நீயா நானாவிற்கு அண்ணனையும் அப்பாவையும் கூட்டிட்டு போனதால் வந்த வினை.. ஃபீல் பண்ணும் பெண்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் தன்னுடைய அண்ணனையும் அப்பாவையும் பேச வைத்த பெண் தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்திருக்கிறார்.
அதுவரைக்கும் பேசாமல் இருந்த அண்ணனும் அப்பாவும் நீயா நானா நிகழ்ச்சியில் தான் மீண்டும் பேசினார்கள்.
அதனால் தன்னை கண்டு கொள்ளவில்லை என்று அந்தப் பெண் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமடைந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் பலரும் கலந்துகொண்டு பிரபலங்களாக மாறிவிடுகிறார்கள். அந்த மாதிரி தான் சில எபிசோட்டுகளுக்கு முன்பு பல வருடங்களாக பேசாமல் இருந்த அப்பாவும் மகனும் என்ற தலைப்பில் தன்னுடைய அண்ணனையும் அப்பாவையும் பேச வைப்பதற்காக ஒரு பெண் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்திருந்தார்.
நீயா நானா நிகழ்ச்சியில் அண்ணன் மற்றும் அப்பா இருவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த பெண் தான் போன் பண்ணி பேசி எல்லாம் ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். அதை நிகழ்ச்சியில் கோபிநாத் அந்தப் பெண்ணை பாராட்டவும் செய்திருந்தார். அந்தப் பெண் பிறப்பதற்கு முன்பு தன்னுடைய அண்ணனும் அப்பாவும் நன்றாக பாசமாக இருந்ததாகவும் நான் பிறப்பதற்கு முன்பு குறைந்தது 200 போட்டோக்களாக எடுத்து வைத்திருப்பார்கள். அந்த அளவிற்கு அப்பாவிற்கு அண்ணன் மீது பாசமாக இருந்தார்.
ஆனால் நான் பிறந்த பிறகு என்னிடம் அதிகமாக பாசத்தை காட்டி நேரத்தை செலவிடுகிறார் என்று நினைக்கிறேன். அதனால் தான் என்னுடைய அண்ணனிடம் அப்பா அதிகமாக பேசிக் கொள்வதில்லை. இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. அண்ணனும் அப்பா பேச்சுக்கு வீம்பு பிடித்துக் கொண்டு இருந்து விடுகிறார். சில நேரங்களில் நாங்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகளுக்கு எங்கள் இருவருக்கும் ஒரே போல தான் அடித்து தண்டனை கொடுப்பார். ஆனால் நான் உடனே நம்ம அப்பா தானே என்று அதை மறந்து அப்பாவிடம் பேசி பழகி விடுவேன்.

ஆனால் என்னுடைய அண்ணன் அப்படி கிடையாது. அப்பா நம்மளை அடித்துவிட்டார் என்று கோபத்தில் அவரிடம் பேசுவதே கிடையாது என்று நீயா நானா நிகழ்ச்சியில் தன்னுடைய கஷ்டத்தையும் கண்ணீரோடு வெளிப்படுத்தி இருந்தார். பிறகு கோபிநாத் இப்போ இந்த நிகழ்ச்சியில் உங்க அண்ணனும் அப்பாவும் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று சொல்ல, இருவரும் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த பெண் கூறி கூறினார்.
அந்த நொடியே அப்பாவும் மகனும் தங்களுடைய மனதில் இருந்த கோபங்கள், வீராப்புகள் எல்லாத்தையும் விட்டு விட்டு பாசமாக கட்டிப்பிடித்து தங்களுடைய தவறை புரிந்து கொண்டனர். பிறகு வீட்டிற்கு வந்த பிறகும் இவர்கள் இருவரும் பழையபடி நன்றாக பேசி பழகி வருகிறார்கள். இப்போது எல்லாம் இவர்கள் இருவருக்கும் எந்த சண்டையும் வருவது கிடையாது என்று அந்தப் பெண் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
நீயா நானா நிகழ்ச்சியில் பல நாள் பேசாத அப்பா மகன் கலந்து கொள்ளலாம் என்று தலைப்பை பார்த்ததும், இதில் பேச வைக்க வேண்டும் என்று சொன்னது என்னுடைய அம்மா தான். அம்மாவிடம் இவர்கள் இருவரும் நிகழ்ச்சியில் செய்ததை சொன்னதும் கேட்டு ரொம்பவே சிரித்தார். நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது அம்மாவே கண்கலங்கி அழுதுவிட்டார். இதற்கு முன்பு எந்த ஒரு தேவை என்றாலும் அண்ணனும் அப்பாவும் எங்கள் இருவரிடம் தான் சொல்லி செய்ய சொல்வார்கள்.
இப்போது இவர்கள் இருவரும் நன்றாக பழகி விட்டதால் எங்கள் இருவரையும் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள். குறிப்பாக அவர்கள் எல்லாம் ரொம்ப சேர்ந்து விட்ட பிறகு என்னை கண்டு கொள்ளவில்லை. இந்த நீயா நானா நிகழ்ச்சியில் அண்ணனையும் அப்பாவையும் பேச வைத்ததால் பெரிய சந்தோஷம் கிடைத்திருந்தாலும், சின்னதாக நம்ம இப்ப கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்களே என்ற வருத்தமும் இருக்கிறது என்று சிரித்தபடியே அந்தப் பெண் பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய குடும்பத்தின் மீது ஒரு பெண்ணுக்கு இருக்கும் பாசமும் அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பிரதமர் நடித்த ஒரே படம் அமைதிப்படை தான்.. அதுவும் இந்த காட்சியை மறக்க முடியுமா? சத்யராஜ் சர்ச்சை பேச்சு -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல்












Click it and Unblock the Notifications