வளைந்து நெளிந்து...அடடா அது மட்டும் தனியா தெரியுது..காவியாவால் கலங்கிப் போன ரசிகர்கள்!
சென்னை : 'பச்சை நிறமே பச்சை நிறமே' என்று பச்சை வண்ணத்தில் ரசிகர்களின் மனதை பச்செக் என்று கவர்ந்து விட்ட காவியா அறிவுமணியை கலாய்க்கும் ரசிகர்களின் கூட்டம் இன்ஸ்டாகிராமில் அலை மோதுது.
எப்போதுமே ஒரே போஸில் நிற்கிறீர்களே கால் வலிக்கலையா... என்று ரசிகர்களின் கருணை சும்மா ஆறாக ஓடுது.
அதுவும் சைடு போஸில் மட்டுமே தரிசனத்தை கொடுக்கிறீர்களே புதுசா கொஞ்சம் ட்ரை பண்ணலாமே என்று ரசிகர்களின் அன்புத் தொல்லை கொஞ்சம் அதிகமாகத்தான் இன்று பொங்குகிறது.

புடவையில் சாச்சுப்புட்டாரே
புடவையில் வந்தாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்த காவியா அறிவு மணியைப் பார்த்து ரசிகர்களின் கமெண்ட்கள் அலைமோதுகிறது. இப்படியே பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல அந்த அளவிற்கு தன்னுடைய அழகான அழகை காட்டி அனைவருக்கும் புத்துணர்வு ஊட்டி இருக்கும் பாண்டியன் ஸ்டோர் முல்லை அவருடைய ரசிகர்களை கவர்ந்து விட்டார். அதுவும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பலோவர்ஸ் வந்ததற்காக பச்சை புடவையில் வந்து ரசிகர்களின் கண்களுக்கு குளுமையை கொடுத்திருக்கிறார். அவருடைய இந்த போட்டோவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசிக்கிறார்களாம். ரசிகர்கள் விழுந்ததில் சில இடங்களில் பெரிய பெரிய பள்ளங்கள் தோன்றிவிட்டது என்று...இப்படிலாம் கம்பி கட்ர கதையெல்லாம் ரசிகர்கள் அடிச்ச விடுகிறார்கள்.

முல்லையாக வாசம் கொட்டுது
ரசிகர்கள் என்னதான் கமெண்டுகளை கொட்டினாலும் சரி காவியாவிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை, என்றாலும் அவர்களுடைய கடமையை தவறாமல் செய்து முடிக்கிறோம் என்பதில் குறியாக இருக்கிறார்கள். ரசிகர்களின் பேராதரவினால் இன்ஸ்டாகிராமில் லைக் பட்டன் தெரிக்கிறது. அதுவும் தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இந்த வார எபிசோடுகளில் கண்ணன், ஐஸ்வர்யா ஜோடிக்கு இவர் தன்னுடைய அப்பாவிடம் பேசி அடைக்கலம் கொடுத்ததை பார்த்து அவருடைய ரசிகர்கள் எல்லாமே ரொம்பவே பீல் ஆகிவிட்டனர். நம்ம முல்லையோட மனசு யாருக்கு வரும் என்று இவருடைய புகழைப் பாடுகின்றனர். சீரியலில் முல்லை கேரக்டரில் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டார்.

அந்த மனசு புடிச்சிருக்கு
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் இவருடைய பெயர் காவியா அறிவுமணி என்பதையே பலருக்கு தெரியவில்லையாம். அந்த அளவிற்கு இவர் முல்லை ஆகவே ஆகிவிட்டாராம். அதனால்தான் இவர் வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் இவரை பார்த்து இவருடைய ரசிகர்கள் எல்லாம் முல்லை என்றுதான் செல்லமாக அழைத்து வருகிறார்கள். இதனைப் பார்க்கும்போது காவியாவிற்கும் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது என கூறியிருக்கிறார். தற்போதைய இவருடைய போஸ்டுக்கு கூட பல ரசிகர்கள் அழகாக இருக்கிறது முல்லை அக்கா, என்று பலர் உருகி உருகி கமெண்டுகளை போட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல ரசிகர்கள் இவருக்கு ஒரு மில்லியன் பாலோவர்ஸ் வந்ததற்கு வாழ்த்துக்களை கூறி இன்னும் 100 மில்லியன் பாலோவர்ஸ் வரவேண்டுமென்று வாழ்த்துக்களை பொழிகிறார்கள்.

கண்ணாலே கவிதையா! ?
அதுமட்டுமல்லாமல் சில ரசிகர்கள் கவிதை மழைகளையும் கொட்டோ கொட்டென்று கொட்டி இருக்கிறார்கள். இவருடைய போஸ்டுக்கு ரசிகர்களின் கவிதைகளை பார்க்கும்போதே இவரால் பல ரசிகர்கள் கவிஞர்களாக மாறிவிடுவார்கள் என்று தோன்றுகின்றது. அந்த அளவிற்கு உறுகி இருக்கின்றார்கள். பல சுட்ட கவிதைகளும், சிலர் சுடாத கவிதைகளையும் சுடச்சுட போட்டிருக்கின்றனர். அதிலேயும் ஒரு கவிஞர் இவருக்கு ஒரு பக்கத்துக்கு கவிதையை கொட்டியிருக்கிறார். அதில், 'ஓடுவது நீ என்றால் உன்னை துரத்திக் கொண்டே இருப்பேன்.... அழுவது உன் கண்கள் என்றால் கண்ணீராய் நான் வழிவேன்...நடப்பது உன் பாதம் என்றால் தரை விழிப்பாய் நான் கிடப்பேன்..உறங்குவதற்கு நீ சென்றால் குளிர் நிலவாய் தாலாட்டுவேன்...விழிக்க நீ தயாரானால் அந்த விடியலாய் நான் வருவேன்...நீ பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நான் இருப்பேன்...நீ வாசிக்கும் ஒவ்வொரு வரியிலும் வார்த்தையாய் நான் இருப்பேன்...நீ உடுத்தும் ஆடைகளிலும் கூட வண்ணங்களாய் நான் வாழ்வேன்...வாழ்வதற்கு நீ விரும்பினால் உன் வாழ்க்கையை நான் வருவேன்...உன் ஒற்றை வார்த்தைக்காக சம்மதம் சொல்வாயா பெண்ணே...'என்று காதல் கவிதைகளை அனுப்பியிருக்கிறார்.

சீக்கிரத்தில் அது நடந்துவிடும் போல
அதுமட்டுமில்லாமல் இன்னோரு ரசிக்கர் நேரா நின்னு போஸ் கொடுங்க எப்போதுமே சைடு போஸ் கொடுத்து எங்களின் தூக்கத்தை கெடுக்காதீங்க என்று கெஞ்சியிருக்கிறார். மற்றொரு ரசிகரோ பச்சை நிறத்தில் பச்சை குத்தி விட்டாரே என்று ரொம்பவே பீல் பண்ணியிருக்கிறார். இப்படி ரசிகர்கள் ஒவ்வொருவராக பீல் பண்ணி கமெண்டுகளை அனுப்புவதை பார்க்கும்போது சீக்கிரத்தில் இவருக்கு அந்த 100 மில்லியன் பாலோவர்ஸ் வந்துவிடும் போலயே..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications