்டர் போல இருக்கிறது என்று கோபிநாத் சொல்ல, அங்கே வசமாக ஒரு டாக்டர் மாட்டிக் கொண்டிருக்கிறார். யாரோ சென்ற தப்புக்கு நான் என்னடா செஞ்சேன் பாவம், என்று சொல்கிற மாதிரி அந்த டாக்டர் வந்து நிற்க, அவருக்கு தன்னால் முடிந்த அளவிற்கு ஒரு இன்ஜெக்ஷனை போட்டு அந்த குழந்தை சந்தோஷப்படுகிறது.

மாதம் மாறிப்போச்சு:
ஆனால் அது போலியான ஒரு இன்ஜெக்ஷன் தான். குழந்தைகளின் சந்தோஷத்தை பார்க்கும் போது பார்க்கும் ரசிகர்களுக்கும் சந்தோஷம் ஒட்டிக்கொள்கிறது. இந்த நிலையில் இந்த வார ப்ரோமோ தலைப்புகளில் விஜய் டிவி தவறு செய்து இருக்கிறது என்று ரசிகர்கள் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர். அதில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி எங்கு என்பதற்கு பதிலாக மார்ச் 9ஆம் தேதி என்று பதிவிடப்பட்டிருக்கிறது. இவ்வளவு பெரிய தப்பை செய்யலாமா? என்று அதை திருத்திக்கொள்ளுங்கள் என்று பலர் அறிவுரை கூறி வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications