நீயா நானா கோபிநாத், சூப்பர் சிங்கர் பிரியங்கா.. விஜய் டிவியின் டாப் 5 நிகழ்ச்சிகள் கலர்ஸ் போகுதா?
சென்னை: விஜய் டிவியில் உள்ள பெரும்பாலான படங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன.. படங்கள் மட்டுமின்றி விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளும் கலர்ஸ் டிவியிலேயே இனி ஒளிபரப்பாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றன. இந்நிலையில், இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, விஜய் டிவி பெயரை குறிப்பிடாமல் தன்னுடைய கருத்துக்களை ஆழமாகவும், விரிவாகவும் எடுத்துரைத்துள்ளார்.
Realone Media என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "குக் விக் கோமாளி, நீயா, நானா, சூப்பர் சிங்கர் போன்ற பிராண்ட் நிகழ்ச்சிகளை ஒரே மாதிரி தந்து கொண்டிருந்தால், அது காலப்போக்கில் எடுபடாமல் போய்விடும்.. ஒரு வருடம், அல்லது 2 வருடத்துக்கொருமுறை நிகழ்ச்சிகளையும், அதன் நடுவர்களையும், அதில் பங்கேற்கும் போட்டியாளர்களையும் மாற்றிக் கொண்டேயிருந்திருக்க வேண்டும்.

சூப்பர் சிங்கர் - குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களே, கலக்க போவது யாரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்கள்.. சூப்பர் சிங்கர் போட்டியாளர்களே, இன்னொரு நிகழ்ச்சிக்கும் போகிறார்கள்.. இப்படி திரும்ப திரும்ப எல்லா நிகழ்ச்சிகளுமே ஒரே மாதிரியாக இருந்தால் எப்படி?
5 நிகழ்ச்சிகள் இருக்கிறதென்றால், 5 நிகழ்ச்சிகளிலுமே ஒரே நபர்கள்தான் இருக்கிறார்கள்.. அதிலும் விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் பிரியங்காவே இருக்கிறார். நீயா நானா கோபியை குக் வித் கோமாளியில் சமையல் செய்யவும் விட்டிருப்பார்கள்.. அதுக்காக சமையல் செய்வதை கேவலமாக சொல்லவில்லை.. ஆனால், ஒரு நிகழ்ச்சிக்கென்று ஒரு பிம்பம் உள்ளது.. நீயா நானா போன்ற அறிவார்ந்த நிகழ்ச்சியின் கோபியை, கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராக உட்கார வைத்தால் அது வேறு மாதிரியான பிம்பத்தை தந்துவிடும்.
எனவே, குறிப்பிட்ட 5 நிகழ்ச்சிகளை மட்டுமே இப்போது கலர்ஸ் எடுத்து கொள்கிறார்கள்.. 5 நிகழ்ச்சி என்பது 5 பிராண்டு ஆகும்.. இந்த 5 புகழ்பெற்ற நிகழ்ச்சிகளும் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக போகிறது..
சீரியல்களின் தாக்கம்
சீரியல்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால்தான் தற்போது சினிமா என்பதே காலியாகிவிட்டது... சிறிது நாளில் வெப்சீரீஸ்கள் காரணமாக டிவி சீரியல்களும் காலியாக போகின்றன.. ஒவ்வொரு மாற்றமும் வேதனையாக இருந்தாலும், வளர்ச்சிக்கு மாற்றங்கள்தான் இங்கு தேவைப்படுகின்றன.
நிகழ்ச்சிகளை புதுமைப்படுத்தாதது, மாற்றியமைக்காதது, ஏற்கனவே ஒளிபரப்புவதையே மீண்டும் ஒளிபரப்புவது, மொக்கை காமெடி, லூட்டி அடிப்பது இதெல்லாம்தான் நிகழ்ச்சிகளின் சோர்வுக்கு காரணமாகும். நீயா நானா கோபியை எடுத்துக் கொண்டால், எல்லா தலைப்புகளிலும் பேசிவிட்டார்.. இனிமேல் அவருக்கு தலைப்புகளே இல்லை.. சமீபத்தில் நாட்டு நடப்புகளை அலச முயன்று, மும்மொழி கொள்கையை கையில் எடுத்தார்கள்.. ஆனால் அத்துடன் நிகழ்ச்சியே ஒளிபரப்பப்படவில்லை.
கோபிநாத் - பிராண்டு
நீயா நானா நிகழ்ச்சியை பொறுத்தவரை, கான்செப்ட்டுகள் பிராண்டு இல்லை.. அந்த நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத்தான் பிராண்டு.
கோபியை தவிர வேறு யாரை வைத்தும் நீயா நானா நிகழ்ச்சியை நடத்த முடியாது. அது இது எது நிகழ்ச்சியை மகாபா நடத்தினாலும், சிவகார்த்திகேயன்தான் பிராண்டு. பிரியங்காவும் அப்படித்தான்.
எனவே, 5 நிகழ்ச்சிகளை கலர்ஸ் டிவி வாங்கி கொள்கிறதென்றால், அந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்கள்தான் அதன், ஆளுமைகள்.. அவர்கள் தான் அந்த நிகழ்ச்சி பெறுவதற்கு முக்கியமான காரணம்.. ஆனால், அவர்களை மீண்டும் நிகழ்ச்சி நடத்த அழைக்குமா? அல்லது வேறு தொகுப்பாளர்களை நியமிக்குமா என்பது நிறுவனத்தின் முடிவு" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications