நீயா நானா: அரங்கத்தில் பிரபலத்தை "கோபப்பட்டு” திட்டிய கோபிநாத்.. கேள்வி கேட்டா இப்படி பேசலாமா...?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வார எபிசொட்டில் ட்ரெண்டிங் தாத்தா பாட்டிகள் மற்றும் இன்றைய இளம் தலைமுறையினர் கலந்து கொண்டிருந்தனர்.
இரண்டு தரப்பினரும் தங்களுடைய நிறை குறைகளை கூறிக் கொண்டிருந்தனர். அப்போது இளைஞர்கள் இவர்கள் பார்ப்பதற்கு தான் ட்ரெண்டிங் போல இருக்கிறார்கள். ஆனால் இன்னும் பழமையிலிருந்து முன்னேறவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தனர்.

அதைத்தொடர்ந்து அங்கே எழுதுப்பட்ட கேள்விகளும் அதற்கு கொடுக்கப்பட்ட பதில்களால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது அதைப் பார்த்து கோபிநாத் கோபமடைந்து திட்டி இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி அதிகமான ரசிகர்களால் எதற்காகப்படும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் என்ன மாதிரி தலைப்பில் விவாதிக்கப்படும் என்பது பலருடைய எதிர்பார்ப்பு தான். இந்த நிலையில் இந்த வாரம் யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ட்ரெண்டிங் தாத்தா பாட்டிகள் மற்றும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

அதில் தாங்கள் எப்படி டிரெண்டிங்காக மாறினோம் என்றும் தங்களுடைய அனுபவங்கள் குறித்தும் தாத்தா பாட்டிகள் பகிர்ந்து கொண்டனர். ஆனால் இதற்கு இவர்கள் ட்ரெண்டாக மாறியதால் எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறி சில இளம் தலைமுறையினர் விவாதித்தனர்.
இந்த நிலையில் இளைஞர்கள் தரப்பில் இருந்து தாத்தா பாட்டியின் உடல் தோற்றத்தில் தான் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதே தவிர இவர்களது சிந்தனை இப்போதும் பிற்போக்கான சிந்தனையாக தான் இருக்கிறது என்று கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக சாதி, தன் பாலின திருமணம் பற்றி இளைஞர்கள் பக்கத்தில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்ரெண்டிங் தாத்தா பாட்டி தரப்பில் இருந்து ஒரு நபர் தன்பாலினத்தவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது, என்றும் இப்படி தன்பாலினர் திருமணம் செய்து கொள்வது நமது கலாச்சாரத்தில் இல்லை என்றும் கூறினார்.
அதைத்தொடர்ந்து ட்ரெண்டிங் தாத்தா பாட்டி தரப்பில் இருந்து ஒரு நபர் கேள்வி எழுப்பினர். அதாவது," தன் பாலின திருமணம் செய்து கொள்ளலாம் என்று சில இளைஞர்கள் கூறிவரும் நிலையில் அப்போ அவர்கள் இதுபோன்றுதான் இருப்பார்களாக இருக்கும்" என்று கொஞ்சமும் யோசிக்காமல் அதிரடியாக கேள்வி எழுப்பினர்.

இதனால் கோபமான கோபிநாத், ஒருவர் உரிமை சார்ந்த கேள்வி எழுப்பும்போது ஒரு காரணத்திற்காக நீயும் அதுதானா? என்ற கேள்வி கேட்பது என்பது மிகவும் தவறான ஒன்று. பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் குரல் கொடுக்கணும்னு நினைத்தால் எதற்குமே விடிவுகாலம் வந்து இருக்காது. உலகத்தில் எப்படி பல விஷயங்களுக்கு விடிவு வந்தது என்றால் பாதிக்கப்பட்டவர்கள் குரல் கொடுத்தால் மட்டுமல்ல.
அவர்களின் நியாயத்தை புரிந்து கொண்டு மற்றவர்களும் கூட்டு சேர்ந்து குரல் கொடுத்தால் தான் மாற்றம் ஏற்பட்டது என்று தனது கருத்தை கூறியிருந்தார். மேலும் "அவர்களுக்கு பிடித்தபடி அவர்களை வாழ விடுங்கள். சரியோ தவறோ அது அவர்களுடைய விருப்பம்" எனவும் கூறி அனைவருடைய கவனத்தையும் கோபிநாத் ஈர்த்திருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications