அப்பா போல நானும் தோற்று போய் நிற்கிறேன்.. நீயா நானாவால் வெளிவந்த வேதனை.. கண்கலங்கும் பாடகி
சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் பின்னணி பாடகிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் ஒருவராக பாடகி ரேஷ்மியும் கலந்து கொண்டிருந்தார்.
எனக்கு திறமை இருந்தாலும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ரேஷ்மி தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.

ரசிகர்கள் கேட்டு ரசித்த பல பேவரைட் பாடல்களை பாடகி ரேஷ்மி பாடியிருந்தாலும் அவருடைய முகம் பலருக்கும் தெரியாமல் தான் இருக்கிறது.

பின்னணி பாடகர்களின் கஷ்டம்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல பின்னணி பாடகர்கள் கலந்து கொண்டிருந்தனர். பொதுவாக சினிமா துறையில் கேமராவுக்கு முன்னாடி தெரியும் நபர்களை மட்டும் தான் ரசிகர்களுக்கு பரீட்சையமாக இருக்கிறார்கள். ஆனால் அதற்கு பின்னாடி பல பேருடைய கஷ்டமும் போராட்டமும், இருப்பதும் யாருக்கும் தெரியாது. அந்த மாதிரி தான் பல ஒரு பாடலுக்கு பின்னாடி இருக்கும் பின்னணி பாடகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை நீயா நானா நிகழ்ச்சியில் தெரியப்படுத்தி இருந்தனர்.
பாடகியின் வேதனை: ஒரு சில பாடல்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்து அதிக அளவில் ஹிட் ஆகிவிடும். ஆனால் அந்த பாடல்கள் யார் பாடியது என்று முகம் யாருக்கும் தெரியாது. அந்த பாடல்களில் வாயை அசைத்துக் கொண்டு நடித்த நடிகர்களை மட்டும் தான் பலருக்கும் தெரியும். அந்த வகையில் பல பாடகர்கள் தங்களுடைய திறமையையும் முகத்தையும் வெளியே காட்டி விட வேண்டும் என்பதற்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் பாடகி ரேஷ்மி.

தந்தையின் கஷ்டம்: நீயா நானா நிகழ்ச்சியில் பலர் தங்களுடைய கவலைகளை கொட்டிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவராக ரேஷ்மியும் பேசியிருந்தார் அவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இப்போது பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அது தன்னுடைய சொந்த ஊர் கேரளா என்றும், கேரளாவில் இருந்து சென்னைக்கு தன்னுடைய அப்பாவோடு குடி பெயர்ந்தோம். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் அதிகமாக கஷ்டப்பட்டு தான் கொண்டிருந்தோம். தன்னுடைய தந்தை வீட்டில் அனைவருமே படித்து நல்ல வேலையில் இருக்கும் நிலையில் தந்தை மட்டும் தனக்கு பாடல் வேண்டும் என்று கூறி அவர்களை விட்டு பிரிந்து வந்திருந்தாராம்.
பாடகியாக மாற்றம்: தன்னுடைய தந்தை வீட்டில் அனைவருமே படித்து நல்ல வேலையில் இருக்கும் நிலையில் தந்தை மட்டும் தனக்கு பாடல் வேண்டும் என்று கூறி அவர்களை விட்டு பிரிந்து வந்திருந்தாராம். ரேஷ்மாவின் தந்தை பல போராட்டங்கள் தாண்டியும் அவரால் வெளி உலகத்திற்கு தன்னுடைய திறமையை காட்ட முடியாமல் போயிருக்கிறது. அப்போது ரேஷ்மிக்கு பாட தெரியும் என்பது அவருடைய தந்தைக்கு தெரியாதாம்.
ஒரு நாள் எதார்த்தமாக தன்னுடைய நண்பர்கள் முன்பு ரேஷ்மி பாடிய பாடலை பார்த்து வியந்து போய் பின்பு அவருக்கு முறைப்படி பாடல் கற்றுக் கொடுத்திருக்கிறார். பாடகி ரேஷ்மி பல திரைப்பட பாடல்களில் பாடி இருக்கிறாராம்.குறிப்பாக ஆட்டோகிராப் திரைப்படத்தில் மனசுக்குள்ளே காதல் வந்துச்சா எனும் பாடல், பம்பாய் திரைப்படத்தில் வரும் கண்ணாளனே எனும் பாடலில் ஆரம்பத்தில் வரும் கோரஸ் பாடலை பாடினாராம்.

ஏமாற்றங்கள்: இவர் பல பாடல்களில் கம்மிங் குரல் கொடுத்து இருக்கிறாராம். அதுபோல கோரசாக பாடியிருக்கிறாராம். ஆனால் இவர் தான் இந்த பாடலை பாட போகிறார் என்று ஆரம்பத்தில் இருந்து இவரிடம் கூறி கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு இவருக்கு கிடைக்காமல் பல முறை ஆகிவிட்டதாம். குறிப்பாக பாண்டவர் பூமி திரைப்படத்தில் தோழா தோழா பாடல் என ஏகப்பட்ட பாடல்கள் கடைசி நேரத்தில் இவருக்கு கிடைக்காமல் மாறி இருக்கிறதாம்.
வேதனையில் ரேஷ்மி: ஆரம்பத்தில் இருந்து ஒரு திரை பாடலுக்காக நாம் எவ்வளவோ முயற்சி செய்து பாட்டு பாடி கொண்டிருந்தாலும் கடைசி நேரத்தில் அது பிரபலமான பாடகர்களுக்கு மாறிவிடும். அந்த ஏமாற்றம் என்னுடைய வாழ்க்கையில் அதிகமான முறை கிடைத்திருக்கிறது. கடைசியில் என்னுடைய அப்பாவை போலவே நானும் வாழ்க்கையில் தோற்றுப் போய் இருக்கிறேன் என்று வேதனையோடு பகிர்ந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications