வீட்ல சொல்லாம நீயா நானாவில் கலந்துக்கிட்டேன்.. இப்படி ஆயிடுச்சு! மகன் இறந்துட்டான்.. பிரபலம் எமோஷனல்
சென்னை: விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் ஒருவர் தான் இந்த நிகழ்ச்சியில் எப்படி கலந்து கொண்டேன் என்பது பற்றி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பொதுவாக ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பார்க்கும்போது இது உண்மைதானா? என்ற சந்தேகம் மக்களுக்கு பல வருடங்களாகவே இருக்கிறது. அதிலும் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு முறை கலந்து கொண்ட நபர்கள் வெவ்வேறு தலைப்புகளில் மீண்டும் மீண்டும் கலந்து கொண்டு வருகிறார்கள்.

இதனால் இவர்கள் உண்மையிலேயே இந்த நிகழ்ச்சியில் தங்களுடைய கருத்தை பேசுகிறார்களா? அல்லது நிகழ்ச்சி தரப்பினர்கள் சொல்லிக் கொடுத்ததை தான் சொல்கிறார்களா? என்ற கேள்விகள் எல்லோருக்கும் இருக்கிறது. அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்ப்ப காலத்தை கொண்டாடும் பெண்களும் அதை விமர்சிக்கவும் பொதுமக்களும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.
அப்போது ஒரு பெண் தற்போதைய காலகட்டத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம் என்று வயிற்றை ஃபோட்டோ எடுத்து சமூக வலைத்தளத்தில் போட்டோ போடுகிறார்கள். இதனால் குழந்தைகள் இல்லாதவர்கள் இதை பார்க்கும் இப்போது எவ்வளவு வேதனை படுவார்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதோடு இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்த சீரியல் நடிகை ஃபரீனாவையும் கேள்வி மேல் கேள்வி கேட்டு பேசவிடாமல் செய்திருந்தார். இதனால் இவர் யார் என்ற கேள்வி எல்லோருக்கும் இருந்தது. இவர் ஏற்கனவே நீயா நானா நிகழ்ச்சியில் சில தலைப்புகளில் பேசி இருக்கிறார் என்ற புகைப்படங்களும் வெளியானது. அதிலும் மன அழுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டபோதும் அவர் பேசி இருக்கிறார்.
இந்த நிலையில் அந்தப் பெண் சமீபத்தில் ஒரு youtube சேனலில் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் தன்னுடைய பெயர் நாராயணி, என்னுடைய கணவர் கேட்டரிங் பிசினஸ் செய்கிறார். நான் வீட்டில் டிவி பார்க்கும்போது நீயா நானா நிகழ்ச்சியை பார்ப்பேன். அப்போது நானும் ஒருமுறை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது வரும் போன் நம்பரை பார்த்து அதற்கு ஃபோன் பண்ணி பேசினேன்.
அப்போது ஒரு முறை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அழைத்திருந்தார்கள். அந்த நேரத்தில் வீட்டில் எல்லாரிடமும் நான் என்னுடைய மகளை பார்ப்பதற்காக சென்னைக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு நீயா நானா நிகழ்ச்சிக்கு வந்து விட்டேன். நான் நீயா நானாவிற்கு தான் போகிறேன் என்பதை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. நிகழ்ச்சியில் வந்து பேசினேன். அப்போது கோபிநாத் என்னை பாராட்டி கிப்ட் வவுச்சர் கொடுத்தார்.
அதற்குப் பிறகு நான் என்னுடைய கணவருக்கு போன் போட்டு நான் நீயா நானா நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறேன் என்பதை பற்றி சொன்னேன். அவரும் கோபம் எதுவும் படவில்லை. பிறகு அந்த எபிசோடு வந்த பிறகு என்னை பலரும் பாராட்ட தொடங்கி விட்டார்கள். எனக்கு இரண்டு பொண்ணு மற்றும் ஒரு பையன் இருந்தார். ஆனால் என்னுடைய பையன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது தற்கொலை செய்து கொண்டான்.
அதற்கு பிறகு நான் பெரிய அளவில் மன அழுத்தத்தில் இருந்தேன். ஆனால் என்னுடைய பையனின் நண்பர்கள் ஏழு பேர் தான் என்னை அந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர செய்தனர். என்னை மனநல மருத்துவ மனையில் சேர்த்து காலையும் மாலையும் என்னுடைய மகன் இருந்தால் என்ன செய்வானோ அத்தனையும் அந்த ஏழு மாணவர்களும் செய்தார்கள்.
அவர்களும் என்னுடைய மகனோடு படித்தவர்கள் தான் ஆனாலும் அவர்கள் எனக்காக பல விஷயங்களை செய்தார்கள். பிறகு நான் மெல்ல மெல்ல எதார்த்தத்தை புரிந்து கொண்டு வெளியே வந்தேன். ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் பல பெண்கள் சின்ன சின்ன விஷயங்களையும் தாங்கிக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்தில் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

அதை கேட்பதற்கே வருத்தமாக இருக்கிறது. என்னுடைய ஒரே மகனை இழந்த பிறகு நான் என்னை சார்ந்தவர்கள் மன நிம்மதிக்காக என்னுடைய வருத்தத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். எதுவுமே நிரந்தரம் கிடையாது. ஆனால் நான் இருக்கிற வரைக்கும் முடிஞ்ச வரைக்கும் எல்லோருக்கும் நல்லது செய்வோம். நம்மால் யாரும் கஷ்டப்படக் கடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டால் நமக்கு மட்டும் மன அழுத்தம் இல்ல நம்மால் யாருக்குமே மன அழுத்தம் வராது.
நான் என்னுடைய மகனின் மறைவுக்குப் பிறகு அதிகமான புத்தகங்கள் படிக்கிறேன். அவைதான் என்னை தைரியமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இழந்ததையும், கடந்ததையும் நினைத்துக் கொண்டிருந்தால் இன்றைய நாள் நரகமாக மாறிவிடும். நம் ஒருவருடைய வருத்தம் நம் குடும்பத்தின் வருத்தமாகவும் மாறிவிடும். அதனால் அதனை தூக்கி எறிய வேண்டும் என்று நாராயணி தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார்.
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications