நெஞ்சத்தை கிள்ளாதே: சகுந்தலாவுக்கு ஷாக் கொடுத்த உயில்.. கௌதம் கொடுத்த ஏமாற்றம் - இன்றைய எபிசோட்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிஷேக் பணத்தை எடுத்தது நான்தான் என ஒப்புக்கொள்ள சகுந்தலா அவனைத் திட்டிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது அபிஷேக் நான் தப்பை கண்டுபிடிக்க முடியாது போல சரியாகத்தான் பண்ண ஆனா அந்த சந்தோசம் எல்லாத்துக்கும் காரணம் அவனை சும்மா விடக்கூடாது என்று ஆவேசப்படுகிறான்.

அதைத் தொடர்ந்து கௌதம் வீட்டுக்கு வர சகுந்தலா அக்கௌன்ட் டிபார்ட்மெண்ட்ல ஆள் இல்லாம தானே இருக்கு ஒரு ஆளை எடுக்கலாம் என்று சொல்ல கௌதம் சரி என்று சம்மதம் சொல்லி அபிஷேக் அந்த வேலையை நீயே பார்த்துக்க என்று சொல்கிறான். பிறகு கொஞ்ச நேரத்தில் கௌதம் நீ வேண்டாம் சந்தோஷிடம் சொல்லி பார்த்துக் கொள்கிறேன் என்று ஏமாற்றத்தை தருகிறான்.

அதன் பிறகு லாயர் கௌதமுக்கு போன் செய்து உங்களிடம் ஒரு டாகுமெண்ட்டை கொடுக்க வேண்டும் என்று சொல்லி வீட்டிற்கு வருகிறார். வீட்டுக்கு வந்த லாயர் உயில் ஒன்றை படிக்க அதில் கௌதமின் தாத்தாவுக்கு அந்த கால அரசர் ஒருவர் கொடுத்த நகையை கௌதம் கல்யாணத்திற்கு பிறகு அவனது மனைவிக்கு தான் கொடுக்க வேண்டும் என எழுதி இருக்க சகுந்தலா ஷாக் ஆகிறாள்.

இந்த வீட்டோட மூத்த மருமகள் நான் இருக்கும் போது அவளுக்கு எப்படி தரலாம் என கோபம் கொள்கிறாள். மேலும் பாட்டி கொலு வைக்கும் போது மதுமிதா கழுத்தில் இந்த நகையை போட்டு விடலாம் என தனது முடிவை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.












Click it and Unblock the Notifications