நெஞ்சத்தை கிள்ளாதே : அதிதியை காப்பாற்றிய ராகுல்.. கௌதமுக்கு வந்த சந்தேகம் - இன்றைய எபிசோட் அப்டேட்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அதிதி வீட்டுக்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருக்க அப்போது அந்த வழியாக வரும் அபிஷேக் அதிதியை பார்க்கிறான்.
அதிதியை வாங்க நான் உங்க வீட்ல டிராப் பண்ணி விடுறேன் என்று சொல்லி கூப்பிட அதிதி வேண்டாம் நான் ஆட்டோவில் சென்று விடுகிறேன் என சொல்கிறாள். இருந்தாலும் அபிஷேக் அவளை ட்ராப் செய்வதாக சொல்லி நேராக ஃபார்ம் அவுசிற்கு அழைத்துச் செல்கிறான்.

பிறகு அதிதிக்கு ஜூஸில் ஆல்கஹாலை கலந்து கொடுத்து மயங்க வைத்து அதை வைத்து மதுமிதாவை பழி வாங்கலாம் என திட்டமிட்டு ஜூஸில் சரக்கை கலக்கிறான். அதை அதிதியிடம் கொடுக்க அதிதி அதை குடிக்க மறுக்கிறாள்.

இங்கே ரேணுகா அதிதியை இன்னும் காணவில்லை என அபிஷேக்கிற்கு போன் போட்டு விசாரிக்க சொல்ல மதுமிதா அபிஷேக்கிற்கு போன் செய்ய போனை எடுக்கிறாள். இப்படியான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, அதிதி ஜூஸ் வேண்டாம் என்று சொல்லி கொண்டிருக்க அபிஷேக் குடிக்க சொல்லி கொண்டிருக்க யாரும் எதிர்பாராத விதமாக அங்கு அபிஷேக்கின் தம்பி ராகுல் வந்து நிற்கிறான். நீங்க இங்க என்ன பண்றீங்க என்று கேட்க உங்க அண்ணன் தான் அழைத்து வந்ததாக சொல்கிறாள் அதிதி.

பிறகு ராகுல் அதிதிக்கு கொடுக்க அபிஷேக் ரெடி பண்ண ஜூஸை எடுத்து குடித்து விடுகிறான். அபிஷேக் வேலை இருப்பதாக சொன்னதால் அதிதியை நான் டிராப் பண்ணி விடுகிறேன் என்று சொல்ல அபிஷேக் வேண்டாம் என்று மறுக்கிறான். ஆனால் ராகுல் நீங்க வேலையை பாருங்க என்று சொல்லி அதிதியை அழைத்து கொண்டு கிளம்புகிறான்.

வரும் வழியில் ராகுலுக்கு போதை ஏற தொடங்க அவன் காரை தாறுமாறாக ஓட்டுகிறான். ஒரு வழியாக வீடு வந்து சேர அதிதி ராகுலை வீட்டிற்கு கூப்பிட ராகுலை பார்த்த மாயா அவன் குடித்து இருப்பதை புரிந்து கொள்கிறாள். அதே நேரத்தில் அவனுக்கு குடிக்கும் பழக்கம் இல்லாததால் இது எப்படி நடந்தது என்று குழப்பம் அடைகிறாள்.
மதுவும் கௌதமும் வீட்டிற்கு வர மாயா உண்மையை மறைக்க முயற்சிக்கிறாள். ராகுலின் நடவடிக்கையை பார்த்து கௌதமுக்கு சந்தேகம் வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.












Click it and Unblock the Notifications