நெஞ்சத்தை கிள்ளாதே: முதலிரவு அறையில் கௌதமால் ஷாக்கான மதுமிதா.. காரணம் என்ன?
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் கௌதம் மற்றும் மதுமிதா ஆபிஸ் சென்று இருக்க விஜிலென்ஸ் ஆபீஸர்ஸ் சோதனையிட வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது கௌதம் மற்றும் மதுமிதா என இருவருக்கும் சந்தோஷ் ஹோட்டலில் முதலிரவுக்கான ஏற்பாடுகளை செய்து வைக்கிறார். பிறகு கௌதமுக்கு போன் போட்டு முதலிரவு பற்றி பேசி அவனை கலாய்க்கிறார்.

இந்த சமயத்தில் போன் கீழே விழுந்து ஸ்பீக்கர் ஆன் ஆகிவிட சந்தோஷ் முதல் இரவு பற்றி பேசி கலாய்ப்பதை மதுமிதா மற்றும் கௌதம் என இருவரும் கேட்டு வெட்கப்படுகின்றனர். அதன் பிறகு ஹோட்டலுக்கு வந்த கௌதம் நீ பேசினது எல்லாம் மது கேட்டுட்டா என்று சொல்கிறான்.
பிறகு இருவரையும் முதல் இரவு அறைக்குள் அனுப்பி வைக்க இருவரும் தயக்கத்தோடு என்ன பேசுவது என தெரியாமல் நிற்கின்றனர். பிறகு கௌதம் உனக்கு ஏதாவது ஆர்டர் பண்ணட்டுமா என்று கேட்க மது வேண்டாம் என்று சொல்ல இல்ல நான் ஏதாச்சு ஆர்டர் பண்றேன் என்று சொல்லி பிளாக் டீ ஆர்டர் செய்கிறான்.

பிறகு முதல் இரவு அறையில் இருந்த கேக்கை வச்சக்கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அந்த பக்கத்தில் நின்று கொண்டிருந்த மது தன்னை தான் கௌதம் பார்ப்பதாக நினைத்து ஏன் அப்படி பாக்குறீங்க என்று கேட்க, நான் உங்களை பார்க்கல இந்த கேக்கை தான் பார்த்தேன் என்று கேக் பக்கத்தில் வருகிறார்.
பிறகு அங்கிருந்த கேக்கில் கொஞ்சம் எடுத்து மதுவிற்கு ஒரு கிண்ணத்தில் கொடுத்துவிட்டு மீதம் இருந்த கேக்கை கௌதம் ரசித்து சாப்பிடுகிறார். கௌதம் கேக் சாப்பிடுவதை மது பார்த்துக் கொண்டே இருக்கிறார். அப்போது கௌதம் கேக்கை சாப்பிடும் போது எனக்கு என்ன தோணுது தெரியுமா? இந்த கேக்கை கடவுள் படைச்சது எனக்காக தான்னு தோணுது என்று வாரி வாரி சாப்பிட அதை பார்த்து மதுவிற்கு வாந்தி வருவது போல இருக்கிறது.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.












Click it and Unblock the Notifications