கோபிநாத்தை பீல் பண்ண வைத்த பெண்..அந்த மாதிரி நேரத்தில்..!? கதாநாயகனாக மாறிய தந்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் ஏப்ரல் 23 ஆம் தேதிக்கான எபிசோடின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் தனியாக குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களும் அவர்களுடைய குழந்தைகளும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் ஒரு தந்தை தனியாக ஒரு பெண் குழந்தையை வளர்ப்பது ரொம்ப கஷ்டம் ஆண் குழந்தை என்றால் கூட வளர்த்து விடலாம் என்று தன்னுடைய கஷ்டத்தை கூறி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் பல நேரங்களில் சுவாரசியமாகவும் கருத்துள்ளதாகவும் நிகழ்ச்சி இருந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் இருதரப்பு வாதங்களுக்கும் சரியான கேட்டு பதில் கொடுத்து பலருடைய பாராட்டை பெற்றிருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரம் நிகழ்ச்சியில் இவருக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் திணறி இருக்கிறார்.
அந்த வகையில் இந்த வாரத்திற்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தனியாக ஒரு தந்தையால் வளர்க்கப்படும் பெண் தன்னுடைய பிரச்சனைகளை குறித்து கூறியிருக்கிறார். அதில் பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை வரும்போது இதை எப்படி அப்பா கிட்ட சொல்றது என்று சங்கடமாக இருக்கும் என்று கூறுகிறார்.
அதற்கு அங்கு இருக்கும் இன்னொரு தந்தை, ஆம்பள பிள்ளைகளா இருந்தா கூட நாம மேனேஜ் பண்ணி வளர்த்திடலாம். ஆனா பெண்கள் என்று சொல்லும் போது பெண்களுக்குரிய அனைத்து செயல்பாடுகளையும் செய்ய வேண்டும் என்பது மிகப்பெரிய கொடுமை என்று தன்னுடைய வலியை பற்றி பகிர்ந்து கொள்கிறார்.

அடுத்து அங்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினரிடம் கோபிநாத் நீங்கள் சிங்கிள் பாதர் என்கிற விஷயத்தை எடுக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீங்க என கேட்க, அதற்கு அந்த நபர் பொதுவா மிகப்பெரிய ஒரு சிம்பதி கிரியேட் ஆகும். அம்மா இல்லை என்று சொல்லும்போது, அதனால் தான் என்று கூறுகிறார்.. தற்போது இந்த ப்ரோமோ பலருக்கும் கண் கலங்க வைத்திருக்கிறது.
பொதுவாக குழந்தைகள் வளர்க்கும் நிலையில் அம்மா அப்பா இருவருமே இருந்தால்தான் அந்த குழந்தை சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் வளர முடியும். இதில் ஒருவர் இல்லை என்றாலும் அந்த குழந்தை பெரிய அளவில் பிரச்சனைகளையும், சோதனைகளையும் தாண்டி தான் வளர்ந்து வர வேண்டும். இருவருமே குழந்தையின் வளர்ச்சிக்கு தேவைதான். அதில் பல நேரங்களில் எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்காமல் போய்விடுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் ஒரு பெண் தன்னுடைய கணவர் இல்லை என்றால் தைரியமாக கஷ்டப்பட்டு குழந்தையை வளர்த்து வளர்க்கிறார் என்றால் அதை பலரும் பெருமையாக பேசுவார்கள்.. ஆனால் ஒரு குழந்தையின் அம்மா இறந்து போய்விட்டால் அந்த குழந்தையின் அப்பாவிற்கு இரண்டாவது திருமணத்தை செய்து வைத்து விடுவார்கள் ஏனென்றால் ஒரு குழந்தையை ஆணால் தனியாக வளர்த்து எடுக்க முடியாது என்று காரணம் சொல்வார்கள். ஆனாலும் இப்போதும் பல ஆண்கள் நாங்கள் அப்பா மட்டுமல்ல அம்மாவும் தான் என்று தங்களுடைய குழந்தைகளின் வாழ்க்கைக்காக பல தியாகங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்பாக நீயா நானா நிகழ்ச்சியில் தனியாக குழந்தைகளை வளர்க்கும் கிராமத்து பெண்கள் மற்றும் நகரத்து பெண்கள் கலந்து கொண்டிருந்தனர் இந்த நிலையில் தற்போது தனியாக ஒரு குழந்தையை வளர்த்தெடுக்கும் தந்தைகள் கலந்திருப்பது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பாக்கள் எப்போதும் வெளியே டெரர் பீஸாக காட்டிக்கொண்டு உள்ளே இருக்கும் பாசங்களை நீயா நானா நிகழ்ச்சியில் பலரும் உடைத்து பேசியிருக்கின்றனர்.
பொதுவாக தந்தை மகள் பாசம் எப்போதும் அழகாக இருக்கும் ஆனால் மாதவிடாய் காலத்தில் தனி அப்பாவுக்கு இருக்கும் வேதனை வெளியே சொல்லி மாளாது. அதைத்தான் தற்போது நீயா நானா நிகழ்ச்சியில் அந்த தந்தை கண்ணீராக வெளிப்படுத்தி இருக்கிறார். எப்போதுமே இப்படிப்பட்ட தந்தைகள் "கதாநாயகன்கள்" தான் என்பது இப்போது நிரூபணம் ஆகிறது என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications