பணம் கண்ணை மறைச்சிடுச்சு..நீயா நானா நிகழ்ச்சிக்கு பிறகு நடந்த அதிசயம்.. கண் கலங்கிய தங்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கா தங்கைகள் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட மனமாற்றம் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கின்றனர்.

தான் கார் வாங்கிய விஷயத்தை அக்காவிடமே சொல்லாதது எவ்வளவு பெரிய தப்பு என்று புரிந்து கொண்டதாக தங்கை கூறி இருக்கிறார்.

தன்னுடைய தங்கை எல்லாத்தையும் என்னிடம் சொன்னாலும் கார் வாங்கியதை சொல்லாமல் ஸ்டேட்டஸ் வைத்து இருந்தார் என்று அக்கா பீல் பண்ணி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சமுதாயத்தில் நிலவும் அடிப்படை பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த மாதிரி விவாதிக்கப்படும் போது அதில் கலந்து கொள்ளும் நபர்கள் பிரபலமடைந்து விடுகின்றனர்.

Neeya Naana that she realized how big a mistake it was that she did not tell her about the car purchase

அந்த மாதிரி தான் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கா தங்கைகளும் இப்போ பிரபலமாகி இருக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்பு நீயா நானா நிகழ்ச்சியில் ஒரே வீட்டில் பிறந்த அக்கா தங்கைகள் வெவ்வேறு சூழ்நிலையில் திருமணத்திற்கு பிறகு வாழும் நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

அதில் ஒரு அக்கா தன்னுடைய தங்கை தன்னிடம் எல்லா விஷயத்தையும் கூறுவார். தினமும் போனில் பேசிக் கொள்ளுவோம் ஆனால் அவர் கார் வாங்கிய விஷயத்தை என்னிடம் சொல்லவில்லை. ஸ்டேட்டஸ் வைத்ததை நான் பார்த்து தெரிந்து கொண்டேன். ஒரு சின்ன மோதிரம் வாங்கினால் கூட என்னிடம் சொல்லும் என்னுடைய தங்கை இதை என்னிடம் சொல்ல மறைத்து விட்டார் என்று தன்னுடைய ஏக்கத்தை கூறியிருந்தார்.

அதற்கு அவருடைய தங்கை இதுவெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று நான் நினைத்தேன். அதனால் தான் சொல்லவில்லை என்று ஆரம்பத்தில் கூறி பிறகு கோபிநாத் துருவி துருவி கேள்வி கேட்ட பிறகு ஆமாம் சார் ஏற்கனவே அக்கா என்னிடம் பணம் கேட்டு இருக்காங்க. அப்போ நான் அவங்களுக்கு பல நேரம் கொடுத்திருக்கிறேன். சில நேரங்களில் அவர்கள் தருவதற்கு லேட் ஆயிரும் அதனால் இப்போ பணம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் நான் கார் வாங்கியதை எப்படி சொல்ல முடியும். அப்படியே சொன்னாலும் அவர் என்ன மாதிரி எடுத்துக்குவாங்கன்னு தெரியல. அதனாலதான் சொல்லல என்று கூறியிருந்தார். தற்போது இது வைரலாகி வரும் நிலையில் சமீபத்தில் இதில் கலந்து கொண்ட அக்கா தங்கைகள் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் தங்கை தன்னுடைய அக்காவிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

எங்க வீட்டில் நாங்க நான்கு பேர் மூன்று பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை. நான்தான் அக்கா மிச்சம் இரண்டும் தங்கைகள் எனக்கு 16 வயசில் திருமணமானது. திருமணத்திற்கு பிறகு என்னுடைய தங்கைகள் எல்லாம் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பல வருடங்களுக்கு பிறகு நான்தான் திருமணம் செய்து வைத்தேன். வீட்டில் வசதி இருந்தாலும் சொத்து பத்து எல்லாம் வித்துதான் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தோம்.

திருமணத்தின் போது கூட என்னுடைய தங்கச்சிக்கு நான் 50 பவுன் நகை எடுத்துக் கொடுத்தேன். ஆனால் அப்படி இருக்கும் போது என்னிடம் ஒரு கார் வாங்கியதை மறைச்சிட்டாங்களே என்று தான் எனக்கு கவலை. அதைத்தான் நீயா நானா நிகழ்ச்சியில் சொன்னேன் என்று சொல்ல, அதற்கு அந்த தங்கையும் ஆமா நான் செஞ்சது எவ்வளவு பெரிய தப்புன்னு அந்த நிகழ்ச்சியில் கமெண்ட் பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்.

உண்மைய சொல்லனும்னா பணம் கண்ணை மறச்சிடுச்சு. ஏதோ ஒரு சிந்தனையில் இது பெரிய விஷயமா என்று அலட்சியமாக இருந்து விட்டேன். அது அக்காவை இந்த அளவிற்கு பாதித்திருக்கிறது என்று எனக்கு அப்போ தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். தற்போது இது குறித்து அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+