சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்து “சொதப்பல்”.. இதை கூட கவனிக்கலையா? இதை எப்படி மறந்தாங்க?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு சில நாட்களாகவே கதையில் சில சொதப்பல்கள் இருந்து வருகிறது. அதை குறித்து ரசிகர்கள் இணையத்தில் அதிகமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில் சீரியலின் சுவாரசியமும் இப்போது குறைய தொடங்கி இருப்பதாகவும் பலரும் கருத்து கூறி வருகிறார்கள் அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்படும் சீரியலாக சிறகடிக்க ஆசை சீரியல் இருந்து வருகிறது. அதனாலையே இந்த சீரியல் டிஆர்பியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் முதலிடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் இந்த சீரியல் டாப் 10 வரிசையில் மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது. ஆனாலும் இதில் ஒரு சில சொதப்பல்கள் இருப்பது தான் ரசிகர்களை உறுத்திக் கொண்டிருக்கிறது.

அதாவது சில தினங்களுக்கு முன்பு மனோஜிடம் இருந்து ஜீவா 27 லட்சம் பணத்தை ஏமாற்றிக் கொண்டு போயிருந்த நிலையில் அவரை ரோகிணி மற்றும் மனோஜ் கண்டுபிடித்து இருந்தனர். அப்போது போலீஸ் ஸ்டேஷனில் வைத்து ஜீவாவை விசாரித்ததும் ஜீவா இவர்கள் கேஸ் கொடுத்தால் நம்மால் மீண்டும் கனடா போக முடியாது என்று வக்கீல் மிரட்டியதால் ஏமாற்றிய பணத்தை மனோஜ்க்கு தரேன் என்று சொல்லி இருந்தார்.
அப்போது ரோகிணி 27 லட்சத்திற்கு வட்டியோடு சேர்த்து 30 லட்சம் வேண்டும் என்று சொல்ல வேறு வழி இல்லாமல் ஜீவாவும் சரி என்று சொல்லி இருந்தார். ஆனால் 30 லட்சம் ரூபாயும் ஒரே நேரத்தில் மனோஜ்க்கு ஜீவா போனிலே மாற்றி விட்டார் என்பது போல கதையை வைத்திருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அது எப்படி ஒரே நேரத்தில் போன் மூலமாகவே 30 லட்சம் ட்ரான்ஸ்பர் செய்ய முடியும்? என்பது பலருடைய கேள்வி.
அதற்கு இன்னும் விடை கிடைக்காமல் இருக்கும் நிலையில் அதே நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஜீவாவை கான்ஸ்டபிள் வெளியே கூட்டிட்டு வரும்போது முத்து மற்றும் மீனா வெளியே நின்று கொண்டிருப்பார்கள் அப்போது ஜீவாவிற்கு சாட்சி கையெழுத்து முத்து தான் போடுவார். அந்த இடத்தில் ஜீவாவை மீனா பார்ப்பார். ஆனால் ஏற்கனவே மீனா மற்றும் மனோஜ்க்கு எங்கேஜ்மென்ட் நடக்கும் போது ஜீவா மனோஜின் பிரண்ட் என்று பங்க்ஷனில் கலந்து கொண்டு இருந்தார்.
அப்போது எடுத்த புகைப்படங்களை இப்போது வெளியிட்ட ரசிகர்கள் மீனாவுக்கு ஜீவாவை மறந்து விட்டதா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில் சரி மீனாதான் அன்று மணப்பெண்ணாக இருந்தார் பங்க்ஷனில் பல பேர் கலந்து கொண்ட நேரத்தில் ஜீவாவின் முகத்தை ஞாபகம் வைத்திருக்க முடியாது. ஆனால் ஜீவா அன்று மீனாவை பார்த்தவர் தானே? அப்போ இது மனோஜ்க்கு பார்த்த பொண்ணு என்பது ஜீவாவுக்கு ஞாபகம் வரவில்லையா? என்றும் சிலர் மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.
அதுபோல இன்றைய எபிசோடில் ரோகிணி தன்னுடைய அப்பா ஜெயிலுக்கு போவதற்கு முன்பு 15 லட்சம் ரூபாயை மாமாவிடம் கொடுத்து எனக்கு அனுப்ப சொல்லி இருந்தார் என்று சொல்லி இருப்பார். அப்போது முத்து 15 லட்சம் ரூபாயை உங்க மாமா வரும்போது கொண்டு வந்திருக்கலாமே என்று கேட்க, அதற்கு ரோகிணி பிளைட்ல எல்லாம் அவ்வளவு பணம் கொண்டு வர முடியாது என்று கூறுகிறார்.
அதே நேரத்தில் பிளைட்ல ஒழுங்காக கணக்கு வைத்திருந்தால் எத்தனை கோடி வேண்டும் என்றாலும் கொண்டுட்டு வரலாம் என்பது இயக்குனருக்கு தெரியாதா? பிளைட்ல மட்டும் அவ்வளவு பணம் கொண்டு வர முடியாத போது மொபைல் டிரான்ஸ்பர் மட்டும் எப்படி செய்ய முடியும்? கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல் கதை போகிறது என்று சில விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு சீரியல்களில் எப்படி காட்சிகள் எடுத்திருந்தாலும் அதை குறித்து ரசிகர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் இப்போது சமூக வலைத்தளம் என்று ஒன்று வந்த பிறகு ஒவ்வொரு காட்சிகளையும் உன்னிப்பாக ரசிகர்கள் கவனித்து தங்களுடைய கேள்விகளோடு இணையத்தில் போஸ்ட் போட்டு விடுகிறார்கள். அதனால் கதை எழுதுபவர்கள் மற்றும் இயக்குனர்கள் மிகவும் கவனமாக எழுத வேண்டும் என்று சிலர் அட்வைஸும் கொடுக்கிறார்கள்.
அதே நேரத்தில் இன்னும் ஒரு சில ரசிகர்கள் இந்த சீரியலையே நாங்கள் முத்து மற்றும் மீனாவிற்காக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் ரோகிணி இந்த சீரியலில் மாட்டாமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவருக்கு மட்டும் இயக்குனர் பாரபட்சம் காட்டுகிறார். முத்து மற்றும் மீனா இந்த வீட்டில் வேலைக்காரர்களாகவே இருக்கிறார்கள்.
அவர்கள் இருவருக்கும் அதிகமான காட்சிகளின் முக்கியத்துவமும் இப்போது சில நாட்களாக இல்லை என்றும் ரசிகர்கள் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் சீரியலை சீரியஸாக யோசிக்காமல் அந்த நேரத்தை கடத்துவதற்காக எடுத்துக் கொண்டால் ரசிகர்கள் தங்களுடைய பொன்னான நேரத்தை இப்படி சீரியலில் பல வருடங்களுக்கு முன்பு உள்ள காட்சிகளோடு தொடர்பு படுத்த மாட்டார்கள் என்றும் சில சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
பிரேம்ஜியுடன் காதலா? 40 வயது வரை அவர் கல்யாணம் பண்ணாத காரணம்.. ஓபனாக பேசிய சோனா! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications